உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஸ்டாலின் கடும் தாக்கு

எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஸ்டாலின் கடும் தாக்கு

விழுப்புரம் : சில எதிர்க்கட்சி தலைவர்கள், நம் மீது குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அது, ஆட்சியின் குறை இல்லை; அவர்கள் சிந்தனையின் குறைபாடு,'' என, முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.விழுப்புரத்தில், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவரங்கம், சமூக நீதி போராளிகள் மணிமண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்து, 231 திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், 324 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பேசினார். அவர் கூறியதாவது:இங்கே, 21 சமூக நீதி போராளிகளுக்கு நினைவு மண்டபம் திறக்கப்பட்டுள்ளது. வன்னிய சமுதாய மக்கள், சமூக நீதி உரிமை கேட்டு, 1987ல் போராடிய போது, சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க., அரசு செவிமடுக்கவில்லை. ஆனால், 1989 தேர்தல் அறிக்கையில், வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவோம் என்று, கருணாநிதி அறிவித்தார். ஆட்சிக்கு வந்த, 43வது நாளில், 20 சதவீத இடஒதுக்கீட்டை உருவாக்கிக் கொடுத்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் படித்து, வேலைக்குச் சென்று முன்னேற, அந்த ஒதுக்கீடு முக்கிய காரணம்.தி.மு.க., ஆட்சியில் தான், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, 25 சதவீதம் இட ஒதுக்கீட்டை, 31 சதவீதமாக உயர்த்தினோம். பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டை 18 சதவீதமாகவும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் தனியாக இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கொடுத்தோம். முஸ்லிம்களுக்கு, 3.5 சதவீதம், அருந்ததியினருக்கு, 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினோம். நமக்கு நிதி ஒன்றுதான் தடையாக இருக்கிறது. ஆனாலும், நிதியில்லை என புலம்பிக் கொண்டிருக்காமல், மக்கள் குறைகளை நீக்கும் அரசாக, தி.மு.க., ஆட்சி செயல்படுகிறது. சில எதிர்க்கட்சி தலைவர்கள், குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அது, ஆட்சியின் குறை இல்லை; அவர்கள் சிந்தனையின் குறைபாடு. தானும் நல்லது செய்ய மாட்டார்கள்; அடுத்தவர்களையும் செய்ய விட மாட்டார்கள். 'நம்பர் ஒன் முதல்வர்' என்பதைவிட, 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்பதே என் இலக்கு. ஆதிக்க சக்திகள் தலைதுாக்க ஒருபோதும் விடமாட்டோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

வன்னியர் சமுதாயம் துணை நிற்கும்!

சிலரை போல, சமுதாயத்தை வைத்து பிழைக்கத் தெரியாதவர் கோவிந்தசாமி. ஏழையாக இருந்து, ஏழையாகவே மறைந்தவர். அவர் இறக்கும்போது, தன் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி யிடம் வேண்டுகோள் வைத்தார். அதன்படியே கருணாநிதியும், வன்னியர் சமுதாயத்திற்கு உதவி வந்தார். எனவே, கருணாநிதி, ஸ்டாலின் குடும்பத்திற்கு வன்னியர் சமுதாயம் என்றும் துணை நிற்கும். - துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

vijai
ஜன 29, 2025 22:45

பாவம் அவரை சொல்லி குற்றமில்லை துண்டு சீட்டில் என்ன எழுதி கொடுக்கிறார்களோ அதை படிக்கிறாரு


raja
ஜன 29, 2025 17:59

அதனை ஒரு புத்தி பேதலித்தவர் சொல்வது தான் கொடுமை...


Oru Indiyan
ஜன 29, 2025 17:09

சிந்தனை குறைவு என்றால் என்ன? பைத்தியம். எதிர்க்கட்சி எல்லாம் பைத்தியங்கள் என்று சொல்கிறார். அவர்கள் உங்களையும் உங்கள் டம்மி பீஸ் தலைவர்களையும் சிந்தனை குறைபாடு உள்ளவராக அதான் சார் பைத்தியம் என்று சொன்னால், நீங்கள் அவர்களை கைது செய்வீர்கள். உம்


Barakat Ali
ஜன 29, 2025 16:49

அடுத்த முறை அமெரிக்கா போக வாய்ப்புக்கு கிடைத்தால் Mental Health ஐயும் பரிசோதித்துக் கொள்வது நல்லது .... உள்ளூரில் பரிசோதிக்க கூச்சப்பட வாய்ப்பு ....


என்றும் இந்தியன்
ஜன 29, 2025 16:15

குழந்தாய் நீ முதல்வர் அதாவது தெரியுமா இல்லையா???உனது வேலை என்ன ???நாட்டு மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை செயல்படுத்துவது, அரசின் கடனை அடைப்பது???ஆனால் நீ என்ன செய்கின்றாய்??? 1-வெறுமனே சிலை திறப்பு விழா செய்கின்றாய்???இதனால் மக்களுக்கு என்ன லாபம்?? 2- நூலகம் திறக்கின்றாய் உனக்கு யாரோ கொடுத்த புத்தகத்தை வைத்து ??? இதனால் என்ன லாபம் 3- அரசின் கடன் சுமையை உனது இலவச திட்டத்தால் ரூ 5.3 லட்சம் கடன் இன்று ரூ 8.9 லட்சம் கடனாளி ஆக்கிவிட்டாய் டாஸ்மாக்கினாட்டை 4-டாஸ்மாக்கினாட்டை இன்னும் மோசமான குடி" கார மாநிலமாக மாற்ற பல டாஸ்மாக் கடைகளை திறந்து நாச வழியில் கொண்டு செல்கின்றாய்


என்றும் இந்தியன்
ஜன 29, 2025 15:58

கஸ்மாலம் எவ்வளவு தடவை சொல்வது???முகம் பார்க்கும் கண்ணடி முன்னாடி நின்னு நீ தப்பு நீ தப்பு என்று சொல்லாதே என்று???


ram
ஜன 29, 2025 15:55

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்து கோடி லட்சங்கள் கடன் வாங்கியிருக்கு, ஐநூறு மேற்பட்ட ஹிந்து கோவில்களை இடித்து இருக்கிறார்கள், கேட்டால் திராவிட ஈர வெங்காய ஆட்சி என்று சொல்லிக்கொண்டு அலைவார்கள்.


SIVAN
ஜன 29, 2025 15:09

"ஆதிக்க சக்தியை தலை தூக்க விடமாட்டோம்" அப்போ நீங்க ஒங்க குடும்பம், சுற்றம் எல்லாம் யாரு, வெளில ஏதோ ஆதிக்க சக்தி இருக்கறமாதிரி சொல்றீர். Anti-incumbency, தமிழக மக்களிடையே இப்போ இல்ல ஒரு வருடம் ஆட்சி முடிவதற்குள்ளேயே வந்தாச்சு. எவ்ளோ தம் காட்டினாலும் 2026 ல் எதிராக முடியும்.


Smbs
ஜன 29, 2025 14:20

இருக்குதா


Murugesan
ஜன 29, 2025 14:01

மண்டையில மூளையற்ற அறிவில்லாத அயோக்கிய தத்தி உங்களை மிஞ்ச உலகளவில் யாரும் இல்லை,


புதிய வீடியோ