உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழில் துறை மாநாடு துவக்கினார் ஸ்டாலின்; தென் மாவட்டங்களில் ரூ.32,554 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்

தொழில் துறை மாநாடு துவக்கினார் ஸ்டாலின்; தென் மாவட்டங்களில் ரூ.32,554 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: முதலீட்டாளர்களை ஈர்க்க தூத்துக்குடியில் நடந்த தொழில் துறை மாநாட்டில், ரூ.32,554 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 04) கையெழுத்தானது.துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். மாநாட்டில் தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kkr3inm6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் மூலம் 32,444 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும். 49,845 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், நிகழ்ச்சியின்போது 3,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 2,530 கோடி ரூபாய் மதிப்பில் 5 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

வாகன உற்பத்தி ஆலை

துாத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப் காட் பகுதியில், வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. தூத்துக்குடியில் இன்று (ஆகஸ்ட் 04) ரூ.16,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஆலையில் முதற்கட்டமாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தொழிற்சாலை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவில் மின் வாகன உற்பத்தியின் தலைநகர் தமிழகம் தான் என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன். நாட்டின் ஒட்டுமொத்த மின்சார வாகனங்கள் உற்பத்தியில் 40 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி ஆகிறது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் ஆலைக்கு நான் அடிக்கல் நாட்டிய 17 மாதங்களில் தமிழகத்தில் நிறுவனத்தை தொடங்கி பெருமை சேர்த்துள்ளார்கள். வியட்நாம் என்றாலே வியப்பு தான். தென் மாவட்டங்கள் தொழில் பகுதியாக உருவாகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கையெழுத்திட்டு...!

தூத்துக்குடி வின்பாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ManiK
ஆக 04, 2025 19:42

பார்த்து பதமா நெஞ்ச நிமித்துங்க, வியட்னாமை எல்லாம் அந்த நாட்டு மகைகளே புகழமாட்டனுங்க இந்த முதல்முந்திரி ஓவரா கூவுராரே. !??


சிட்டுக்குருவி
ஆக 04, 2025 18:01

எல்லாம் எலெக்ஷன் செட்டப்தான் .இதுவரையில் நடத்த மாநாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தக்களின் நிலைமையை பற்றிய முழு அறிக்கையை வெளியிட்டு அடுத்தமானாடு நடத்தினால் அதை நம்பலாம் .சுமார் 6.5 லட்சம் வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வேலைசெய்வதாக ப .சிதம்பரம் அவர்கள் அறிக்கைவிடுகின்றார் .அப்படியென்றால் தமிழ்நாட்டில் பிறந்தவர் எவரும் வேலை இல்லாதவர்களே இல்லையா ?என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது .திராவிடம் செய்த ஒரே சமூகநீதி மக்களை போதைக்கு அடிமையாக்கி தங்களின் கல்லாப்பெட்டிகளை நிரப்பியதுமட்டுமே .இதற்க்கு யார் நிரந்தர முடிவுரை எழுதுவார் தெறியவில்லை .


Kumar Kumzi
ஆக 04, 2025 17:51

தேர்தல் நெருங்குது ஓங்கோல் விடியலின் முதலீடு நாடகங்கள் வெள்ளப்பெருக்கு போல் கரைபுரண்டோடும்


sribalajitraders
ஆக 04, 2025 17:50

மோடியும் இப்படிதான் ஒப்பந்தம் போடுவார் ஆனா ஒன்னும் வராது அதே மாதிரிதான் இதுவும்


Mani . V
ஆக 04, 2025 17:30

தேர்தல் நாடகம். இருந்தாலும் நல்ல வசூல்.


என்றும் இந்தியன்
ஆக 04, 2025 17:16

தொழில் துறை மாநாடு துவக்கினார் ஸ்டாலின் தென் மாவட்டங்களில் ரூ.32,554 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்???என்ன தொழில் என்று தெரியுமா ஸ்டாலினுக்கு???


ஆரூர் ரங்
ஆக 04, 2025 16:30

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சம் பேருக்கு வாழ்வாதார பாதிப்பு. அவர்களுக்கு மாற்று வழி கூற திராணியில்லாத அரசு. இந்த புரிந்துணர்வு தேர்தல் ஸ்டண்ட்.


என்னத்த சொல்ல
ஆக 04, 2025 16:16

Well done Stalin sir..


Kumar Kumzi
ஆக 04, 2025 17:54

Yes his family development only Ooppees get 200 rupees only


ஜெகதீஸ்வரன் தண்டபானி
ஆக 04, 2025 15:24

அடுத்த ஸ்டெர்லைட் போல திமுக தூத்துக்குடி வின்பாஸ்ட் ஆலையை இன்னும் 2-3 ஆண்டுகளில் எதிர்த்து போராடும்


vadivelu
ஆக 04, 2025 15:08

பாராட்டுக்கள், இனி யாரும் வேலை இல்லா திண்டாட்டம் என்று சொல்ல முடியாது முடியாது. பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது என்றும் சொல்ல முடியாது. பண புழக்கம், நிம்மதி இரண்டும் மக்களிடம் உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை