மேலும் செய்திகள்
பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம்
16-Jul-2025
பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி, 10 நாட்களாக போராடி வருகின்றனர். கடந்த தேர்தலின்போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த 100 நாட்களில், பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என' முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து, 50 மாதங்கள் முடிந்தும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அரசு பள்ளிகளில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள், 15 ஆண்டு களாக பணி செய்து வருகின்றனர். தற்போது வழங்கும், 12,000 ரூபாய் ஊதியத்தை வைத்து, குடும்பம் நடத்த முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் அடிப்படை உரிமைகளை கேட்பதில், அரசு அலட்சியம் காட்டக் கூடாது. பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.-பிரேமலதாபொதுச்செயலர், தே.மு.தி.க.,
16-Jul-2025