உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமையல் காஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

சமையல் காஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்' என்பது பா.ஜ., அரசுக்கு மிகவும் பொருந்தும். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே.வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது. அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.,வின் வழக்கமாகிவிட்டது. இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது. தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

RAAJ68
ஏப் 08, 2025 08:40

சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுப்பதாக கூறிய நீங்கள் இன்றுவரை கொடுக்கவில்லை நான்கு வருடங்கள் முடிந்து விட்டன எனவே அன்று முதல் இன்று வரை நான்கு வருடங்களுக்கு உண்டான தொகையை கணக்கிட்டு மக்களுக்கு மானியம் வழங்குங்கள். நீங்கள் மட்டும் தினமும் திருடுகிறீர்கள் கனிம வள கொள்ளை மணல் கொள்ளை டாஸ்மாக் கொள்ளை என்று பல லட்சம் கோடிகள்


RAAJ68
ஏப் 08, 2025 08:39

நீங்கள் தினமும் டாஸ்மார்க் ல கொள்ளை அடிக்கிறீங்க. குடிகாரன் இடமிருந்து அது எப்படி வசூலித்து உங்கள் பைய்களை நிரப்புகிறீர்கள் இந்த வயிற்றில் சாபம் எல்லாம் உங்களை சும்மா விடாது. தினமும் 200 ரூபாய் 300 ரூபாய்க்கு குடிப்பவர்களுக்கு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சிலிண்டர் வாங்குபவர்கள் சிலிண்டர் வாங்குபவர்கள் ஐம்பது ரூபாய் அதிகம் கொடுக்க முடியாத தா.


Srinivasan Narasimhan
ஏப் 07, 2025 23:57

அன்புள்ள அப்பா நீஙகள் ஏன் பெடரோல் டீசல் வரியை குறைக்கல


Bhakt
ஏப் 07, 2025 23:55

இன்றைய விடியல் சீரியல் எபிசொட்.


Ramesh Sargam
ஏப் 07, 2025 23:55

மக்களின் மீது உண்மையான அக்கறை இவருக்கு இருந்தால், காஸ் மீதான மாநில வரியை இவர் குறைக்கலாம். எங்கே குறைக்கட்டும் பார்க்கலாம். முதலைக்கண்ணீர் வேண்டாம் முதலமைச்சரே


S. Gopalakrishnan
ஏப் 07, 2025 23:18

எரிவாயு விலையை குறைப்பதாக இவர் கொடுத்த வாக்குறுதி ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறது !


Mohan Mg
ஏப் 07, 2025 23:10

ஆயிரம் ரூ கொடுக்கும் முதல்வர் இந்த 50ரூ தமிழக அரசே எற்றுக்கொள்ளும் என்று சொல்லவேண்டியது தானே சார்


sankaranarayanan
ஏப் 07, 2025 21:10

எப்போது பார்த்தாலும் இந்த அப்பா ஏனிப்படி ஓர் அந்நியநாட்டினர் போல எதற்கெடுத்தாலும் மத்திய இல்லை இல்லை ஒன்றிய அரசை குறை சொல்லிக்கொண்டே அழுதுகொண்டிருக்கிறார் அழுகையை நிறுத்தி மாநில மக்களுக்கு வேண்டிய அன்றாட சேவைகளை செய்து கொடுத்தாலே போதும்


Venkatesh
ஏப் 07, 2025 21:04

மக்கள் மாடல் முதல்வர் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளவதில்லை.... மேக்கப் போட்டு மைக் முன் வந்தாலே இன்று என்ன கூத்து என்று பார்க்கிறார்கள்.... 200 ஊ₹பிக்கள் தங்கள் தலைவரின் நடிப்பைப்பார்த்து வாயால் சிரிக்காமல்.........


nb
ஏப் 07, 2025 21:03

100 ரூபா மானியம் எங்க? வருஷம் 4 ஆச்சு. இப்பவாச்சும் குடுப்பீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை