உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெலுங்கான போராட்டம் துவங்கியது

தெலுங்கான போராட்டம் துவங்கியது

ஐதராபாத்: தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆந்திர மாநிலம் கரீம் நகர் பகுதியில் நடக்கிறது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் உள்பட ஆயிரக்கணக்‌கானோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்திற்கு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், தெலுங்கானா தனி மாநிலம் எனும் தீப்பந்தம் ஆந்திரா மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. எனவே இந்த போராட்டத்தில் 2.4 லட்சம் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மீது எஸ்மா சட்டத்தை ஏவ அரசு முயற்சிக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இங்கு அரசு ஊழியர்கள் கூடியுள்ளனர்.இவ்வாறு கூறினார். இந்த வேலை நிறுத்தத்தினால் அப்பகுதியில் பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சிங்கனேரி பகுதியில் உள்ள சுரங்கங்களில் உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்