உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஷ்மீர் தாக்குதல்: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி; யார் அனுமதிக்காக காத்திருக்கிறது போலீஸ்?

காஷ்மீர் தாக்குதல்: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி; யார் அனுமதிக்காக காத்திருக்கிறது போலீஸ்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி மீது வழக்கு பதியலாமா என்பது பற்றி சட்ட ஆலோசனை கேட்டு காத்திருக்கின்றனர், கோவை போலீசார்.காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் பெயர்களைக் கேட்டு, ஹிந்துவா என்பதை உறுதி செய்விட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக, தி.க., மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவாளரான சுந்தரவல்லி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியது. அந்தப் பதிவில் அவர் ,'காஷ்மீரில் சுற்றுலா சென்றவர்களை இஸ்லாமியர்களா என ஆடையை கழற்றி பார்த்துவிட்டு சுட்டுக் கொன்றவர்கள் ராணுவ உடையில் துப்பாக்கியோடு சென்று சுட்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பும் ராணுவத்தை வைத்து பா.ஜ., இதை செய்திருக்கிறது' எனக் கூறியிருந்தார். இப்படி மத்திய அரசு மீதும், ராணுவம் மீதும் அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்தன. அவர் மீது தமிழகம் முழுவதும் வெவ்வேறு மாவட்டங்களில் பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வழக்கு பதியப்படவில்லை. 'வழக்கு பதியலாமா' என்று சட்ட ஆலோசனை கேட்பதற்காக, அரசு வழக்கறிஞருக்கு புகாரை அனுப்பி உள்ளோம்' என்று போலீசார் கூறுகின்றனர். மத்திய அரசு மீதும், ராணுவம் மீதும் இப்படி அப்பட்டமான அவதுாறு பரப்பியவர் மீது வழக்கு பதிவதற்கு, சட்ட ஆலோசனை கேட்பதை போன்ற முட்டாள்தனம் எதுவுமில்லை. இதுபோன்று, அசாம் மாநிலத்தில் பேசிய ஒரு எம்.எல்.ஏ., மீது அந்த மாநில அரசு தேச துரோக சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்திருக்கிறது.ஆனால், தமிழகத்திலோ, சட்ட ஆலோசனைக்காகவும், உயர் அதிகாரிகளின் கண் அசைவுக்காகவும் போலீசார் காத்திருக்கும் அவலம் இருக்கிறது.இதற்கிடையே, சுந்தரவல்லி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று இணையத்தில் நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 135 )

நிவேதா
மே 26, 2025 21:38

She would have been arrested by NIA.


Sainathan Veeraraghavan
மே 20, 2025 19:40

விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவி கைது செய்த விடியாத திமுக அரசு சுந்தரவல்லி மீது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதற்கு வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்கிறது. சுந்தரவல்லிக்கு 50 வருட கடுங்காவல் தணடனை அளிக்க வேண்டும். கேவலமான அரசியல் திமுக செயகிறது. நாட்டு பற்று இல்லாத திமுக.


Sivasankaran Kannan
மே 19, 2025 09:01

23ம் திராவிட புலிகேசி என்ன செய்வார்.. சொந்த மூளை கெடயாது..


Narayanan
மே 14, 2025 14:35

மத்திய அரசை யார் குற்றம் சொன்னாலும் சர்வாதிகார ஸ்டாலின் நடவடிக்கை ஏதும் எடுக்கமாட்டார். அதே அவர் அரசைப்பற்றி எதிராக பேசினாலும் யார் பேசினாலும் வயது மூப்பு என்றும் பாராமல், எந்த காரணமும் சொல்லாமல் கைது செய்ய சொல்வதில் அவரும் அவர் மகனும் கில்லாடிகள்


vee srikanth
மே 14, 2025 12:41

சாலையை சரியா போட மாட்டாங்க - ஆனா தண்டம் மட்டும் வாங்குவாங்க


Naga Subramanian
மே 13, 2025 08:03

இந்த அம்மணியின் நச்சரிப்பு தாங்க முடியல .... ரெண்டு ட்..ரோ..ன் அனுப்பி என்னன்னு கேளுங்க


V.Ravichandran
மே 12, 2025 18:44

மோடியை வெட்டுவேன் என்று கூரியவர்கள் உல்லாசமாக உலாவருவார்கள் , ஸ்டாலின் எதிர்த்து பேசியாரர்களின் போஸ்டில் லைக் போட்டால் 200 போலீஸ் காரர்கள் வருவார்கள் , கஞ்சா , கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கலுக்கு salute அடிப்பார்கள் , இதுதான் இந்த தமிழ் நாடு போலீஸ் .


sethusubramaniam
மே 11, 2025 21:22

சுந்தரவல்லி என்ன சவுக்கு சங்கரா ? இல்லே பாஜக காரியா / .இல்லே முதலமைச்சரை விமர்சிச்சாளா ? உடனே கைது செய்ய. மோடிக்கு எதிராதானே பேசினா ? ஜால்ரா போலீசுக்கு , கையாலாகாத அமைச்சர் தலைவரா இருக்கறவரைக்கும் இப்படித்தான் இருக்கும்.


Bala
மே 11, 2025 07:03

After 2026 elections, if govt changes in TN, this lady Sundaravalli will be taken to task. Case will be filed and taken to Tihar not just in Tamilnadu Jail. She has to face the consequences for speaking against the unity and integrity of the country and the prevailing truth at Pehalgam at this time of conflict between India & Pak. After 2026 elections, there is every chance this lady might flee the country fearing arrest. Central and State agencies to please take note of this now itself and teach her a lesson.


veeramani
மே 10, 2025 09:44

ஏன் ஐ ஏ மூலம் வழக்கு படிந்து திஹார் கொண்டுசென்று விசாரிக்கலாம் பாரத இறையாண்மைக்கு எதிராக எவர் பேச்சு கருத்து எழுத்து இருந்தாலும் பொறுத்துக்கொள்ளமுடியாது


முக்கிய வீடியோ