உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாரிசு அரசியல்: முதல்வர் ஸ்டாலின், ராகுல், தேஜஸ்வி படத்தை வெளியிட்டு அண்ணாமலை கிண்டல்!

வாரிசு அரசியல்: முதல்வர் ஸ்டாலின், ராகுல், தேஜஸ்வி படத்தை வெளியிட்டு அண்ணாமலை கிண்டல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வாரிசு அரசியலை கிண்டல் செய்யும் வகையில் பீஹாரில் ராகுலின் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின், தேஜஸ்வி பங்கேற்ற படத்தை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். பீஹார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில்குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜ சதி செய்வதாகவும், அதற்கு தேர்தல் கமிஷன் துணைபோவதாகவும் குற்றம்சாட்டி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பீஹாரில் கடந்த 17ம் தேதி முதல் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i06xeygs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் பங்கேற்க வரும்படி ஸ்டாலினை ராகுல் அழைத்தார். அதன்படி, தனி விமானத்தில் பீகார் சென்ற ஸ்டாலின், முசாபர்பூரில் நடந்த ராகுல் யாத்திரையில் பங்கேற்று பேசினார்இதையொட்டி, அண்ணாமலை ஒரு வீடியோவை வெளியிட்டு, கருத்து பதிவிட்டுள்ளார். ஹிந்தி பேசும் இளைஞர்களை தமிழகத்துக்கு வேலைக்கு அழைத்து வந்து பாஜவை வளர்க்க பார்க்கிறார்கள்; ஹிந்தி படிச்சா கக்கூஸ் தான் கழுவணும்; பான் பராக்தான் விக்கிறானுங்க; வடமாநிலத்து காரனுங்களுக்கு அறிவே இல்லை; எல்லாரும் முட்டாள்கள் என ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் பேசிய அவதூறு பேச்சுக்கள் மற்றும் பதிவுகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பீஹாரில் இருக்கிறார். நமது பீஹாரி சகோதர சகோதரிகளைப் பற்றி ஸ்டாலின், அவரது கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூறிய அநாகரிகமான கருத்துகளின் எவர்கிரீன் வீடியோ தொகுப்பை இணைத்துள்ளேன். ராகுலுடன் ஸ்டாலின் ஒரே மேடையில் பேசும்போது, அவரும் அவரது கட்சி தலைவர்களும் பீஹார் மக்களை பற்றி பேசிய இழிவான கேலி பேச்சுக்களை அம்மாநில மக்கள் முன்னிலையில் பெருமையுடன் மீண்டும் கூறுவார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

ஒரே படத்தில்...!

வாரிசு அரசியலை கிண்டல் செய்யும் வகையில் பீஹாரில் ராகுலின் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் பங்கேற்ற படத்தை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

இராம தாசன்
ஆக 28, 2025 19:36

நடை பயணம் என்று ஜீப்பில் போகிறார்கள்.. ஓ இதற்க்கு பெயர் தான் நடை பயணமா


Mahendran Puru
ஆக 28, 2025 06:02

இப்படியெல்லாம் போட்டி போட்டு காமெடி பண்ணக்கூடாது. பாஜகவில் வாரிசுகள் இல்லாத ஒரு மாநிலம் காட்ட முடியுமா? பக்கத்திலிருக்கும் கர்நாடகாவில் இன்னமும் எடியுரப்பாவா அவரது மகனா என்ற நிலையில் தொடங்கி ம பி, ராஜஸ்தான், பஞ்சாப் என்று போனால்......


Kasimani Baskaran
ஆக 28, 2025 04:07

மூன்று அறிவாளிகள்... இவர்கள் ஜனநாயகக்கொலை செய்வதில் நிபுணர்கள்.


நிக்கோல்தாம்சன்
ஆக 28, 2025 02:22

நெபொடிசும் downdown


T.sthivinayagam
ஆக 27, 2025 21:26

மத்திய உள்துறை பிரதமர் அமித்ஷா அவர்கள் மகன் ஜெயாஷா பற்றி பேச அண்ணாமலைக்கு தைரியம் இருக்குமா அல்லது ராஜ்நாத் சிங் அவர்கள் மகன் உபி மாநில தலைவர் பற்றி பேச தைரியம் இருக்குமா என்று மக்கள் கேட்கிறார்கள்.


vivek
ஆக 27, 2025 21:46

மக்கள் கேட்கவில்லை. உமது கொத்தடிமை மூளை கேட்கசொல்லுது


ஆரூர் ரங்
ஆக 27, 2025 21:54

கட்சிக்குள் குடும்பங்கள் இருக்கலாம். ஆனா கட்சியே குடும்பத்தின் கையில் இருப்பதுதான் வாரிசு அரசியல் அசிங்கம்.


Nanchilguru
ஆக 27, 2025 21:10

இதில் ஒருவரை தவிர மற்றவர்களின் கதை முடிந்தது


Modisha
ஆக 27, 2025 20:48

இங்கே சொல்லி என்ன பயன் . பீகார் மக்களிடம் சென்று திமுககாரங்க பீகார் மக்களை என்னென்ன பேசினார்கள் என்று மொழி பெயர்த்து சொல்லுங்கள் . நல்ல பயன் தரும். அப்படியே ஹிந்து விரோத பேச்சுக்களையும் மொழி பெயர்த்து சொல்லலாம் , தமிழ் ஹிந்துக்களை விட அங்கே ரோஷம் அதிகம்.


kumaran
ஆக 27, 2025 20:30

அண்ணாமலை அவர்கள் இந்த கேள்வியை முதுகெழும்புள்ள தலைவர்களிடம் கேட்க வேண்டும்.இங்கே வீரமாக பேசுவதும் அங்கே போனால் அடக்கி வாசிப்பதும் என்றால் கொள்கை இல்லாதவர்களுக்கு துதிபாடிகள் கொடுக்கும் தைரியம்


Oviya Vijay
ஆக 27, 2025 20:30

ஒருவரை கேலி கிண்டல் செய்வதற்கு முன்னர் நாம் முதலில் மற்றவரை கேலி கிண்டல் செய்ய தகுதியான யோக்கியமான ஆளா என்று நினைத்துப் பார்க்க வேண்டும்... மற்றவரை கேலி கிண்டல் செய்வது போல் நாமும் தவறை செய்திருப்போமாயின் நம்மை திருப்பி கேட்பரே என்ற சுயபுத்தியாவது இருந்திருக்க வேண்டும்...


oviya Ajith
ஆக 27, 2025 21:00

சம்பந்தமில்லாமல் தொளபதி ஜோசஃப் விஜய் பற்றிய சுய விமர்சனம் இங்கு எதற்கு?


vivek
ஆக 27, 2025 20:28

இந்த ஓவியரு நேத்து.தான் எல்லாரும் திட்டினாங்கன்னு தேம்பி தேம்பி அழுதாறு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை