உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்கலை வேந்தர் பதவியில் முதல்வர் இருக்க வேண்டும்: ஸ்டாலின் விருப்பம்

பல்கலை வேந்தர் பதவியில் முதல்வர் இருக்க வேண்டும்: ஸ்டாலின் விருப்பம்

காரைக்குடி: பல்கலை வேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.காரைக்குடி அழகப்பா பல்கலை வளாகத்தில் கட்டப்பட்ட வளர் தமிழ் நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வள்ளல் அழகப்பர் பிறந்த மண்ணுக்கு வந்ததில் மகிழ்ச்சி. கல்விக்காக வள்ளல் அழகப்பர் செய்துள்ள தொண்டு மிக முக்கியமானது. வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்துவிடக்கூடாது. வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டம் முயற்சி செய்து வருகிறது.

2 லட்சம் புத்தகங்கள்

இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. மாணவர்களின் கல்விக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருக்க வேண்டும். நூலகங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும். எனக்கு பரிசாக வந்த 2 லட்சம் புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கி உள்ளேன். திமுக., தலைவராகப் பொறுப்பேற்ற பின் எனக்கு புத்தகங்களை மட்டும் பரிசளிக்கக் கூறினேன். அதனை நூலகங்களுக்கு அனுப்புவேன் என்றேன். இதுவரை என் கைக்கு 2.75 லட்சம் புத்தகங்கள் வந்துள்ளன. அதனை பல்வேறு நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். கொடையுள்ளமும், அறிவுத்தாகமும் கொண்டவர்கள் தங்கள் ஊர்களில் நூலகம் அமைக்க வேண்டும்; தங்களால் இயன்ற நூலங்களை அமைக்க வேண்டும். அருட் செல்வத்தை நீங்கள் தேடிச் சென்றால், பொருட் செல்வம் தேடி வரும். நான் முதல்வன் திட்டம் மூலமாக 22.56 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்துள்ளோம்.

அதிகரிப்பு

புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 32 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. உயர் கல்வியை ஊக்குவிக்க மாணவர்களுக்கு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 83 )

Ramalingam Shanmugam
ஜன 27, 2025 11:47

அதையும் விட மனசில்லை


Matt P
ஜன 26, 2025 23:53

வேந்தன் என்றால் தமிழில் மன்னன் என்று பொருள். தமிழ்நாட்டில் படி படியாக மன்னராட்சியை புகுத்த விரும்புகிறாரோ.


Matt P
ஜன 26, 2025 23:46

இவ்வளவு ஏன் அவசரம்? மாநில சுயாட்சி கிடைச்ச உடன் எல்லாமே நீ தான். நீட் தமிழ்நாட்டுக்கு மட்டும். வேந்தர் தமிழ்நாட்டில் மட்டும் முதலமைச்சர். இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு மட்டும் தனி உரிமைகள் கொடுக்க வேண்டுமா? ...ஆளுநர் டம்மி ஆ தான் இருக்க வேண்டும். உதய நிதியும் நீயும் தான் தமிழ் நாட்டில். எம்ஜிஆருக்கோ கருணாநிதிக்கோ ஜெயலலிதாவுக்கோ தோன்றாதா எண்ணங்கள் உனக்கு மட்டும். வேந்தரா நீ வந்துட்டா தமிழ்நாட்டில் பல்கலை வளாகத்துக்குள் திமுக காரங்களே பாதுகாப்பை ஏற்படுத்து வாங்க அப்படீங்கிறீங்களா?


xyzabc
ஜன 22, 2025 13:02

வேற என்ன பாக்கி ?


S.V.Srinivasan
ஜன 22, 2025 10:21

ஏன் இந்தியாவோட நிறுத்தீட்டிங்க முக்கிய மந்திரி அவர்களே. உலகிலேயே தமிழகம்தான் முன்னிலைன்னு சொல்லிருக்கலாமே. காசா பணமா. ஒருவர் இரு பதவிகளை வகிக்க கூடாதுன்னு சட்டமும் இருக்கு.


xyzabc
ஜன 22, 2025 12:55

எப்பவோ சொல்லி ஆச்சு


Anantharaman
ஜன 22, 2025 10:17

புதிய படிப்பறிவு அற்ற முதல்வர் தலைமை ஏற்றால், உள்ளதும் போகும் நொள்ளைக் கண்ணா.


Nadanasigamany Ratnasamy
ஜன 22, 2025 09:36

எழுத வாசிக்கத் தெரிந்தவருக்கே துணை வேந்தர் பதவி. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?


MN JANAKIRAMAN
ஜன 21, 2025 23:23

ஏன் அதையும் வீணாக்க வேண்டுமா ?? இதுதான் திராவிட மாடலா ??


Venkataraman
ஜன 21, 2025 23:00

எல்லா அதிகாரங்களும் முதல்வர் கையில் இருந்தால்தான் நன்றாக கொள்ளை அடிக்க முடியும். யாரும் எதிர்த்து பேச முடியாது. பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு துணைவேந்தர் பதவியையும் பத்து கோடி ரூபாய்க்கு விற்று கொள்ளை அடித்திருக்கிறது இந்த திமுக அரசு என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியிருக்கிறார். அதனால்தான் துணைவேந்தரை தேர்வு செய்யும் தேர்வு குழுவில் மத்திய அரசின் யுஜிசி உறுப்பினர் இருக்க கூடாது என்று திமுக அரசு விரும்புகிறது.அதேபோல நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்த முடிவு செய்தபோது அதையும் எதிர்த்தார்கள். ஏனென்றால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சீட்டுகள் விற்பதற்கு பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார்கள். இப்படி மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் திமுக எதிர்ப்பதற்கு காரணம் கொள்ளை அடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலைதான்.


Bhakt
ஜன 21, 2025 22:50

அப்போ துணை வேந்தரா சின்னதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை