மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்
29-Jun-2025
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்
15-Jun-2025
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம், இன்று மாலை 6:00 மணிக்கு மதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு விஜயம் செல்கிறார். தென்திசையில் ஆதிசங்கரர் நிறுவிய சிருங்கேரி சாரதா பீடத்திற்கு, ராமேஸ்வரத்தை ேக்ஷத்ரம் ஆக ஏற்படுத்தியுள்ளார். 1,200 ஆண்டுகளுக்கும் மேலாக, ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கும், ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடத்துடன் தொடர்பு உள்ளது. இத்திருக்கோவிலில் ஆதிசங்கரர் காலம் தொட்டு பூஜிக்கப்பட்டு வரும் ஸ்படிக லிங்கமும், அதற்கு செய்யப்படும் அதிகாலை அபிஷேகமும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ராமேஸ்வரம் கோவில் கருவறைக்குள் சென்று ஸ்ரீராமநாத சுவாமி மூலவருக்கு பூஜை செய்வதற்கு, சிருங்கேரி ஜகத்குருவிடம் மந்திர உபதேசம், சிவதீட்ஷை பெற்ற ராமேஸ்வரம் வாழ் மராத்திய அந்தண இனத்தை சேர்ந்தவர்கள், சிருங்கேரி சுவாமிகள் மற்றும் நேபாள மன்னர்கள் ஆகியோருக்கு உரிமை உண்டு.ராமேஸ்வரம் வரும் சுவாமிகளுக்கு சிருங்கேரி மடத்தில், துாளி பாதபூஜை நிகழ்த்தப்பட்ட பின், இன்று இரவு 8:00 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் ஸ்ரீசாரதா சந்த்ரமவுலீஸ்வர பூஜை நிகழ்த்துகிறார். நாளை இரவு சுவாமி தரிசனம் செய்த பின், திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க புறப்பட்டுச் செல்கிறார். - நமது நிருபர் -
29-Jun-2025
15-Jun-2025