உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீர்வரத்து கிடுகிடு உயர்வு: செம்பரம்பாக்கம் நீர்மட்டம் 13.38 அடி!

நீர்வரத்து கிடுகிடு உயர்வு: செம்பரம்பாக்கம் நீர்மட்டம் 13.38 அடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையின் முக்கிய நீர் ஆதாரமான, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து, தொடரும் கனமழையால் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுவது செம்பரம்பாக்கம் ஏரி. தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில் அதிகபட்சம் 24 அடி வரை தண்ணீர் தேக்க முடியும். கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலையில் 260 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 1080 கன அடியாக உயர்ந்துள்ளது.ஏரியின் நீர்மட்டம் தற்போது 13.38 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் கனமழை இருக்கும் என்பதால் வரும் நாட்களிலும் ஏரிக்கு நீர் வரத்து இருக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rama adhavan
அக் 15, 2024 22:43

கப்பல் வர கடலுக்குள் ரோடு போட தூர் வாரி ராமர் பாலத்தை இடிக்க எத்தனித்த இந்த திராவிட மாடல் ? அரசால் இந்த பெரிய ஏரியை குறைந்த நீர் உள்ள போது தூர் வாரி எடுக்கும் மண்ணை கரையை பலப்படுத்தவும் கரையை உயர்த்தவும் பயன்படுத்த இயலாதா?


sundarsvpr
அக் 15, 2024 19:30

உபரி நீர் கடலில் கலக்கும், தடுக்க இயலாது. மனிதனின் ஆத்ம அறிவு ஆண்டவனுடன் மோதும் அளவிற்கு உள்ளது. அறிவை வைத்து ஏரியின் நீரை புதிய ஏரி அமைத்து காப்பாற்ற இயலாதா? ஆக்க வழியில் செய்திட இயலும். அரசு முயற்சி செய்யவேண்டும்.


சமீபத்திய செய்தி