உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாம்சங் நிறுவனத்தில் ஸ்டிரைக்; தொழிற்சங்கம் மீது வழக்கு!

சாம்சங் நிறுவனத்தில் ஸ்டிரைக்; தொழிற்சங்கம் மீது வழக்கு!

சென்னை : சாம்சங் நிறுவனத்தில், 11 நாட்களாக, தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்த நிலையில், சி.ஐ.டி.யு., சங்கம் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம், தன் உற்பத்தி வளாகத்தை சென்னை அருகே கொண்டுள்ளது. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த 11 நாட்களாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் சாம்சங் நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தொழிற்சங்க நடவடிக்கைகள் முலம் தொழிற்சாலையின் செயல்பாடுகளை சீர்குலைக்கின்றனர். மற்ற ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர். இவ்வாறு செய்வது தொழிற்சாலையின் சுமூகமான செயல்பாடு மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும்,' என்று சாம்சங் தெரிவித்துள்ளது. இது குறித்து சிஐடியு சங்கத்தினர் கூறுகையில், தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள், சாம்சங்கின் புகார்களை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றனர்.இதனிடையே, எல்லாப் பிரச்சினைகளையும் விரைவில் தீர்க்க, ஆலையில் உள்ள தொழிலாளர்களுடன் பேச்சு தொடங்கி உள்ளதாகவும், சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

K.Kannan
செப் 21, 2024 13:13

Very difficult to work in Korean companies.


Kannan Chandran
செப் 21, 2024 01:23

சாம்சங் தொழிற்சாலையை சீனா அல்லது வேறு மாநிலத்துக்கு கொண்டுசெல்லும் வரை இங்குள்ள கைக்கூலிகள் தொழிலாளர்கள் என்ற போர்வையில் பிரச்சனை ஏற்படுத்துவர்..சம்பளம் குறைவு என நினைத்தால் வேறு தொழிற்சாலைக்கு செல்லலாமே, தற்போழுதுகூட தற்காலிக ஊழியர்களை வைத்து சாம்சங் தொழிற்சாலை இயங்குகிறது ஏன் அவர்களுக்கு சம்பளம் நிறைவாக இல்லையா?..


yts
செப் 20, 2024 19:59

ஒரு புத்துணர்வு ஒப்பந்தம் போட்டால் சரியாகிவிடும்


Saai Sundharamurthy AVK
செப் 20, 2024 19:21

தொழிற்சங்கம் என்பது கம்முநாட்டிகளின் கூடாரமாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்டிக் குலுக்கிகள் தொழிலாளிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் நடுத்தெருவில் கொண்டு வரும் வரை போராடுவார்கள். ஆலையை மூடிவிட்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை போடும் கம்முநாட்டிகள் சங்கங்களை தடை செய்ய வேண்டும்..!!


chennai sivakumar
செப் 20, 2024 17:54

கல்கத்தாவை அழித்தவர்கள் இந்த கம்யூனிஸ்டுகள். ஒருத்தரும் உருப்படக்கூடாது என்பதுதான்னவர்களின் குறிக்கோள்


ngm
செப் 20, 2024 17:52

ஒரு கம்பெனிய உருப்படியா இயங்க விடமாட்டாங்க. உண்டி குலுக்கிகள்


sankar
செப் 20, 2024 17:41

லாக் அவுட் செய்யுங்கள் நிர்வாகமே - பிறகு தொழிற்சங்கம் அவர்களுக்கு வேலை கொடுக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை