உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரிடம் ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி!

முதல்வரிடம் ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி!

சென்னை: இண்டி கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்.துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தேவையான உறுப்பினர் எண்ணிக்கை இருப்பதால், அவர் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.எனினும், எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று சென்னையில் திமுக கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:துணை ஜனாதிபதி பதவிக்கு சுதர்சன் ரெட்டி தகுதியானவர். இந்திய ஜனநாயகத்தை காக்கவும், மக்களாட்சியை காக்கவும் அரசியல் சாசனத்தை காக்கவும் சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறாா். தமிழக மக்களின் உணர்வை மதிக்கக்கூடியவர். சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். தமிழர் என்ற முகமூடி அணிந்து ஆதரவு கேட்கிறார்கள். அதற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.அதைதொடர்ந்து சுதர்சன் ரெட்டி பேசியதாவது:கல்வி, சுகாதாரத்தில் நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. தனித்துவமான கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை ஆகியவற்றால் தமிழகம் சிறந்து விளங்குகிறது.சமூக , பொருளாதார கொள்கைகளை வகுப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து வரும் போதெல்லாம் முதல்வர் போராடி வருகிறார். கூட்டாட்சி தத்துவத்தை காப்பதில் முன்னோடியாக விளங்குகிறார் முதல்வர். தொலை நோக்கு பார்வையிலும் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது தமிழகம்.இன்றைய நிலையில் கூட்டாட்சிக்கு மட்டுமல்ல அரசியலைப்புக்கே ஆபத்து வந்துள்ளது. துணை ஜனாதிபதியாக எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் அரசியலமைப்பை காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.இவ்வாறு சுதர்சன் ரெட்டி பேசினார்.திமுக எம்பிக்கள், கூட்டணி கட்சியினர் பலர் நிகழ்ச்சியில் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

xyzabc
ஆக 24, 2025 23:36

தேச பிரிவினை, மொழி பிரிவினை, ஹிந்துமத பிரிவினை என்று பலவற்றை திரும்ப திரும்ப காட்டுகிறது. தமிழகத்தில் இ வி எம் இயந்திரங்கள் கூட தி மு க விற்கே வோட்டை போடுவதால் இந்த பரிதாப நிலை. தமிழகத்த காப்பதுவது கஷ்டம். மக்கள் இலவசங்களில் ஊறி விட்டனர். unbelievable loan accumulated by electricity, transport departments. no one can surpass drama skills of dmk. people are gone blind.


Kjp
ஆக 24, 2025 23:06

இனம் இனத்தோடு தான் சேரும் இதுல என்ன தப்பு இருக்கிறது. திராவிடம் முக்கியம் தமிழன் அப்புறம்.


V Venkatachalam
ஆக 24, 2025 22:28

திருட்டு பிள்ளையை பெற்ற முத்துவேல், தத்தி பிள்ளையை பெற்ற கருணாநிதி. இதுல என்ன பெரீசா பீத்திக்கிறதுக்கு இருக்கு. ராமசாமி நாய்க்கனுக்கு யுனெஸ்கோ விருது வாங்கி குடுத்த பித்தலாட்டம் மாதிரி தானே இதுவும்..


D Natarajan
ஆக 24, 2025 21:21

இது ஒன்று போதும் . 2026 ல் தோற்பதற்கு


திகழ்ஓவியன்
ஆக 24, 2025 21:16

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அவருக்கு 40 MP அப்படியே சுளையாக வோட்டு இது தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்


Kjp
ஆக 24, 2025 23:03

அப்போ சுதர்சன ரெட்டி ஜெயிச்சிருவாருங்கிறீங்க.. மக்களவைத் தேர்தலில் பிஜேபியும் அதிமுகவும் தனித்தனியே நின்றதால் 40 உங்களுக்கு கிடைத்தது. சட்டசபை தேர்தலில் உங்களுக்கு ஆப்பு தான்.


ராமகிருஷ்ணன்
ஆக 24, 2025 20:29

40 தண்டங்களும் உபயோகப் படுகிறார்கள். ஆனால் ரிசல்ட் தண்டம். தமிழ், டுமிழன் என்று ஏமாற்றி திரியும் திமுகவுக்கு அழியாத அவமானம்


எவர்கிங
ஆக 24, 2025 20:14

மனவாடு


வாய்மையே வெல்லும்
ஆக 24, 2025 19:57

சுதர்சன் ரெட்டி காரு பாக உன்னாரா ? மன கோபாலபுரம் மணவாடு ஓங்கோல் பந்துலு. மீகே மன அந்தரிலோன ஆதரவுலு. லோபல ரண்டி போஜனம் செய்கொண்டு போதாமு


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2025 19:55

காடு பொட்டக்காடு செங்காத்து வீசும்காடு என்று பாட்டு வரிகள் போல பாடிப்பார்க்கிறேன் , வாடு மணவாடு , வீடு இக்கட வச்சாடு என்று தமிழக முதல்வரின் தாய்மொழியில் பாடி பார்க்கலாம்


Murugesan
ஆக 24, 2025 19:36

ஓங்கோல் தெலுங்குதேச மனவாடு, தமிழனை ஏமாற்றி தமிழக வளத்தை சூறையாடி திருடி தின்கிற துரோக திருடனுங்களுக்கு பக்கத்து வீட்டு மனவாடு பாசம்


நிக்கோல்தாம்சன்
ஆக 27, 2025 06:25

ஆனா தமிழர்களுக்கு அவனோட குடும்பத்து டிவி சேனல்களை பார்த்து, அவன் தவிர்க்கும் படத்தை பார்த்து அவன் சொல்லும் பொய்யய்யும் ,புறத்தையும் வேதவாக்காக நினைத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை