உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வக்ப் மசோதாவை ரத்து செய்ய தி.மு.க., வழக்கு : ஸ்டாலின் அறிவிப்பு

வக்ப் மசோதாவை ரத்து செய்ய தி.மு.க., வழக்கு : ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஏப். 4- ''மத்திய அரசின், வக்ப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக, தி.மு.க., சார்பில் வழக்கு தொடரப்படும்,'' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சட்டசபை நேற்று காலை 9:30 மணிக்கு கூடியதும், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கருப்பு 'பேட்ஜ்' அணிந்து வந்தனர். கேள்வி நேரம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:மத நல்லிணக்கத்திற்கும், முஸ்லிம் மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும், வக்ப் சட்ட திருத்த முன்வடிவை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என, கடந்த மாதம் 27ம் தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். பா.ஜ., நீங்கலாக, அனைத்து கட்சிகளாலும் ஒருமனதாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளால், இந்த வக்ப் சட்ட திருத்தம் எதிர்க்கப்பட்டது. அனைத்தையும் மீறி, லோக்சபாவில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது கண்டனத்துக்கு உரியது. மசோதா நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், எதிர்த்தவர்கள் எண்ணிக்கை 232 என்பது சாதாரணமானது அல்ல. இந்த சட்ட திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல; முழுமையாக திரும்ப பெற வேண்டியது. பெரும்பான்மை கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, ஒரு சில கூட்டணி கட்சிகளின் தயவால், அதிகாலை 2:00 மணியளவில், இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது, இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்; மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல். இதை உணர்த்தும் வகையில் கருப்பு சின்னம் அணிந்து, சட்டசபை நடவடிக்கைகளில் பங்கெடுத்துள்ளோம். சர்ச்சைக்குரிய இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும். வக்ப் வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும், மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக தமிழகம் போராடும்; அதில், வெற்றியும் பெறும். அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டப்பூர்வமாகவே தடுப்போம்.இவ்வாறு முதல்வர் பேசினார்.அ.தி.மு.க., - வேலுமணி: முன்னோர்கள் தானமாகக் கொடுத்த சொத்துக்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் சிறுபான்மையினருக்கு இருக்கிறது. மத்திய அரசு, சிறுபான்மையினருடன் கலந்து பேசி, அச்சத்தை போக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்னையை பொறுத்தவரை, அரசு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க., ஆதரவாக இருக்கும்.* பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: இந்த சட்டத்திருத்த மசோதாவில் உள்ள 16 அம்சங்கள், பார்லிமென்ட் கூட்டுக் குழுவால் ஏற்கப்பட்டுள்ளன. இது முழுக்க முழுக்க வக்ப் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயம். இதை, மத ரீதியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. முதல்வர் கொண்டு வந்த அறிவிப்பை ஏற்கவில்லை. நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.* சபாநாயகர் அப்பாவு: இது தீர்மானம் இல்லை; வெளியே செல்ல வேண்டாம்; உட்காருங்கள். சபைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.* நயினார் நாகேந்திரன்: நாங்கள் வெளியே செல்கிறோம்; பேசிவிட்டு மீண்டும் வருகிறோம். இதைத்தொடர்ந்து, சபையில் இருந்து நயினார் நாகேந்திரன், காந்தி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். அப்போது, வானதி, சரஸ்வதி ஆகியோர் சபையில் இல்லை.

கூட்டாட்சிக்கு எதிரான தாக்குதல்

சிறுபான்மை இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், அறிமுகம் செய்யப்பட்ட வக்ப் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். மத்திய அரசுக்கு அன்றே தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே, லோக்சபாவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை கருத்தில் கொள்ளாமல், இந்தியா முழுதும் இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துகளை கருத்தில் கொள்ளாமல், கூட்டாட்சி தத்துவதற்கு எதிராக மத்திய அரசு தன் கணைகளை தொடுத்துள்ளது. இதை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், அரசியல் அமைப்பு சட்டத்தை நன்கு அறிந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த சபையும் அதை ஏற்றுக்கொள்ளாது. - முதல்வர் ஸ்டாலின்.

'திரும்ப பெறு'

சபையில் கோஷம் இதைத்தொடர்ந்து, சபாநாயகரிடம் அனுமதி பெற்று, 'திரும்ப பெறு... திரும்ப பெறு... வக்ப் திருத்த சட்ட முன்வடிவை திரும்ப பெறு' என, இரண்டு முறை முதல்வர் கோஷம் எழுப்பினார். அவரை தொடர்ந்து, அமைச்சர்கள், ஆளும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களும் கோஷங்கள் எழுப்பினர். இதை கவனித்தபடி, அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 80 )

xyzabc
ஏப் 16, 2025 01:03

டாஸ்மாக் வழக்கையும் திரும்ப பெறனுமா?


S.V.Srinivasan
ஏப் 11, 2025 11:23

ஆக மொத்தத்துல தமிழ் நாட்டுக்கு இன்னும் இருக்கிற சொச்ச காலத்துலையாவது எதாவது நல்லது செய்ய மாட்டோம்னு பிடிவாதமா இருக்காரே.


Nagarajan Thamotharan
ஏப் 10, 2025 09:02

சட்டத்தை மதிக்க வேண்டிய ஆளும் அரசாங்கமே திருடர்களுக்கு ஆதரவாக கோர்ட்க்கு போவது திருடர்கள் முன்னேற்ற கழக விடியல் ஆட்சியில் மட்டுமே நடந்தேறும். பல்வேறு தரப்பு மக்களின் சொத்திற்கு உரிமைகோறும் அமைப்பில் மாநிலத்தை ஆளும் மக்கள் பிரதி நிதிகள் உறுப்பினராக/அதிகாரம் படைத்தவர்களாக இருப்பது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது மட்டுமல்ல, ஏதோ ஒருவகையில் உறுப்பினர்களோ / குடும்ப உறுப்பினர்களோ ஆதாயத்திற்காக குறிப்பிட்ட மத அமைப்பிற்கு ஆதரவாகவும் பொதுமக்களின் நலனுக்கு எதிராகவும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை கிடப்பில் போடும் எண்ணத்தோடு இது போன்ற வழக்குகளை நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்து நீதி மன்றத்தின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்வது மாநில சட்டம் ஒழுங்கிற்கு சரியானதாக இருக்காது என்பது உறுதி செய்ய படுகின்றது


Ragavan
ஏப் 05, 2025 10:02

ட்ராமா king


ManiK
ஏப் 04, 2025 21:41

மத நல்லிணக்கம் பாதித்த மாதிரி பிம்மம் ஏற்படுத்தி இந்த ஸ்டாலினே முகமதியர்களை வச்சு சும்மா பூச்சாண்டி காட்டி போராட்ட அபாயத்தை தூண்டுகிறார் என கறப்படுகிறது. முதல்ல தண்டிக்க பட வேண்டியவர் முக ஸ் தான்.


S.V.Srinivasan
ஏப் 11, 2025 11:25

2026 தமிழக மக்கள்தான் தண்டனை கொடுக்க வேண்டும். செய்வார்களா?


R.MURALIKRISHNAN
ஏப் 04, 2025 21:12

சோறு தின்னாதவன் செய்யற வேலை செய் செய்


Kulandai kannan
ஏப் 04, 2025 20:25

ஆட்சியைத் தவிர மற்றெல்லாம் செய்யும் மேதாவி.


M Ramachandran
ஏப் 04, 2025 20:17

நீர் உண்மையானவனாக இருந்து அரசில் சட்டம் பற்றி பேச வேண்டும். எல்ல தரப்பு மக்களும் நம்பி பதவியை உமக்கு கொடுத்தால் திருட சொல்லுதா? அது எந்த வகையில் நியாயம்? மக்கள் பணத்தை அவசியமான இனங்களுக்கு செலவழிக்காமல் டாம்பீகமாக ஒட்டு பொறுக்க மற்றும் சொந்த கேசிற்கு கோர்ட்டிற்கு செலவழிக்க சொல்லுதா ?


raghav
ஏப் 04, 2025 20:15

நீட் , கச்சத்தீவு , தொகுதி மறுசீரமைப்பு... உருட்டு உருட்டு நல்லா உருட்டு


M Ramachandran
ஏப் 04, 2025 20:10

மானமுள்ள இந்துக்கள் இந்த ஒட்டு பொறுக்கி ஹிந்து விரோதி மக்கள் பணத்தை திருடும் திருட்டு தீ யா மு க்கா விற்கு வாக்குகள் வழங்காதீர்கள். தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்.


சமீபத்திய செய்தி