வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஊழல் செய்து திருடி நக்கி திங்காமல் இருந்திருந்தால் போக்குவரத்து துறை லாபத்தில் இயங்கியிருக்கும் திருடுவதையே லட்சியமாக கொண்ட 2 திருட்டு முன்னேற்றக் கழகங்களும் நாசமாக புளுத்து மண்ணோடு மண்ணாக மக்கி நிர்மூலமாக போக வேண்டும்
சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில், 30,000 விபத்துகள் ஏற்படுத்திய 3,000 ஓட்டுநர்களுக்கு, சாலை விபத்துகளை தவிர்ப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், தினமும் 20,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநர், நடத்துநர் உட்பட மொத்தம் 1.23 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். போக்குவரத்து கழகங்களில், 6,000க்கும் மேற்பட்ட பஸ்கள் பழமையாக இருக்கின்றன. பழைய பஸ்களில், அடிச்சட்டம், பாடி உதிரி பாகங்கள், இருக்கைகள், ஜன்னல்கள், மேற்கூரை பழுது ஏற்பட்டு, விபத்து ஏற்படுகிறது. சில நேரங்களில், ஓட்டுநர்களின் கவனக்குறைவும் முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, தமிழகம் முழுதும் 30,000 விபத்துகளை ஏற்படுத்திய 3,000 ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, அரசு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, பணியில் சேர்ந்து, 10க்கு மேல் விபத்துகள் ஏற்படுத்திய ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: பணியில் சேர்ந்த நாள் முதல், தற்போது வரை, சிறிய மற்றும் பெரிய விபத்துகள் என, தலா, 10 விபத்துகளை ஏற்படுத்திய 3,000 ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக, 'விபத்து அறிக்கை' காண்பிக்கப்பட்டு, எப்படி செயல்பட்டிருந்தால், விபத்தை தவிர்த்திருக்கலாம் என அறிவுரைகள் வழங்கப்படும். அரசு பஸ்களில், விபத்து இல்லாத பயணத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊழல் செய்து திருடி நக்கி திங்காமல் இருந்திருந்தால் போக்குவரத்து துறை லாபத்தில் இயங்கியிருக்கும் திருடுவதையே லட்சியமாக கொண்ட 2 திருட்டு முன்னேற்றக் கழகங்களும் நாசமாக புளுத்து மண்ணோடு மண்ணாக மக்கி நிர்மூலமாக போக வேண்டும்