உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளுக்கான மாநில மாநாடு

விவசாயிகளுக்கான மாநில மாநாடு

கோவை: விவசாயிகளுக்கான மாநில மாநாடு, கோவையில் நடந்தது. யுனைடெட் பாஸ்பரஸ் நிறுவனம் சார்பில் நடந்த 'அனீதா மாஸ்டர் மீட்' என்ற விவசாயிகளுக்கான இம்மாநாட்டில், இதன் துணை நிறுவனமான 'அட்வன்டா இண்டியா' நிறுவன வர்த்தக பிரிவு தலைவர் பூபன் துபே தலைமை வகித்தார். மாநாட்டில்,'தற்போது பசுமை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் மகசூல் செய்யக்கூடிய அனீதா ரக கலப்பின விதைகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வினியோகிப்பதன் மூலம் புதிய சந்தைகளின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

இதன் மூலம், பளபளக்கும் பசுமை பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த கலப்பின விதைகளை பயன்படுத்தும்போது துவக்கத்திலேயே இதன் பலனை பார்த்து உரிய மகசூலை பெறலாம். 'சந்தையில் குறிப்பிட்ட இந்த ரக பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. படரும் கொடிகள், செடிகளில் காணப்படும் இலை பூச்சி நோயை எதிர்த்து போராடும் வயல் சகிப்பு தன்மை இந்த விதைகளில் இருப்பது இதன் தரத்துக்கு உதாரணமாகும். பழ ஈக்களை கட்டுப்படுத்தும் திறனும் இதற்கு உண்டு' என்று வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, விவசாயிகள் தங்களின் தனிப்பட்ட வேளாண் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, விதையிடுதலில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !