உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்: மா.கம்யூ., சண்முகம்

 ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்: மா.கம்யூ., சண்முகம்

ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்: மா.கம்யூ., சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் நேற்று சென்னையில் அளித்த பேட்டி: ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'யாரையும் காப்பாற்ற நாங்கள் தலையிடவில்லை; எந்த உத்தரவையும் நாங்கள் வெளியிடவில்லை. குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; இது தான் தி.மு.க., நிலை' என, தெரிவித்துள்ளார். தி.மு.க., ஆட்சியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணையே நடத்தாமல், ஆதாரங்கள் இல்லை; ஆவணங்கள் தெளிவாக இல்லை என்கிற பெயரில், இந்த வழக்கை முடிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. தன் ஆட்சி காலத்தில் பெரிய வலைப்பின்னலை போல், ஒரு பாலியல் குற்றம் நிகழ்ந்திருக்கிற போது, அதற்கான தார்மீக பொறுப்பை ஸ்டாலின் ஏற்க வேண்டும். 'என் ஆட்சி காலத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தாததற்கு, நான் பொறுப்பேற்கிறேன். அதற்கு காரணமான அதிகாரிகள், அதை உரிய முறையில் என் கவனத்திற்கு இந்த பிரச்னையை கொண்டு வரவில்லை' என்ற முறையில் அவர் பதில் சொல்வது நேர்மையாக இருக்குமே தவிர, இதில் எங்களுக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என கடந்து போவதால், இந்த பிரச்னையை மூடி மறைத்துவிட முடியாது. பல கோடிக்கணக்கான ரூபாய் இதிலே கைமாற்றப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
செப் 26, 2026 05:38

2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை திமுக.ஸ்டாலின்க்கு ஆதரவு அளித்த மா.க.சண்முகமும் தார்மீக குற்றவாளியே.


சமீபத்திய செய்தி