உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.வி. சேகருக்கு ஒரு மாத சிறை உறுதி

எஸ்.வி. சேகருக்கு ஒரு மாத சிறை உறுதி

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேசிய வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது.பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, 2018-ல் சமூக வலைதளங்களில், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக, நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், எஸ்.வி.சேகர் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9tjukdhj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கை, சென்னையில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ-.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும், 15,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில், இன்று (ஜன.,02) எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது. 'சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய 90 நாட்கள் அவகாசம் வழங்கி, அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது' என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Dharmavaan
ஜன 02, 2025 18:05

திமுக என்பதால் செந்தில் பாலாஜி போல் சிறையில் வசதி


sankaranarayanan
ஜன 02, 2025 17:03

ஆண்டவா நான்தான் கட்சி தொண்டனாகிவிட்டேனே இன்னும் எனக்கு இந்த சோதனை எதற்கு மீண்டு வர வர நான் யாரை சந்திக்க வேண்டும் செய்கிறேன் உடனே இனி பெண்கள் பாலியலைப்பற்றி பேசவே மாட்டேனே


selvelraj
ஜன 02, 2025 15:44

பின் புலம் கட்சி இருக்கும் தைரியத்தில் வாய்க்கு வந்ததை பேசி வருகின்றார்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 02, 2025 15:29

தண்டனையில் இருந்து தப்பத்தான் கழக ஆதரவாளரா மாறி ஊதினார் .... இருந்தாலும் கழகம் கண்டுக்கலை போல ... ஒருவேளை இந்த ஒரு மாதம் ன்பதை குறைந்த பட்சமானதாக ருக்கும் ...


maan
ஜன 02, 2025 14:24

ஐயகோ… கடந்த சில மாதங்களாக அண்ணாமலையையும், பிஜேபியையும் திட்டி திமுகவை தாஜா பண்ணியது வீணாகி விட்டதே


karutthu kandhasamy
ஜன 02, 2025 14:14

எஸ் வீ சேகர் இப்பொழுது தி மு க வில் இணைந்து விட்டதால் அவருக்கு எந்த தண்டபையும் வழங்காமல் தி மு க காப்பாற்றிவிடும் இதுவே ஒரு சுப்பன் குப்பன் என்றால் இந்நேரம் அவர்கள் சிறையில் இருப்பார்கள் கேட்டால் இது தான் திராவிடமாடல் அரசு என்பார்கள்


தமிழன்
ஜன 02, 2025 17:48

மூளை இருக்குமா என்ற சந்தேகம் உன் பதிவில் மறுபடியும் நிரூபணம் ஆகிறது


sundar
ஜன 02, 2025 14:01

அவதூறு பேசியது நிரூபிக்கப்பட்டு விட்டது இன்னும் என்ன மேல் முறையீடு ? புடிச்சு உள்ள போடுங்க சார்


தமிழன்
ஜன 02, 2025 17:50

மூன்று ஆண்டு தண்டனை கொடுத்தால்தான் இனி சங்கிகள் பெண்களை அவதூறாக பேச, வீடியோ எடுக்க பயப்படுவார்கள்


புதிய வீடியோ