உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவி உடையணிந்து சூரிய நமஸ்காரம்: 2வது நாளாக விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம்

காவி உடையணிந்து சூரிய நமஸ்காரம்: 2வது நாளாக விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 2வது நாளாக தியானத்தில் ஈடுபட்டார். முன்னதாக அதிகாலையில் காவி உடையணிந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்ததுடன், சூரிய நமஸ்காரமும் செய்தார்.கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி தன் மூன்று நாள் தியானத்தை நேற்றிரவு (மே 30) துவக்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு 'ஏசி' வசதியுடன் தயார் செய்யப்பட்டது. 2வது அறையில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் தங்கவும், மற்றொன்று பிரதமருக்கு உணவு தயாரிக்கவும் ஒதுக்கப்பட்டன. இரவு முழுவதும் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, அதிகாலை வரை தொடர்ந்து தியானம் செய்தபடி இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yvdtppul&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று அதிகாலை 5 மணிக்கு காவி உடையணிந்து தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்த மோடி, காலை 5:55 மணிக்கு சூரிய உதய காட்சிகளை கண்டு ரசித்தார். அதன்பிறகு ஸ்ரீபாத மண்டபத்திற்கு சென்ற பிரதமர் மோடி, 10 நிமிடம் அமர்ந்து சூரிய நமஸ்காரம் செய்தார். பின்பு காலை 7:15 மணிக்கு மீண்டும் தியான மண்டபத்திற்குள் சென்று தனது 2வது நாள் தியானத்தை துவங்கினார்.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பயணியரை தடுக்க வேண்டாம் என, பிரதமர் அலுவலகம் கூறியிருந்தாலும், நேற்று காலை 11:00 மணிக்கு பின் படகுகள் இயக்கப்படவில்லை. ஆனால், இன்று விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தியானம் செய்யும் மண்டப பகுதி தவிர மற்ற பகுதிகளுக்கு செல்லலாம். அவர்களின் முகவரி உட்பட பல்வேறு தகவல்களை பதிவு செய்து, கடும் சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Karthi Keyan
மே 31, 2024 22:32

பத்து வருடத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தும் தைரியம் இல்லை. இந்திய மீனவர்களை தாக்கி, சீன, அமெரிக்க இராணுவதுத்துடன் கூட்டு பயிற்சி செய்யும் இலங்கையை கண்டிக்க முடியவில்லை. ஜனாதிபதி, தேர்தல் கமிசன், சிபிஐ அமைப்புகளை டம்மியாக்கியாச்சு பிரதமர் வேலை போட்டோ சூட் செய்வதும் ரயில் நிலையங்களில் கொடி அசைப்பதும் என ஆகிவிட்டது PMCares வந்த நிதி பற்றிய வெள்ளை அறிக்கை இல்லை. பணமதிப்பிழப்பு மூலம் கைப்பற்றிய சுவிஸ் வங்கிகளில் இருந்து மீட்டு கருப்பு பணம் பட்டியல் இல்லை.


J.V. Iyer
மே 31, 2024 16:30

எப்படி 132 ஆண்டுகள் கழித்தும் விவேகானந்தரை போற்றுகிறோமோ, அப்படி நூறு, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மோடிஜியை பாரத மக்களுடன், உலக மக்களும் நினைவில் வைத்து போற்றுவார்கள். நல்லவர்களுக்கு மோடிஜி கடவுள். தீயவர்களுக்கு சிம்ம சொப்பனம்.


venugopal s
மே 31, 2024 14:40

கீழ்ப்பாக்கம் போக வேண்டியவர் வழி தவறி கன்னியாகுமரி போய் விட்டாரோ?


Vivekanandan Mahalingam
மே 31, 2024 14:31

RSS ரானடே அவர்களின் முயற்சியால் எழுப்பப்பட்ட மண்டபம் - இதில் அமர்ந்து தியானம் செய்ய முழு தகுதி பெற்றவர் மோடி


Anand
மே 31, 2024 13:33

இவ்விடமும் ஒரு அல்லக்கை விஷத்தை கக்குகிறது.


தமிழ்வேள்
மே 31, 2024 12:31

ஒரு ராஜரிஷி , மஹனீயரின் ஆளுகையில் பாரதம் உள்ளது -என்பதே பெருமைக்குரிய விஷயம் ....ராஜரிஷி ஜனகர் , ராஜரிஷி விஸ்வாமித்ரர் பாரம்பரியம் இன்னும் தொடர்கிறது ...இது சனாதனத்தின் மகத்துவம் .....[ஆனால் திராவிஷத்துக்கு சுட்டுப்போட்டாலும் இதெல்லாம் மண்டையில் ஏறாது ......]


கத்தரிக்காய் வியாபாரி
மே 31, 2024 12:06

அமைதிக்கு பின் புயல். ஜூன் 4க்கு பின் அடுத்த அவதாரத்தில் ருத்ர தாண்டவம் ஆட போகிறார். லஞ்சத்தில் திழைக்கும் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளுக்கு கழுவில் ஏற்றும் தண்டனை வரும். மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்க போகிறார்கள்.


A1Suresh
மே 31, 2024 11:57

சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக்கொண்டு த்யானம் செய்யவேண்டும் என பகவத் கீதையில் கண்ணன் எம்பெருமானே இதனை கொண்டாடுகிறார்


A1Suresh
மே 31, 2024 11:54

தியானம் என்பது ஆகமம் கூறும் ஏழு அங்கங்களுள் ஒன்றாகும். புராதன காலத்தில் ரிஷிகள் கடைபிடித்த சாதனை தான் அது. ஸ்ருஷ்டிஶ்ச ப்ரளயஶ்சைவ தேவதானாம் யதார்சனம் | ஸாதனம் சைவ ஸர்வேஷாம் புரஶ்சரணமேவ ச || ஷட்கர்ம ஸாதநம் சைவ த்யானயோகஶ்சதுர்வித: | ஸப்தபிர்லக்ஷணைர் யுக்தம் ஆகமம் தத் விதுட்புதா: || என்றது வாராஹி தந்த்ரம். இதன் பொருள் யாதெனில் ஸ்ருஷ்டி, ப்ரளயம், தேவதார்சனம், ஸர்வஸாதநம், புரஶ்சரணம், ஷட்கர்மம் மற்றும் தியானம் ஆகிய ஏழும் ஆகமம் கூறும் லக்ஷணங்கள். இதிலே தியானயோகமானது ஹடயோகம், ராஜயோகம் என்றிப்படி நாலு விதங்களாம்.


Ramesh Sargam
மே 31, 2024 11:46

இவர் தியானம் செய்கிறார் நாட்டு மக்களுக்காக, நாடு நலம்பெறவேண்டும் என்று. ஆனால் அறிவிலிகள் எதிர்க்கட்சியினர் இந்த தியானத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த முயன்று தோற்றார்கள். ஏன் என்றால், இவர் ஆட்சியில் நாடு நலம் பெற்றுவிட்டால், அவர்கள் இனி அரசியலில் குப்பைகொட்ட முடியாமல் போயிவிடும், அதற்காக இவர் தியானத்தை எதிர்த்தார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை