உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலத்தை அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், கிராம உதவியாளர் கைது

நிலத்தை அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், கிராம உதவியாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் நிலத்தை அளந்து சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் பத்மநாபன்(71). ஓய்வு பெறற ஆசிரியர். இவருக்கு சொந்தமான நிலத்தை அளக்க அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.இது தொடர்பாக நீண்டகரை கிராம உதவியாளர் ராஜாவை தொடர்பு கொண்ட போது, நிலத்தை அளந்து சான்று தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.லஞ்சம் அளிக்க விரும்பாத ஸ்ரீபத்மநாபன், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். டிஎஸ்பி சால்வன் துரை ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் மதிப்பு நோட்டுகளை சர்வேயர் முகமது அஜ்மல் கான் மற்றும் ராஜாவிடம் ஸ்ரீபத்மநாபன் கொடுத்தார். அதனை வாங்கிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Arinyar Annamalai
மே 11, 2025 00:18

இவனுங்களையெல்லாம் இந்திய எல்லைக்கு ஏன் அனுப்பக் கூடாது ?


Padmasridharan
மே 10, 2025 06:31

இந்த அதிகார பிச்சைக்கார பயங்கரவாதியின் புகைப்படம் கிடைக்கலயா சாமியோவ். .


பல்லவி
மே 10, 2025 00:31

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்ற முதுமொழி ஞாபகம் வருகிறது


பாண்டியன்
மே 09, 2025 23:11

சர்வ நிச்சயம் லஞ்சம் வாங்குகிறார்கள். மாட்டியவர் ஏமாளி


மீனவ நண்பன்
மே 09, 2025 22:59

எல்லையில் போர் நடந்தாலும் ராணுவ வீரர்கள் சண்டையிட்டு இறந்தாலும் இவர்களுக்கு லஞ்சம் வாங்காமல் இருக்க முடியாது ..கேவலமான ஈன பிறவிகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை