உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பு எஸ்.ஐ., கொலை வழக்கு; கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சிறப்பு எஸ்.ஐ., கொலை வழக்கு; கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

திருப்பூர்: சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.திருப்பூர் மாவட்டம் உடுமலை சிக்கனுாத்து கிராமத்தில், மடத்துக் குளம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, 60, அவரது மகன் தங்கபாண்டியன், 25, ஆகியோர் வேலை பார்த்தனர். இவர்களை பார்க்க, மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன், 30, சிக்கனுாத்து வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=joq2hg74&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மது அருந்திய பின், தந்தை, மகன்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. மூவரும் அரிவாளை கையில் வைத்துக் கொண்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஒருவரை ஒருவர் தாக்க முயற்சித்தனர். அங்கு சென்ற பண்ணை மேலாளர் ரங்கசாமி, குடிமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

வாக்குவாதம்

சம்பவ இடத்துக்கு குடிமங்கலம் எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல், 57, போலீஸ் காரர் அழகுராஜா ஆகியோர், நெடுஞ்சாலை ரோந்து ஜீப்பில் சென்றார். அப்போது, மணிகண்டன், அங்கிருந்தவர்களை தாக்க முயற்சித்துள்ளார். அவருடன் மூர்த்தி, தங்கபாண்டியன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல், போலீஸ்காரர் அழகுராஜா மற்றும் பண்ணை மேலாளர் ரங்கசாமி அங்கிருந்து தப்பியோடினர்.

சிறப்பு எஸ்.ஐ உயிரிழப்பு

தென்னந்தோப்புக்குள் இருட்டாக இருந்ததால், எஸ்.எஸ்.ஐ., சண்முகவேலால் நீண்ட துாரம் ஓட முடியவில்லை. அவரை விரட்டிச் சென்ற மணிகண்டன், அரிவாளால் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே சண்முகவேல் இறந்தார். பின்னர் மூர்த்தி, தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகிய மூவரும் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர் மூர்த்தி, தங்கபாண்டியன் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தனர்.

என்கவுன்டர்

தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த சூழலில் இன்று காலை சிக்கனுாத்து கிராமத்தில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார். பின்னர் மணிகண்டன் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறப்பு எஸ்.ஐ., கொலை வழக்கில், கொலையாளி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.கொல்லப்பட்ட மணிகண்டன் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டன் தாக்கிய போது காயமடைந்த குடிமங்கலம் எஸ்.ஐ.,சரவணகுமார் உடுமலை அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சைகாக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

aaR Kay
ஆக 07, 2025 15:54

போலீஸ் சீருடையில் இருந்தவரை கொன்றவனை என்கவுண்டர் செய்தது சரியே. அஜித்குமாரை அடித்து கொன்ற காவலர்களை எப்போது என்கவுண்டர் செய்வீர்கள்.


p karuppaiah
ஆக 07, 2025 14:30

இது உங்களுக்கு நடக்கும்போது அதன் வழி தெரியும். அவனை உடனே சுட்டு தள்ள வேண்டும் இதற்கு எதுவும் ஜஸ்டிபிகேஷன் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை .


சத்யநாராயணன்
ஆக 07, 2025 13:34

ஒரு குடும்பத்தையே கொலைகார குடும்பம் ஆக்கிய சாராயம் விற்கும் அரசாங்கத்தை யார் தண்டிப்பது பாவம் இனி அந்தக் குடும்பத்திற்கு யார் தான் ஆதரவு சாராயத்தினால் எத்தனையோ குடும்பங்கள் இதுபோல் நாசமாகிக் கொண்டிருக்கின்றன வெட்கம் இல்லாத அரசாங்கம்


P. SRINIVASAN
ஆக 07, 2025 14:23

உங்க UP இல், குஜராத்தில், பிஹாரில், ராஜஸ்தானில், டெல்லில், MP இல், கோவில், மஹாராஷ்டிராவில், இப்படி பல மாநிலங்களில் மது விற்பது dmk அல்ல.. இந்த வந்தேறிகளின் வயித்தெரிச்சல் பிஜேபியை சாரும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 07, 2025 14:50

திமுகவின் எடுப்பே ...... நாங்கள் எங்கள் மாநிலத்தைப்பற்றி மட்டும்தானே கவலைப்பட முடியும் >>>>


Jack
ஆக 07, 2025 14:52

பொருளாதார ரீதியில் தமிழகத்தை விட மிக குறைந்த வருவாயுள்ள பீகாரில் பெண்கள் கோரிக்கை ஏற்று நிதிஷ் குமார் மதுவிலக்கை அமல் படுத்தியுள்ளார் .டில்லி மகாராஷ்டிரா கர்நாடக மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அரசாங்கமே மது விற்பனை செய்வதில்லை .தமிழகத்தில் அரசாங்கமே மது விற்பனை ..பாப்புலர் பிராண்டுகள் கிடைக்காது ..காக்கா குரங்கு பிராண்டுகள் தான் தலையில் கட்டுவார்கள்


BALAMURUGAN G
ஆக 07, 2025 15:23

பி ஸ்ரீனிவாசன் பாரத தேசத்தின் எந்த மாநிலத்திலும் ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நேரடியாகவோ, மறைமுகமாவோ மது ஆலைகள் நடத்தி, உற்பத்தி செய்யும் மதுவை அரசுக்கே மொத்த விற்பனைச் செய்து, அந்த மதுவை மாநில அரசே நேரடியாகச் சாமானிய மக்களுக்கு சில்லறை விற்பனை செய்யும் கேவலம் நடப்பது இல்லை. மது விற்பனை மூலம் அரசாங்க கஜானாவை நிரம்பும் முன்பே தங்கள் குடும்ப கஜானாவை நிரப்பிக் கொள்ளும் விஞ்ஞானக் கொள்ளை உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒன்று இந்த குடும்ப அரசியல்வியாதிகளின் வாரிசுகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்... அவர்களுக்கு வாய்த்து உள்ள பரம்பரைக் கொத்தடிமைகள் எஐமான விசுவாசம் காட்டுவதில் மிகவும் வித்தியாசமானவர்கள் கலி முற்றிவிட்டது, வேறு என்ன சொல்வது


Shekar
ஆக 07, 2025 15:53

உபி, பீகார் ....மாநிலங்களில் அரசே ஊற்றி கொடுப்பதில்லை


RAMAKRISHNAN NATESAN
ஆக 07, 2025 13:26

என்னென்ன ரகசியங்கள் மணிகண்டனுக்குத் தெரிந்ததால் அவர் முடித்து வைக்கப்பட்டார் ?


KRISHNAN R
ஆக 07, 2025 13:19

சரி சட்டம் கடமை செய்யும் போல


lana
ஆக 07, 2025 13:14

டாஸ்மாக் சரக்கு அடித்த ஒருவன் ஓட முடியும் ஆனால் சரக்கு அடிக்காத போலீஸ் ஆல் ஓட முடியவில்லை. எனவே டாஸ்மாக் ஒரு சத்துணவு. அனைவரும் வாங்கி பருகினால் உடல் நலம் உறுதி. நம்புங்கள்.


Raja k
ஆக 07, 2025 13:11

ஒரு கொலைக்கு இன்னொரு கொலைதான் காரனமா? மரன தண்டனையே கூடாது என கொடி பிடிக்கும் மக்கள் இந்த என்கவுன்டரை எப்படி வரவேற்கிறார்கள்? கேரளா நர்ஸ் கொலை செய்ததுக்கு அரபு நாட்டில் மரன தண்டனை விதிகபட்டுள்ளது, அய்யோ பாவம் அவரை மீட்டு கொண்டு வர வேண்டும் என இந்திய அரசாங்கம் எத்தனை கோடிகள் இழப்பீடு தரவும், பேச்சு நடத்தவும் செய்கிறது, ஆனால் இங்கே எதுவுமே கேள்வியில்லாமல் சுட்டு கொலை, இதுதான் தீர்வா? பல்வேறு குற்ற தொடர்புடையவர்களை வேலைக்கு வைத்த அதிமுக எம் எல் ஏ நல்லவர், அவரோட தோட்டத்துல நடந்த கொலைக்கு அவருக்கு பொறுப்பு தொடர்பு இல்லை, ஆனால் திமுக அரசு மோசம், எப்படி எடபாடியால் இப்படி பேச முடிகிறது, அப்போ கொலைகாரங்களை வளர்த்து விடுவது அதிமுக அப்படிதானே, ஓடவே முடியாத நபர் காவல் அதிகாரி, அவர் வல்லவர், சாலையில் ரோந்து என்ற பெயரில் மக்களிடம் எவ்வளவு காசு பிடுங்குறார்கள் இந்த காவல்துறை,


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 08, 2025 06:00

அண்ணாமலை பாஜக தலைவர்ன்னு ஊருக்குள்ளே இருந்த எல்லா பணமோசடிக்காரர்களையும், ரவுடிகளையும் கட்சியிலே சேர்த்து பதவி கொடுத்து, அழகு பார்த்து, செமையாக கல்லா கட்டினார்


V RAMASWAMY
ஆக 07, 2025 13:03

வெரி குட். ஆனால், எஸ் ஐ சம்பந்தப்பட்ட வழக்கு என்றதும் உடனடி நடவடிக்கை எடுப்பது போல் பொது மக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஏன் நடவடிக்கைகள் தாமதமாகின்றன?


Tiruchanur
ஆக 07, 2025 12:11

நல்லது. முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். இப்படி செய்தால் தான் எல்லோருக்கும் பயம் வரும்


M Ramachandran
ஆக 07, 2025 11:56

ஆ தி மு கா ரவுடி ஆளும் கட்சியென்றால்சிறப்பு பாதுகாப்பு கொடுத்திருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை