உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்; பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்; பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்.இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதம் குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது; தொகுதி மறுசீரமைப்பு நிர்ணயம் தொடர்பான கவலைகள் பற்றிய எங்களின் குறிப்பாணையை வழங்க பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களுடன் சேர்ந்து உங்களை சந்திக்க கோரியுள்ளேன். சென்னையில் நடைபெற்ற கூட்டுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை தொடர்ந்து கடிதம் எழுதுகிறேன்.ஏற்கனவே குறிப்பிட்டது போல முக்கிய பிரச்னையில் எங்களின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க தங்களை அவசரமாக சந்திக்க நேரம் கோருகிறோம். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கு எழுதிய கடித்தையும் தமது சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;தமிழகத்தில் இருந்து எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தக் கடிதம் உங்களை நலம் பெறச் செய்யும் என்று நம்புகிறேன்.பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களுடன் எங்கள் சமீபத்திய விவாதங்களிலிருந்து உருவான எல்லை நிர்ணயம் குறித்த ஒரு மனுவை கொடுக்க விரும்புகிறேன்.மார்ச் 22, 2025 அன்று, சென்னையில் 'நியாயமான எல்லை நிர்ணயம்' குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டம் நடைபெற்றது. இது இந்தியா முழுவதும் உள்ள முதல்வர்கள், துணை முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியத் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டமாகும்.எங்கள் விவாதங்களிலிருந்து எழும் குரல்கள் அரசியல் எல்லைகளைக் கடந்து, நமது பார்லிமென்ட் ஜனநாயகத்தில் நியாயமான பிரதிநிதித்துவத்தை நாடும் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களின் கவலைகளை உள்ளடக்கியது.இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பாக மனுவை முறையாக சமர்ப்பிக்க உங்களை சந்திக்க விரும்புகிறேன். விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

panneer selvam
ஏப் 03, 2025 15:22

Stalin ji , as such there is not even marriage date is finalized but now you are quarreling for name of the child . just for the sake of election , you are making some antic dramas


R.Balasubramanian
ஏப் 02, 2025 17:17

எதற்கு தேதி கேட்கணும்? ஏப்ரல் ஆறாம் தேதி பாம்பன் பாலம் திறக்க மோடிஜி வருகிறார்? அன்று பேசி விடலாமே? தனி செலவு எதற்கு?


Rajasekar Jayaraman
ஏப் 02, 2025 15:58

நடிப்புக்கு அளவே இல்லாத பொறம் போக்கு.


Balamurugan
ஏப் 02, 2025 15:26

ஆமாம் மக்களோட எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டார் இப்போது இவருக்கு ரொம்ப முக்கியமான பிரச்னை இது தான். பிரதமர் இவருக்கு நேரம் ஒதுக்க கூடாது.


M S RAGHUNATHAN
ஏப் 02, 2025 14:54

ஜெயலலிதா அவர்கள் மிக சரியாக ஸ்டாலின் அவர்களை "அட்டை கத்தி வீரன்" என்று சொன்னார். காற்றில் அட்டை கத்தியை சுழற்றுபவர் ஸ்டாலின் மற்றும் அவர் "வீரர்கள்".


M S RAGHUNATHAN
ஏப் 02, 2025 14:47

இன்னமும் எனக்கு ஆண் குழந்தையே பிறக்கவில்லை. அதற்குள் பிறக்காத அந்த குழந்தைக்கு திருமணம் செய்ய பெண்ணை பார்த்து நிச்சயம் செய்யவில்லை. கல்யாணத்திற்கு நாள் பார்க்க வில்லை. அதற்குள் பிறக்கப் போகும் குழந்தைக்கு பால் வாங்க வேண்டும் என்கிறார் ஸ்டாலின்.


என்றும் இந்தியன்
ஏப் 02, 2025 16:37

இதை மாயாண்டி ஜோசப் கான் பார்த்தால்


பாரத புதல்வன்
ஏப் 02, 2025 12:53

அங்க போய், இந்தி தெரியாது போன்னு சொல்லு பார்க்கலாம்!!!!


எவர்கிங்
ஏப் 02, 2025 12:03

சகித்து கொண்டுதான் வாழனும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 02, 2025 12:03

இவருக்கு ஹிந்தி தெரியாது அவருக்கு தமிழ் தெரியாது. இரண்டு பேரும் பாஷினி அப் மூலமாக பேசிக்கொள்வார்கள் போல.


என்னத்த சொல்ல
ஏப் 02, 2025 12:32

நம்ம PM ஸ்ரீலங்கா போய் எப்படி உரையாடுவார். அதேபோல் தான்


Anand
ஏப் 02, 2025 14:45

ஸ்ரீலங்கன் அதிபருக்கு ஆங்கிலம் தெரியும் நம் பிரதமருக்கும் ஆங்கிலம் தெரியும் நம்ம திருட்டு தலைகள் போல தத்திகள் அல்ல அவர்கள்...


Mani . V
ஏப் 02, 2025 12:01

எசமான் நீங்க எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் குறைங்க. ஆனால் தமிழ்நாட்டில் வேண்டாம். இதை வைத்துதான் எங்கள் குடும்ப உறுப்பினர்களும், எங்களின் வாழ்நாள் கொத்தடிமைகளும் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறோம். அந்தப் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விடாதீர்கள். உங்களுக்கு புண்ணியமாகப் போகும் எசமான்.


சமீபத்திய செய்தி