உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாதுர் மாஸ்ய விரதம் மேற்கொண்ட ஸ்ரீ சாரதா பீடாதிபதிகள்

சாதுர் மாஸ்ய விரதம் மேற்கொண்ட ஸ்ரீ சாரதா பீடாதிபதிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிருங்கேரி: ஸ்ரீ சாரதா பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசன்னிதானம் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் அவர்களும் நேற்று சிருங்கேரியில் முறையே தங்களது 50வது மற்றும் 11வது சாதுர் மாஸ்ய விரதத்தை மேற்கொண்டனர்.மூன்று பகுதிகள் கொண்ட இந்த விரிவான பூஜையில் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், வேத வியாசருக்கும், ஆதி சங்கரருக்கும் வழிபாடு செய்யப்பட்டது. பின் சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த முந்தைய 35 பீடாதிபதிகளின் சுலோகங்களுடன் துளசி அர்ச்சனை செய்யப்பட்டது.பின்னர் சிஷ்யர்களின் சார்பாக பாத பூஜையும், பாரதத்தில் உள்ள அனைத்து மன்னர் குடும்பங்களின் காணிக்கையும் செலுத்தப்பட்டன.இன்று நடைபெறும் உத்தர பூஜை, காலை 9:00 மணி முதல் sringeri.net என்ற வெப்சைட்டில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !