உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவம்பரில் 4 நாட்களுக்கு வாக்காளர் சிறப்பு முகாம்

நவம்பரில் 4 நாட்களுக்கு வாக்காளர் சிறப்பு முகாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் நான்கு நாட்கள், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பரில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும். அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியை, கடந்த மாதம் 20ம் தேதி துவக்கினர். வரும் 10ம் தேதி வரை இப்பணி நடக்க உள்ளது.இம்மாதம் 29ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் நவம்பர், 28ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம். இதற்கான சிறப்பு முகாம், நவம்பர், 9, 10, 23, 24 என, நான்கு நாட்கள் நடத்த தேர்தல் கமிஷன் அனுமதி அளித்து உள்ளது. அந்த நாட்களில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை செய்யவும், மக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கடிதம் எழுதி உள்ளார்.அடுத்த ஆண்டு ஜன., 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

GMM
அக் 06, 2024 07:58

தற்போது இட பெயர்வு அதிகம். தேர்தல் நடைமுறை அமுல் 3 மாதம் என்று மாற்றலாம். அப்போது தகுதி பெற்ற வாக்காளர்கள் ஆன்லைன், காகிதம், மற்றும் தேவையான அத்தாட்சி கொண்டு தாங்களே வாக்காளர் எண் பெற்று அந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் அந்த வாக்காளர் அட்டை செல்லாது. இதில் வாக்கு பதிவு அதிகரிக்கும். கட்சிகள் ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கிறது. தடுக்க ஆக்கிரமிப்பு வாக்காளர் ஓட்டுரிமை பெற ஆளும் கட்சி, எதிர்கட்சி ஒப்புதல் தேவை. மாவட்ட தேர்தல் அதிகாரி உருவாக்கி, மாநில தேர்தல் ஆணையம் கலைக்க பட வேண்டும்.


சமீபத்திய செய்தி