சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக மதுரை வழியாக சிறப்பு ரயில்
மதுரை: சபரிமலை சீசன் துவங்கவுள்ள நிலையில் தென்மாவட்ட ஐயப்ப பக்தர்களுக்காக மதுரை வழியாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சபரிமலையில் இந்தாண்டுக்கான மண்டல பூஜை நவ., 16 முதல் டிச., 27 வரை நடக்கிறது. 2026 ஜன.,14ல் மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதனை முன்னிட்டு நவ., 20 முதல் ஜன., 15 வரை வியாழன் தோறும் மகாராஷ்டிரா மாநிலம் ஹஜூர் சாஹிப் நந்தெத்தில் இருந்து காலை 10:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07111) சனிக்கிழமை அதிகாலை 3:00 மணிக்கு கொல்லம் செல்லும். மறுமார்க்கத்தில் நவ., 22 முதல் ஜன., 17 வரை சனிதோறும் அதிகாலை 5:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07112) ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஹஜூர் சாஹிப் நந்தெத் செல்லும். புனலுார், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளை யம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்துார், திருப்பதி வழியாக செல்கிறது. 2 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 8 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள், ஒரு சரக்கு பெட்டி, ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு துவங்கியது.