உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி மலரும்: அண்ணாமலை நம்பிக்கை

தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி மலரும்: அண்ணாமலை நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை; ''தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி மலரும்; சனாதன தர்மம் காக்க சன்னியாசிகளுடன் பயணிப்பேன்,'' என, பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின், 31வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில், சமூக சேவகர்கள், 13 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து, விழா மலர் வெளியிடப்பட்டது. இதில், பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: எல்லா இடங்களிலும், எல்லா விஷயங்களையும் எடுத்து செல்லக்கூடிய துணிவு ஆதினங்களுக்கு உள்ளது. ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் வரக்கூடிய குரு பவுர்ணமி அன்று வட இந்தியாவில், இரவு குறைவாகவும், பகல் அதிகமாகவும் இருக்கும். இயற்கையாகவே இந்த குரு பவுர்ணமி ஒரு விசேஷமான நாள்தான். இந்நாளுக்கு பிறகு நிறைய மாற்றங்கள் நடக்கும். எனவே, இந்நாளில் குருவிடம் அருளாசி பெறும்போது, இன்னும் நல்ல மனிதர்களாக, நம்முடைய ஆன்மிகத்தை விரிவாக பார்க்கக்கூடிய மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது.மிக மிக குறைவாக மூச்சு விடுகின்ற ஆமைக்கு ஆயுள் அதிகம். பிராண ரகசியத்தை யார் உணர்ந்து கொள்கின்றனரோ, அவர்களுக்கு ஆயுள் அதிகம் என்பதை மிகத்தெளிவாக, ஆமை போன்ற ஜீவராசிகளை பார்க்கும் பொழுது நமக்கு தெரியும். பூக்களால் நாம் செய்யக்கூடிய பூஜைகள், மணியின் வாயிலாக வரக்கூடிய ஓசைகள், தீபாரதனை வாயிலாக வரக்கூடிய வெப்பம் என, இவை அனைத்தும் ஜீவசமாதியில் இருக்கக்கூடியவர்களின் ஆன்மா இன்னும் வீரியமாகவும், பிரகாசமாகவும் இருக்க காரணமாகிறது.எனவே, எங்கெல்லாம் நம்முடைய பெரியவர்கள் இருக்கின்றார்களோ, அங்கே முறையான பூஜைகள், நம்முடைய வழிபாடுகள் செய்ய வேண்டும். ராஜாவாக இருந்தாலும், சன்னியாசிக்கு முன் தரையில்தான் அமர வேண்டும்.இந்நாட்டில் ராஜா, முதலமைச்சர் என யாராக இருந்தாலும் சன்னியாசிகள் முன், என்று தரையில் அமர ஆரம்பிக்கிறார்களோ, அன்றுதான் உண்மையான ஆன்மிக ஆட்சி வந்துவிட்டது எனலாம். தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி அமையும். இது நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன், சனாதன தர்மம் காக்க சன்னியாசிகள் உடன் பயணிப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.முன்னதாக, காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பேசுகையில்,''குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை. குரு இல்லாமல் கடவுளை காணமுடியாது. அறியாமையை விலக்க குரு அவசியம். எனவே, குருவின் ஆசி பெறுவதன் வாயிலாக வாழ்க்கை சிறக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Palanisamy T
ஜூலை 17, 2025 09:02

பாஜக வின் ஆன்மிகம் வேறு. அவர்களின் ஆன்மிகம் மதத்தோடு சம்பந்தப் பட்டவை. உலகிலுள்ள எந்த மதங்களாலும் தெளிவான ஆன்மீகத்தை போதிக்க முடியாது. அதனால் அவர்களால் இறைவனை சரியான நிலையில் உணர முடியாது. ஆனால் இந்துமதம் இதில் மட்டும் கொஞ்சம் மாறுபட்ட தெளிவான நிலையில் இருக்கின்றது


Rengaraj
ஜூலை 11, 2025 16:03

ஆன்மிகம் என்றால் அது இந்துமதம்தான், ஆன்மீகத்தை பற்றி ஒருவர் பேசினாலே அது இந்து மதப்பிரச்சாரம் தான் என்று தவறாக புரிந்துகொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். ஒருவரை பிடிக்கவில்லை என்பதால் அவர் என்ன பேசினாலும் அது தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. விமர்சனம் என்ற பெயரில் குடும்பத்தையும் பிறப்பையும் தாக்கி பேசுவது அரசியல் வாழ்க்கையில் சரிதான் என்று வாதிடப்படுகிறது. ஒருவர் சொல்ல வரும் விஷயத்தை முழுவதும் தெரிந்துகொள்ளாமல் பேசிய ஒற்றை வார்த்தை ஒன்றையே எடுத்துக்கொண்டு அதற்கு என்ன அர்த்தம், இதற்கு என்ன அர்த்தம் என்று அவர்களாகவே அந்த வார்த்தை மீதில் ஒரு மாய பிம்பத்தை கட்டமைத்துக்கொண்டும் அதை சுமந்துகொண்டும் வாழ்கிறார்கள். எது அரசியல் என்று புரியாதவர்கள் மத்தியில் , இவற்றையெல்லாம் தாண்டித்தான் பாஜக இங்கே காலூன்றி வளர்ந்து கொண்டு இருக்கிறது. கால ஓட்டத்தில் இன்னும் அதிகமாக வளரவேண்டியிருக்கிறது.


V RAMASWAMY
ஜூலை 11, 2025 14:45

மலர்ந்தால் தமிழத்தில் மணம் வீசும், வளம் கொழிக்கும், இறை ஆசியுடன் நலம் பெருகி மக்களும் மாநிலமும் மகிழ்ச்சியுடன் செழிப்புறுவர்.


தியாகு
ஜூலை 11, 2025 11:48

தமிழக பாஜகவில் திட்டமிட்டு அண்ணாமலையை ஓரம் கட்டிய கும்பல் இருக்கும்வரையில் பாஜக தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட வாங்காது.


Narayanan Muthu
ஜூலை 11, 2025 11:45

உங்கள் நம்பிக்கையில் மக்கள் கொள்ளி வைக்கப்போவதை 2026 சட்டசபை தேர்தல் முடிவில் கண்கூட காணத்தான் போகிறீர்கள் மலை.


Mettai* Tamil
ஜூலை 11, 2025 12:54

இது கொள்ளிடம் ஆறு ..


guna
ஜூலை 11, 2025 15:21

சொத்தை முத்துக்கு ஒரு கிலோ அறிவு பார்சல்...டோர் டெலிவரி...


சிவநேசன்
ஜூலை 11, 2025 11:42

ஆன்மீகம் இந்த உலகையே ஆளும்.


Anantharaman Srinivasan
ஜூலை 11, 2025 13:06

ஆன்மீகம் இந்த உலகை ஆளும். பாஜக தமிழகத்தை ஆளுமா..?


Krishnamoorthy
ஜூலை 11, 2025 11:32

அண்ணாமலை ஒரு காமெடி பீஸ்


Mettai* Tamil
ஜூலை 11, 2025 12:56

பிரியாணி நெடி ஓவரா இருக்கு ...


Krishnamoorthy
ஜூலை 11, 2025 13:49

பொங்கல் கூட ரெடியா இருக்கு


venugopal s
ஜூலை 11, 2025 11:31

கோவில் பிரசாதமாக கிடைத்த தயிர் சாதத்தை நிறைய சாப்பிட்டு விட்டு நன்றாக பகலில் தூங்கினால் இப்படித்தான் கனவு நிறைய வரும்!


vivek
ஜூலை 11, 2025 13:57

ஓசி டாஸ்மாக்... நீயெல்லாம் கருத்து போடக்கூடாது


vivek
ஜூலை 11, 2025 14:28

ஓசியில் எது கிடைத்தாலும் விட மாட்டார்


Krishnamoorthy
ஜூலை 11, 2025 11:31

வட இந்தியா கடக ரேகைக்கு மேலே உள்ளது. பொதுவாகவே ஜூன்-ஜூலை-ஆகஸ்ட் நீண்ட பகல் நேரம்


G Ramachandran
ஜூலை 11, 2025 09:57

பாகிஸ்தான் காரர்களுக்கு இது புரியாது. அங்கே போய் செட்டில் ஆவது நல்லது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை