உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது போன்ற பேச்சுகளை தவிர்த்திருக்கலாம்; ஆபாச பேச்சு குறித்து பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் குட்டு

இது போன்ற பேச்சுகளை தவிர்த்திருக்கலாம்; ஆபாச பேச்சு குறித்து பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் குட்டு

சென்னை: சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியதாக பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது. பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இது போன்ற பேச்சுகளை தவிர்த்திருக்கலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, கட்சி பொறுப்பில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.இருப்பினும், இது தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. கடந்த முறை, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது.அப்போது சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்தது.பின், இந்த வீடியோ மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதாக தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்., 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது. அவருக்கு எதிராக தனிநபர் புகார் தாக்கல் செய்து கொள்ளலாம். புகார்களை போலீசார் முடித்து வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரலாம்.பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சை தவிர்த்திருக்க வேண்டும். போலீசார் குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Ragupathy
செப் 17, 2025 18:12

இது ஒரு தீர்ப்பு...ஒருவருடம் சிறையில் தள்ளியிருக்கவேண்டும்...இந்தத் தீர்ப்பு தரவேண்டும் என்றால் எதற்காக தானாக முன் வந்து வழக்கை எடுக்க வேண்டும்...நீதித்துறை மீதும் நம்பிக்கை போய்விட்டது...


ராமகிருஷ்ணன்
செப் 17, 2025 10:28

உலக்கையால் வாயிலே குத்த வேண்டும் என்று தண்டனை தந்தால் கொஞ்சம் மன ஆறுதல் கிடைக்கும்


Barakat Ali
செப் 17, 2025 09:55

பேசியது குற்றம் என்றால் பேசியதற்கு தண்டனை கிடையாதா ????


சந்திரன்
செப் 17, 2025 08:15

எதுக்கு தானா முன்வந்து வழக்கு எடுக்கிறாங்க தெரியுமா வாசகர்களே... இதுக்குத்தான் கேச போடு துட்ட பாரு... உட்ரு


அப்பாவி
செப் 17, 2025 07:06

கூடு எதுக்கு? ஒரு மூணுமாசமாவது உள்ளே தள்ளி மந்திரி பதவியை பறிச்சிருக்க வேணாமா? காமெடி பண்றாங்க.


Kasimani Baskaran
செப் 17, 2025 04:17

இவனுக்கெல்லாம் மாப்பு கொடுப்பது சுத்த பயித்தியக்காரத்தனம். திராவிட அசிங்கங்களை ஒரு வேளை பிரபலப்படுத்த நீதிமன்றம் கை காட்டுகிறதோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது. இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு தினமலர் கூட ஒரு தலையங்கம் எழுதலாம். திராவிடத்தின் தோற்றம் படு அசிங்கமானது என்பதை உலகம் - குறிப்பாக உடன்பிறப்புகள் - அறிவது மிக அவசியம்.


Rajarajan
செப் 17, 2025 03:10

புலி வரும் என்று பார்த்தால், என்னத்த சொல்ல.


Ravi Ram
செப் 17, 2025 00:11

நடிகை கஸ்தூரிக்கு சிறை பொன்முடிக்கு குட்டு நீதிபதியாரெய் best பேஷ்


Modisha
செப் 16, 2025 23:05

தயவுசெய்து இதுபோல் இனிமேல் வருடத்துக்கு ஐந்து முறைக்கு மேல் பேசாதீர்கள்- கடும் கண்டனம்.


subramanian
செப் 16, 2025 23:04

இதே நீதிபதி யின் குடும்பம் பற்றி இழிவாக பேசினாலும் , நீதிமன்றம் இப்படி பேசுவதை தவிர்த்து இருக்கலாம் என்று சொல்லுமா?


புதிய வீடியோ