உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டுமனையை பதிவு செய்ய ரூ. 2 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் சார் பதிவாளர்

வீட்டுமனையை பதிவு செய்ய ரூ. 2 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் சார் பதிவாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தாம்பரம்: வீட்டுமனையை பதிவு செய்ய, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, தாம்பரம் பெண் சார் - பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் பிரவின்குமார். இவர், நெடுங்குன்றத்தில் உள்ள, 2,400 சதுர அடி நிலத்தை பதிவு செய்ய, தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலித்து பதிவு செய்ய, சார் - பதிவாளர் ரேவதி, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பத்திரப்பதிவின்போது, 2 லட்சம் ரூபாய் தருவதாகவும், மீதி 8 லட்சத்தை பத்திரம் வாங்கும்போது, தருவதாக கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவின்குமார், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று, தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்தனர். அப்போது, லஞ்ச பணத்தை வாங்கிய ரேவதியை, கையும் களவுமாக கைது செய்தனர். ரேவதிக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
நவ 14, 2025 07:47

சில மூஞ்சியெல்லாம் பாத்தாலே ஃப்ராடு களை தெரியுது.


Kalyanaraman
நவ 14, 2025 07:44

ஆண்மையற்ற கடும் தண்டனை அற்ற சட்டங்களே மிக முக்கிய காரணம். நமது சட்டங்களே நமது நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு அவலம் வேறு எந்த நாட்டிலாவது இருக்குமா???


Ramesh Sargam
நவ 14, 2025 07:29

இப்படி லஞ்சம் வாங்கி வாழ்வதற்கு பதில், வேலை செய்து பிழைப்பது எவ்வளவோ நல்லது.


Keshavan.J
நவ 14, 2025 07:26

பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்க தொடங்கினால் இந்த நாடு நாசமா போகும். இட ஒதுக்கீடு கேள்வி குறி ஆகிவிடும்.


raja
நவ 14, 2025 07:14

இனி என்ன இந்த அம்மாவுக்கு திருட்டு திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணம் படி பதவி உயர்வுடன் நல்ல வருமானம் உள்ள இடமாக மாறுதலில் செல்வார்....


rama adhavan
நவ 14, 2025 07:12

இந்த ரேட்டில் 50 பத்திரம் பதிந்தால் ஒரு கோடி ருபாய் லஞ்சமா? அம்மாடி. நாடு தாங்காது. இதற்கு முதல்வர் பதில் என்ன?


Kulandai kannan
நவ 14, 2025 07:12

ஈன, இழி பிறவிகள்


raman
நவ 14, 2025 07:09

லஞ்சம் இல்லாமல் பத்திரப் பதிவு இல்லை. இந்தமாவுக்கு வேற ஏதோ காரணம், டிபார்ட்மெண்டே போட்டுக் கொடுத்து இருக்கும். என்னமோ மற்ற அலுவலர்கள் லஞ்சம் வாங்காத மாதிரி.


V K
நவ 14, 2025 07:07

பாவம் இந்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு பாட்டி லுக்கு பத்து ரூபாய் துறை கண்ணுக்கு தெரியவில்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை