ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி யாருடையது பா.ஜ., - எம்.பி.,க்கு சம்மன்
சென்னை:லோக்சபா தேர்தலின்போது, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிடிபட்ட, நான்கு கோடி ரூபாய் விவகாரம் தொடர்பாக, புதுச்சேரி பா.ஜ., - எம்.பி., செல்வகணபதி உட்பட மூவருக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அப்போது, தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம், 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள், பா.ஜ., நிர்வாகிகள் நயினார் நாகேந்திரன், கேசவவிநாயகனிடம் விசாரித்துள்ளனர்.இந்த பண விவகாரம் தொடர்பாக, புதுச்சேரி பா.ஜ., - எம்.பி., செல்வகணபதிக்கு, அக். 25ல், சென்னை எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.அதேபோல, ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அது தொடரபாக, சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சூரஜ், பங்கஜ் லால்வானி ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக, சம்மன் அனுப்பி உள்ளனர்.