உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.எஸ்.ஐ.,யின் தகாத வார்த்தை; டி.ஐ.ஜி., வருண்குமார் காட்டம்

எஸ்.எஸ்.ஐ.,யின் தகாத வார்த்தை; டி.ஐ.ஜி., வருண்குமார் காட்டம்

திருச்சி : டி.ஐ.ஜி., வருண்குமார் மைக் வாயிலாக அரியலுார் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்டு, ஒரு பெண் எஸ்.எஸ்.,ஐக்கு இடம் மாற்ற உத்தரவு போட்ட ஆடியோ வேகமாக பரவி வருகிறது. அரியலுார் மாவட்டம், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., ஆக பணிபுரிந்தவர் சுமதி. கற்பழிப்பு தொடர்பாக புகார் கொடுப்பதற்காக, ஒரு பெண் அவரை போனில் தொடர்பு கொண்டார். அப்போது, அந்த பெண்ணிடம், தகாத வார்த்தைகளில் பேசி புகாரை வாங்காமல் தவிர்த்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=etp8guso&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவம் டி.ஐ.ஜி., வருண்குமார் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து, அரியலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மைக் மூலம் தொடர்பு கொண்ட டி.ஐ.ஜி., வருண்குமார், அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.எஸ்.ஐ., சுமதிக்கு ஆதரவாக பேசினார். எஸ்.எஸ்.ஐ., பேசியதை தவறு என்று சொல்லாமல், அவர் தெரியாமல் பேசி விட்டார் என்று இன்ஸ்பெக்டர் கூறியதால், கோபமான டி.ஐ.ஜி., வருண்குமார், 'இதில் முதல் குற்றவாளி நீங்க தான். அவர் பேசியதை தவறு என்று சொல்லாமல் தெரியாமல் பேசி விட்டார் என்கிறீர்களே.. வெட்கமாக இல்லை உங்களுக்கு இன்ஸ்பெக்டர் என்று சொல்லிக் கொள்ள... தெரியாமல் பேசி விட்டார் என்று சொல்லலாமா?' என்றார்.அவர் அமைதியாக இருந்ததால், 'மைக்கில் பதில் சொல்கிறீர்களா; நேரில் வந்து நிற்க வைக்கவா' என்று மீண்டும் கடுமையாக டி.ஐ.ஜி., பேசினார். அவர் அவ்வாறு பேசியதும், 'தப்பு தான் சார்... வார்ன் பண்ணி விடுகிறேன்' என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.தொடர்ந்து பேசிய டி.ஐ.ஜி., 'உடனடியாக அந்த அம்மாவை ரேஞ்ச் ஆபீசுக்கு வரச் சொல்லி, புகார்களை வாங்க சொல்லுங்கள். எந்த டூட்டியில் இருந்தாலும் அவரை துரத்தி விடுங்கள். அதற்கான உத்தரவை அனுப்பி வைக்கிறேன். அப்புறம் கன்னியாகுமரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு அனுப்புறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

JENEFA GOSPEL Ministry
ஏப் 12, 2025 16:10

Yea Absolutely Correct DIG Sir I wish you sir.I am Rtd Inspr Joseph Sir . Now Living at Near Nazerath Sir.


ரா
ஏப் 10, 2025 22:51

அந்த பெண் SSI என்ன வேலையாக இருந்தாலும் துரத்தி விடுங்க. துரத்தி என்பது என்ன மாதிரியான சொல் ?. அரசு அதிகாரிகள் உபயோகிக்கலாமா ?!.


KRISHNAN R
ஏப் 10, 2025 19:58

வருண் சார்..,,, உங்கள் மக்கள் இதுக்கெல்லாம். கவலை பட மாட்டார்கள்..


Natarajan Ramanathan
ஏப் 10, 2025 17:17

தொண்ணூறு சதம் பெண் போலீசார் இப்படித்தான். பொதுமக்களை மிகவும் கேவலமாக பேசுகிறார்கள். ஆனால் ஆண் போலீசார் செய்யும் கடினமான பணிகள் எதுவுமே இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எங்காவது ஒரு குற்ற செயல்களிலாவது பெண் போலீசார் குற்றவாளியை பிடிக்க சென்று அரிவாள் வெட்டு வாங்கியதாக செய்தி உண்டா?


Rasheel
ஏப் 10, 2025 12:57

கண்ணியம் குறைவான இடத்தில ஒரு கண்ணியமான மனிதர். வாழ்த்துக்கள்.


Ramesh Sargam
ஏப் 10, 2025 12:23

மேல் அதிகாரிகள் இப்படி நேர்மையாக இருந்தால், காவல்துறை சிறப்படையும்.


Karuthu kirukkan
ஏப் 10, 2025 11:11

இது உண்மை செய்தியாய் இருந்தால் ..தன் மீது உள்ள கறைகளை போக்குவதற்கு இதுவும் ஒரு நாடகமே பதவி உயர்வை நோக்கி ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 10, 2025 10:09

கன்னியாகுமரி தருமபுரி தண்டனை மாற்றல் என்றால் அந்த ஊர்கள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்று பாருங்கள். அடுத்து நமது போலீஸ் மந்திரி உண்மையை புட்டு புட்டு வைத்ததால் இன்ஸ்பெக்டர் இவர் மாற்றுவதற்கு முன் இவரை தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றி விடுவார். அந்த இன்ஸ்பெக்டர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று விடுவார். அந்த இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்காக இவர் ஏதோ திட்டம் இடுகிறார் என்று நினைக்கிறேன்.


rasaa
ஏப் 10, 2025 09:42

திராவிட மாடல், கொள்கைகளுக்கு எதிராக பணிபுரியும் இவருக்கு மாற்றல் நிச்சயம்.


என்னத்த சொல்ல
ஏப் 10, 2025 14:20

அவரை D I G யா promote பன்னதே, திராவிட மாடல் அரசுதான்.


V K
ஏப் 10, 2025 09:28

முதலில் இந்த போலீஸ்க்கு ட்ரைனிங் கொடுக்க வேண்டும் எப்படி பொது வெளியில் ஆடியோ ரெகார்டிங் சமூக வலை தளம் போட்டான் புகார் கொடுப்பவர்களுக்கு என்ன பாதுகாப்பு இந்த மனுஷன் ஐ பி ஸ் ட்ரைனிங்கில் சொல்லி கொடுக்கவில்லையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை