உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சார் பதிவாளர் மேஜையில் சிக்கிய ரூ.1 லட்சம்

சார் பதிவாளர் மேஜையில் சிக்கிய ரூ.1 லட்சம்

மயிலம்: மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அவரது மேஜையில் இருந்து ரூ.1 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் பொது மக்களிடம் ஆவண எழுத்தர்கள், புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, கடந்த 8 ம் தேதி மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், சார்பதிவாளர் வெங்கடேஸ்வரி மேஜை துணிக்கு அடியில் ரூ.1 ,00,000 பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வீர அப்துல்லா மேஜை அருகே ஜன்னலில் இருந்து ரூ.1,100ம்கேமரா ஆபரேட்டரிடம் கணேசன் மேஜை அருகில் இருந்த ஜெராக்ஸ் இயந்திரம் கீழ் ரூ.10,540ம்அலுவலக உதவியாளர் பாலசுப்ரமணியன் மேஜை அருகில் ரூ.2,200ம் செல்வம் என்ற புரோக்கரிடம் ரூ.300ம்சரவணன் என்ற புரோக்கரிடம் ரூ.8 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் சார்பதிவாளர் இருக்கைக்கு எதிரில் உள்ள அறையில் இருந்த பீரோவில் ரூ.8,200மும் உட்பட அலுவலகத்தில் கணக்கில் வராத மொத்தம் ரூ.1,30,340 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வெங்கடேஸ்வரி, வீர அப்துல்லா, பாலசுப்ரமணியன், கணேசன், புரோக்கர்கள் செல்வம், சரவணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.இதனைதொடர்ந்து, சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Rasheel
நவ 13, 2024 18:17

கேஸு முடியறதுக்குள்ள ரீடயர்ர்மென்ட் ஆகி பிப், பென்ஷன் வாங்கி நல்ல செட்டில் ஆகி விடுவார்கள்.


Rasheel
நவ 13, 2024 18:14

கிரிப்டோ அமைதி வழி நபர். சலுகை அந்த வகுப்பில் ஆனால்??


R S BALA
நவ 12, 2024 21:19

அவ்வப்போது இதுபோன்ற காமெடி செய்திகள் வருவதும் நன்றாகத்தான் இருக்கிறது..


நிக்கோல்தாம்சன்
நவ 12, 2024 21:17

வீர அப்துல்லா ஆத்தாடி பெரு ஒன்றே போதும் செம கலக்கல்


Sekar Times
நவ 12, 2024 20:12

இந்த மாதிரியான ஈனத்தனமான அதிகாரிகளின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து அவர்களை கூலிவேலை செய்து பிழைப்பு நடத்த வைக்கவேண்டும்


தமிழ்வேள்
நவ 12, 2024 20:05

300 ரூபாய் லஞ்சம் பிடிபட்ட செல்வம் காரணமாக அனைவரும் எஸ்கேப் ஆக சான்ஸ் அதிகம் உள்ளது...தப்பிக்க வைக்கும் நோக்கத்தில் தான் 300 ரூபாயையும் கேசில் இழுத்து விட்டது.


Beskiantony Dass
நவ 12, 2024 19:49

எப்படி எப்படினா ஏமாத்துறிங்க? நம்ப வச்சு ஏமாத்துறது...அரசு வேலை அதிக சம்பளம், ஆனால் இன்னமும் பத்தலை...


Venkateswaran Rajaram
நவ 12, 2024 19:02

இவர் பின்னால் 1000 சாமி படங்கள்


Balasubramaniam
நவ 12, 2024 18:49

அவர் சொல்லுவார். ஐ டோண்ட் கேர்


Anathaa
நவ 12, 2024 18:28

போங்கப்பா ஆறுமாசம் வீட்டுல இருந்துட்டு சம்பளத்துடன் திருப்பி வேலைக்கு வந்திருக்க,,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை