உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனைவி சொல்வதை கேட்கும் ஸ்டாலின் கோவில் கும்பாபிஷேகத்துக்கு செல்லலாமே?

மனைவி சொல்வதை கேட்கும் ஸ்டாலின் கோவில் கும்பாபிஷேகத்துக்கு செல்லலாமே?

கோவை: ''ஹிந்துக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்றால், அதற்கான விலையை ஸ்டாலின் அரசு கொடுக்க நேரிடும்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

கோவையில் அவர் அளித்த பேட்டி:

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்து நீதிமன்றத்தில், முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தி.மு.க., அரசு கூறி வருகிறது. ஹிந்துக்களின் உணர்வை தொடர்ந்து புண்படுத்தி வருகிறார், முதல்வர் ஸ்டாலின். தன் மனைவி சொல்வதை கேட்பதாக ஸ்டாலின் சொல்கிறார். ஆயிரம் கோவில் கும்பாபிஷேகங்களுக்கு செல்லும் அவரது மனைவி, ஒரு கோவில் கும்பாபிஷேகத்துக்கு கூட செல்லுமாறு ஸ்டாலினிடம் சொல்லவில்லையா? ஹிந்துக்களின் உணர்வுகளை மதிக்காவிட்டால், அதற்கான விலையை ஸ்டாலின் அரசு கொடுக்க நேரிடும். காந்திக்கும், தி.மு.க., வுக்கும் தொடர்பே இல்லை. தி.மு.க., அரசு, எத்தனை திட்டங்களுக்கு காந்தி பெயரை வைத்துள்ளது? அறிவாலயத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதில்லை. காந்தி பெயரிலான வேலைவாய்ப்பு திட்டத்தில் அதிக ஊழல் செய்த மாநிலங்களில், தி.மு.க., ஆளும் தமிழகமும் ஒன்று. தி.மு.க., அரசில் யாரெல்லாம் ஊழல் செய்கின்றனரோ, அவர்களெல்லாம் சிறைக்குள் போகப் போகின்றனர். ஈரோட்டில் பேசிய த.வெ.க., தலைவர் விஜய், மஞ்சள் நகரம் என புதிதாக கண்டுபிடித்து இருக்கிறார். ஆனால், மஞ்சளுக்கு தனி வாரியத்தையே மத்திய பா.ஜ., அரசு அமைத்துள்ளது. அவர் தி.மு.க.,வை எதிர்ப்பதை வரவேற்கிறோம். ஆனால், தி.மு.க.,விற்கும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கும் தான் போட்டி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

theruvasagan
டிச 20, 2025 18:19

பல வீடுகளில் மனைவிகள் தங்கள் கணவன்மார்களிடம் டீம்காவுக்கு ஓட்டு போடதீங்கன்னு சொல்றாங்களாம். மனைவி சொல்படி நடக்க வேணடும் என்பது இந்த விஷயத்தில் மிகப் பொருத்தமாக உள்ளது என்று கணவர்கள் பேசிக்கறாங்களாம்.


Barakat Ali
டிச 20, 2025 14:19

நாமக்கல்லில் நடந்த பகீர் சம்பவம் நாமக்கல் மாவட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி வீட்டுக்குள் யாரோ மர்மநபர் நுழைந்துள்ளதாக மகளிர் அணி நிர்வாகியின் கணவருக்கு தெரியவர வீட்டின் உள்ளே சென்று பார்த்தவருக்கு பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது பஅறையில் மகளீர் அணி நிர்வாகியுடன் பேசிக் கொண்டு இருந்த நபர் அக்கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளராம்... அப்பறம் என்ன ? அன்பாக இரண்டு வார்த்தைகளில் கவனித்து அனுப்பியுள்ளனர்.... தேர்தலில் எப்படி வெற்றி பெறனும்ன்னு தவெக மகளிர் அணி நிர்வாகியும் மாவட்ட செயலாளரும் ரகசிய கூட்டம் நடத்தியது தவறா ?


ஜெய்ஹிந்த்புரம்
டிச 20, 2025 21:08

அட...


என்னத்த சொல்ல
டிச 20, 2025 11:28

மனைவி பேச்சை கேக்கணும்னுதான் சொன்னார். அதன்படி நடக்கனும் என்பது அவரவர் விருப்பத்தை / கொள்கையை பொறுத்தது.


S.F. Nadar
டிச 20, 2025 11:09

வேற செய்தி இல்லையா ?


guna
டிச 20, 2025 12:50

நாடாருக்கு வேறு வேலை இல்லையா....


அப்பாவி
டிச 20, 2025 10:28

கோவிலுக்கு கும்பாபிஷேகத்துக்கு வரச்சொல்லி கூட்டாங்களா? முதல்ல அதை விசாரியுங்க.


T.sthivinayagam
டிச 20, 2025 09:02

அவருக்கு உங்களை போல் கடவுளை வைத்து அரசியல் செய்யும் நிலையில் இல்லை. என்று திராவிடர்கள் கூறுகின்றனர்.


vivek
டிச 20, 2025 10:26

வாடகை வாயன் சிவநாயகம்


SIVA
டிச 20, 2025 08:54

தாய்மாமன் படத்தில் ஒரு வசனம் மாப்ள சரக்கு அடிக்கும் போது தண்ணி கொஞ்சம் ஜாஸ்தி ஊத்திக்கோ என்று சொன்னேன் அவன் கேட்கல என்பார் கடைசியில் சத்யராஜ் அவர் எந்த தண்ணி என்று சொல்லவில்லை என்று ஒரு பதில் சொல்வார் அது போன்று தான் இவர்களும்


Samy Chinnathambi
டிச 20, 2025 08:50

விஜயகாந்த் ஆக இருந்தாலும் சரி , விஜய் , எஸ் ஏ சந்திரசேகர் ஆக இருந்தாலும் சரி , கமலஹாசன் ஆக இருந்தாலும் சரி , டி ராஜேந்திரன் ஆக இருந்தாலும் சரி செல்வாக்கோடு இருந்த பொழுது கருணாநிதி உடன் நெருக்கமாக பயணம் செய்வது , தங்க பேனா கொடுப்பது , பாராட்டு விழா எடுப்பது அரசியலுக்கு வந்து விட்டால் திமுகவை எதிர்த்து நான் தான் அரசியல் செய்வேன் , என்னால் தான் முடியும் , திமுக ஒரு ஊழல் கட்சி , தீண்டத்தகாத கட்சி என்று பேசி தான் வாக்கு வாங்குவார்கள் , சில தேர்தலுக்கு பிறகு காணாமல் போவார்கள் அல்லது , திமுக உடன் ஐக்கியம் ஆவார்கள் , அவர்கள் மக்கள் மத்தியில் வோட்டு வாங்குவதற்கு திமுக எதிர்ப்பு கோசம் கையிலெடுப்பார்கள் , நாளாடைவில் பழைய கூடாரத்தில் ஐக்கியம் ஆவார்கள் திமுக என்ற தீய சக்தியை , தீயவர்கள் கூடாரங்களை , தொடர்ந்து கட்டுப்படுத்தி வச்சு இருக்கும் ஒரே கட்சி அதிமுக


S.L.Narasimman
டிச 20, 2025 08:36

கருத்து சொல்லுவாங்க. எந்த காலத்திலே அவிங்க சொன்னதை செய்திருக்கிறார்கள். அதுதான் திராவிட மாடல் என்பாங்க.


உண்மை கசக்கும்
டிச 20, 2025 08:32

கொஞ்சம் மாற்றி யோசியுங்கள். மனைவி தான் கணவன் பேச்சை கேட்காமல், கோயில் குளம் என்று ஊரு சுற்றுகிறார்.


baala
டிச 20, 2025 09:12

யாரை சொல்லுகிறீர்கள் சகோ