உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவருக்கு கத்திக்குத்து; முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி!

மருத்துவருக்கு கத்திக்குத்து; முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g30dn266&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

Ramesh Sargam
நவ 20, 2024 21:00

அதற்கு அப்புறம், இன்று தமிழகத்தின் வேறு ஒரு பகுதியில் ஒரு ஆசிரியை கத்தியால் குத்தி கொல்லப்பட்டிருக்கிறார். ஓசூரில் ஒரு வழக்கறிஞர் பட்டப்பகலில் மிகவும் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இவை எல்லாம் கூட மிக மிக அதிர்ச்சியான நிகழ்வுகளே. இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேலும் நடக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?


sundarsvpr
நவ 14, 2024 10:40

தமிழ்நாட்டு தலைமை அமைச்சர் ஆணை இட்டபின் விசாரணை தொடங்குவார் என்பது இல்லை. நடைமுறைதான். அதிர்ச்சி அடைந்தது செய்தி முக்கியம் இல்லை. எல்லோரும்தான் மனவருத்தம் அடைவார்கள். சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்பது காரணம் என்றால் இதற்கு அரசு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் பொதுத்தேர்தலில் பிரிதிபலிக்கும்.


S.V.Srinivasan
நவ 14, 2024 09:53

நமது அனைவரின் கடமைன்னு எதுக்கு எல்லாரையும் இழுக்கிறீங்க. மருத்துவர்கள் பாதுகாப்பிற்கு நீங்களும் உங்க அரசும் என்ன செய்ய போறீங்க, அதை சொல்லுங்க. இப்படி பொத்தாம்பொது சொல்லி எஸ்கேப் ஆனா எப்படி முக்கிய மந்திரி அவர்களே.


Prasanna Krishnan R
நவ 14, 2024 03:04

That doctor must be enquired. He is the real thief


M Ramachandran
நவ 13, 2024 20:42

அஆட்சியின் சட்டம் ஒழுங்கிற்கு மற்றும் ஒரு சாட்சி


அப்பாவி
நவ 13, 2024 19:05

அந்த டாக்டருக்கும் பத்து லட்சம் குடுத்துரலாமே. போறாது. பாஞ்சி லட்சமா குடுங்க.


raja
நவ 13, 2024 17:49

பார்த்து அதிர்ச்சியில் நெஞ்சு வழி வந்திற போகுது...அப்புறம் இந்திய நம்பர் ஒன்னு முதல்வரை இழக்க வெண்டி வந்துறும் என்று உடன் பிறப்புக்கள் வறுத்த பட போறாங்க...


என்றும் இந்தியன்
நவ 13, 2024 16:25

மருத்துவருக்கு கத்திக்குத்து முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி ஏன்??? எனது ஆட்சியில் வெறும் திருட்டு திராவிட மடியல் அரசு அரசியல் வியாதிகள் தான் இதெல்லாம் செய்வது வழக்கம். அதை மீறி ஒரு சாதாரணன் கூட செய்ய ஆரம்பித்து விட்டானா என்று முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி என்று அர்த்தம் கொள்க.


KRISHNAN R
நவ 13, 2024 15:36

குற்றவாளி பெயர் என்ன


Ms Mahadevan Mahadevan
நவ 13, 2024 15:28

அரசு ஆஸ்பத்திரியில் ஏ கப்பட்ட குறைகள் ஊழல்கள் . ஏழைகள் தான் அதை நாடி வருகின்றனர். அங்குள்ள பணியாளர்கள் யாரும் நோயாளிகளை மரியாதையுடன் நடத்துவதில்லை. இந்தியன் படம் மாதிரியான அனுபவங்கள் அநேக பேர் அனுபவித்து உள்ளனர். சரியான பணி நேரத்திற்கு ஊழியர்கள் யாரும் வருவதில்லை. ஒருவன் கதியால் ஒருவனை குதின்னன் என்றால் இருவரிடமும் தவறு இருக்க வாய்ப்பு உள்ளது. கேமராவை ஆய்வு செய்வார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை