உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் ஜாதிய அடையாளங்களுக்கு தடை

ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் ஜாதிய அடையாளங்களுக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை:நாளை (ஆகஸ்ட் 7)ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் ஜாதி ரீதியான கொடி, டி-ஷர்ட் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.சந்தனகுமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடி உற்சவ திருவிழாவில் ஜாதி தலைவர்கள் உருவப்படம் பொறிக்கப்பட்ட டீசர்ட், ரிப்பன், கொடி இடம்பெறாமல் இருப்பதை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி அடையாளம் ஏதுமின்றி ஒற்றுமையாக இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

theruvasagan
ஆக 07, 2024 10:11

ஜாதிகள் மதங்கள் சார்ந்த கட்சிகள் மாத்திரம் இருக்கலாமா. அதற்கு எந்த தடையும் கிடையாதா.


spr
ஆக 07, 2024 08:30

முதலில் அனைத்துத் தேர்தலிலும் ஜாதியின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்தக் கூடாது என்று சொல்லட்டும் எந்தக் காரணத்திற்காகவும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லட்டும் ஜாதிவாரி மானியங்கள் சலுகைகள் கூடாது என்று சொல்லட்டும் எவரேனும் ஏற்றுக் கொள்வார்களா


Sivak
ஆக 06, 2024 23:00

தேர்தல் அப்போது மட்டும் ஜாதி ஜாதி ஜாதி தான் ... திராவிட நீதிபதி அவர்களே வருவாய்துறையில் ஜாதி சான்றிதழ்ன்னு ஒன்னு குடுக்கறாங்க ... அதுக்கு எப்போ தடை விதிப்பீங்க ... கோயில்லன்ன்னா மட்டும் நொட்டிட்டு வந்துருங்க ... பெரிய புரட்சிகரமான தீர்ப்புன்னு நினைப்பு ... ஜாதிகளை அழித்தால் நம் தமிழரின் அடையாளங்கள் அழிந்து விடும் .... தமிழர்கள் ஜாக்கிரதை ...


Prakash
ஆக 06, 2024 21:01

அப்படியானால் அர்ச்சகர்கள் நூல் தெரியாமல் சட்டை அணிந்துதான் கோவிலுக்குள் வரவேண்டும் அப்படித்தானே யுவர் ஹானெர்.


தமிழ்வேள்
ஆக 06, 2024 19:26

நீதிபதிகளுக்கு மாநிலத்தின் பண்பாடு வரலாறு வழிபாட்டு மரபுகள் வாழ்க்கை முறைகள் பற்றிய புரிதல் ஆழ்ந்த அறிதல் அவசியம்...


Jagan (Proud Sangi)
ஆக 06, 2024 19:15

வைணவ கோவில் எனவே திருமண் இட்டு கொள்ளலாமா இல்ல பாழும் நெற்றியாக தான் திரியணுமா ? தேரில் திருமண் இருக்கலாமா ? எல்லாத்துலயும் கோர்ட் மூக்கை நுழைக்க கூடாது


இராம தாசன்
ஆக 06, 2024 19:09

இது தேர்தலின் பொது அரசியல் கட்சிகளுக்கும் பொருந்துமா நீதிபதி அவர்களே? அப்புறம் எதற்கு தனி தொகுதி என்ற பிரிவு?


அப்பாவி
ஆக 06, 2024 17:42

இந்த கொடி,டீ ஷர்ட்டுங்க லோகல் ஜாதித்தலிவர்கள் செய்யும் அரசியல்.


sundarsvpr
ஆக 06, 2024 17:27

பொதுவாக எல்லா அரசியல்வாதிகள் திராவிட கழகத்தை தவிர்த்த வெள்ளை சட்டை அணிகிறார்கள் அவர்கள் சட்ட பைகளில் ஜெயலலிதா எம் ஜி ஆர் கருணாநிதி ஸ்டாலின் படங்கள் உள்ளன. நன்றாக தெரிகின்றன. இது சரி என்றால் தேர் திருவிழாவில் ஜாதி அடையாளம் இருப்பதில் என்ன தவறு.? மாணவர்கள் பள்ளி உடையில் வருவார்கள் 70 ஆண்டுகளுக்கு முன் பட்டை தப்பட்டை மேள தாளத்துடன் பட்டி தொட்டிவாரியாய் ஜாதிகள் வாரியாய் ஸ்ரீவியில் நெசவாளர்கள் பண்ணாடிமார் மிகவும் அதிகமாய் உள்ளவர்கள். அவர்கள் கூட்டம் தான் தேரிழுவைக்கு பலம். காலவெள்ளத்தில் அவர்கள் கட்சி கண்ணோட்டத்தில் இருந்ததால் தேர் இழுவை சிரமப்பட்டு நிலைக்கு வந்தது. அப்போது தேரோடும் வீதி மண் . தேரின் 9 சக்கரங்கள் மரத்தால் ஆனது. அதனால் தேர் ஆடிவரும் அழகை ரசித்து இழுப்பார்கள். தேர் நிலைக்கு வர குறைந்தது ஒரு வாரம் ஆகும். இப்போது ஒரு சில மணி நேரத்தில். தேர் இழுவை மக்களால் ஒரு மனதுடன் ஒற்றுமையுடன் நடக்கின்றது. பிறக்கும்போது நிர்வாணமாய் பிறந்தோம் அதுபோல் தேர் இழுக்கவேண்டும் என்று கூற முடியாது வேஷ்டி சட்டை போல் ஜாதிகள் . வேஷ்டியில் கருப்பு சிவப்பு அடையாளமும் இருக்கக்கூடாது. .


RAAJ68
ஆக 06, 2024 17:17

நாங்கள் அரசுப் பள்ளிகளில் படித்தோம். நெற்றியில் திருநீறு இல்லாவிட்டால் ஆசிரியர் கடிந்து கொள்வார் குளிச்சியா இல்லையா என்று கேட்பார் அது அந்தக் காலம். தலையை ஒழுங்காக வாரி கொண்டு வர வேண்டும். இப்ப படிக்கிற பசங்க தலைய பார்த்தாலே வாந்தி வருகிறது.


தமிழ்வேள்
ஆக 06, 2024 19:22

மிக்க நன்றி


Sivak
ஆக 06, 2024 22:56

உண்மை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை