உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமஸ்கிருதத்தை எதிர்ப்பதால் தமிழ் வளர முடியாது; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

சமஸ்கிருதத்தை எதிர்ப்பதால் தமிழ் வளர முடியாது; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தொண்டாமுத்தூர்: கோவை பேரூர் ஆதினம் 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், நூற்றாண்டு நிறைவு புகழரங்கம் விழா, பேரூர் ஆதின மடத்தில் உள்ள முத்தமிழரங்கத்தில் நேற்று நடந்தது. பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்து ஆசியுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, பொன்னாடை போர்த்தி, மயில் தோகை மாலை மற்றும் தலைப்பாகை அணிவித்து, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கவுரவித்தார். தொடர்ச்சியாக, 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் திருவுருவ படத்தை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து வழிபட்டார். விழா நிறைவடைந்த பின், பேரூர் திருமடத்தில் உள்ள சாந்தலிங்கர் சன்னதியில் வழிபாடு நடத்தினார். இவ்விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இறைவன் முன் அனைவரும் சமம். இறைவன் என்பதை உணரத்தான் முடியும். கண்ணால் பார்க்க வேண்டும் என்றால் இந்த யுகம் நமக்கு போதாது. பிரதமர் மோடி, 25 ஆண்டு காலம், முதல்வராக, பிரதமராக இருக்கிறார். நான் பல பிரதமர்களுடன் பழகியுள்ளேன். மோடி எப்போதும், திட்டங்கள் எல்லாம் முறையாக செயல்படுகின்றதா, அவ்வாறு செயல்படும் திட்டங்களின் பயன்கள் சாதாரண குடிமகன்களுக்கு எந்த அளவு சென்றடைகிறது என்பதை பார்க்கிறார். அதனால்தான், மகத்தான வெற்றி பெறுகிறார். சமஸ்கிருதத்தில் சொன்னால்தான் செவி கொடுத்து கேட்பாரா, தமிழில் சொன்னால் கேட்க மாட்டாரா என பலருக்கு சந்தேகம் உள்ளது.இறைவன், சமஸ்கிருதத்தில் வழிபடுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை. தமிழில் வழிபட வேண்டாம் எனவும் சொல்லவில்லை. சமஸ்கிருதத்தை எதிர்த்துப் பேசுவதன் மூலம், தமிழ் ஒருபோதும் வளர முடியாது. தமிழ் ஒரு தீண்டத்தகாத மொழி என சொல்லி, சமஸ்கிருதம் ஒருபோதும் வளர முடியாது. இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில், பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், கே.எம்.சி.ஹெச்., தலைவர் நல்லா பழனிசாமி, ரூட்ஸ் நிறுவன இயக்குனர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Padmasridharan
அக் 30, 2025 10:05

தமிழ்"ல இருக்கிற "ழ" வ தமிழ்நாட்டு மக்கள் சரியா உச்சரிக்க என்ன வழி சாமி. .


Palanisamy T
அக் 29, 2025 16:53

1. நன்றிக் கடனுக்காக இதைச் சொல்ல இங்கு வந்தீர்களா? நீங்கள் சொல்கின்றீர்கள். தமிழகத்தில் சமஸ்கிருதம் ஹிந்தி மொழியை தமிழர்கள் எதிர்க்கின்றார்கள் என்று. அதையும் கொள்கையளவில். மற்ற மொழிகளை அவர்கள் எதிர்க்கவுமில்லை. இங்கு அதற்க்கு அவசியமுமில்லை. மற்ற மொழிகள் நிறைய பேசும் மக்கள் தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட மிக அதிகமானோர் வாழ்கின்றார்கள். இந்த உண்மையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன். 2.ஆங்கிலமொழியின் துணையோடு முன்பெல்லாம் அடிக்கடி சமஸ்க்ருதப் பாடல்களை பாடி மகிழ்ந்து இறைவனை வணங்கினேன். மறைமலை அடிகளார் அவர்கள் எழுதிய நூட்கள், மற்றும் சைவநெறி நூட்களைப் கண்டப் பின்பு இப்போது உண்மையை கொஞ்சம் அறிந்துக் கொண்டேன். தெய்வீக திருமுறைப் பாடல்களின் மூலாமாக இப்போது இறைவனை வணங்குகின்றேன். அவனையும் இப்போது கொஞ்சம் உணர்கின்றேன். மேலும் தமிழ் சமஸ்க்ருதைவிட உயர்ந்தமொழி. அதற்கான சாட்சியே நம் திருமுறைப் பாடல்கள். அதுவொன்றே போதும்


தலைவன்
அக் 29, 2025 16:52

தமிழ் ஒரு தீண்டத்தகாத மொழி என சொல்லி, சமஸ்கிருதம் ஒருபோதும் வளர முடியாது. இவ்வாறு அவர் பேசினார்


மனிதன்
அக் 29, 2025 15:09

அய்யா... தமிழைவிட சமஸ்கிருதத்துக்கு பத்து மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கி அதை வளர்க்க பாடுபடுகிறீர்களே யாருக்காக வளர்கிறீர்கள்??? ஏற்கனவே சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கா?? இல்லை பாமரர்களுக்கா??? சமஸ்கிருதம் கற்பித்து, அவர்களுக்கு ராமாயணம்,மகாபாரதம் போன்றவற்றுடன் மனுஸ்மிருதி, உபநிஷம் இதெல்லாம் கற்று கொள்ள முடியுமா??? அதெல்லாம் அனைவருக்கும் பொதுவானது யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்வார்களா??? இதெல்லாம் நடக்குமென்றால் சமஸ்கிருதத்துக்கு எவ்வளவு நிதி வேண்டுமானாலும் ஒதுக்கிக்கொள்ளுங்கள்... அல்லாமல் சமஸ்கிருதம் என்று சொல்லி ஒரு சாரார் வயிறு வளர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது....


Palanisamy T
அக் 29, 2025 17:21

சமீபத்திய ஆய்வின் தகவல்கள் சமஸ்கிருத ஹிந்தி மொழிகளின் வேர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்திய துணைக் கண்டத்திற்கு அன்று கொண்டு வந்தவையென்று ஆங்கிலத்தில் சமஸ்கிருதம் என்றால் தூய்மைப் படுத்தப் பட்ட மொழி யென்றும் பொருளாகின்றது. முன்பு வட இந்தியாவில் அன்று மலைவாசி மக்களின் பல்வேறுமொழிகளின் கூட்டுச் சேர்க்கையே பிராகிருதம் என அடையாளம் காணப் பட்டது. பிராகிருத மொழியில் இலக்கணம் புகுத்தப் பட்டப் பின்பு அம்மொழி சமஸ்க்ருதம் என புதிய அடையாளம் காணப் பட்டது. இதுதான் உண்மை.


vbs manian
அக் 29, 2025 15:02

தமிழ் நாட்டில் காணப்படுவது மொழி வெறி பற்று அல்ல. பற்று இலக்கியம் வளர்க்கும். வெறி குப்புற கவிழ்த்துவிடும்.


திகழ்ஓவியன்
அக் 29, 2025 13:47

ஆர்ம்ஸ்ட்ரோங் என்ன தியாகியா


திகழ்ஓவியன்
அக் 29, 2025 13:36

இப்போ தெரிகிறதா இவரை ஏன் திராவிட கட்சிகள் எதிர்த்தன என்று


Rathna
அக் 29, 2025 13:08

தமிழ் நாட்டில் உள்ள பெரிய நிறுவனங்கள் பலவற்றில் உயர் பதவிகளில் இருப்பது வடநாட்டுகாரர்கள், பெங்காலிகள் அல்லது சேட்டன்கள். இவர்கள் அனைவருக்கும் ஹிந்தி தெரியும். பெங்களூர், ஹைதெராபாத், விசாகப்பட்டினம், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் நிறுவனங்கள் பலவற்றில் உயர் பதவிகளில் இருப்பது வடநாட்டுகாரர்கள், பெங்காலிகள் அல்லது சேட்டன்கள். தமிழ் மொழி அரசியலாக மாற்றப்பட்டதால் படித்த தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் நாட்டிலேயே, வெளி மாநிலங்களில் வேலை கிடைப்பது அரிதாகி விட்டது. தமிழ் இளைஞர்கள் என்றாலே அவரது மொழி வெறி கொண்டவர்கள் என்ற போர்வையில், தகுதி இருந்தும் நிராகரிக்கப்படும் நிலைமை உள்ளது. இதனால் மொழி பற்று வேண்டும். ஆனால் அதை வெறியாக மாற்றினால் தமிழ் இளைஞர்கள் விவசாயம் பார்க்க மட்டும் தான் முடியும்.


vbs manian
அக் 29, 2025 15:05

இரு மொழி கொள்கை மாணவர்களை கிணற்று தவளைகளாக மாற்றி விட்டது. வெளியூரில் வேலை கிடைக்காது. உள்ளூரிலும் வேலை இல்லை.


R.Subramanian
அக் 29, 2025 12:35

திராவிட சித்தாந்தம் வளர்க்க நினைப்பது ஆங்கிலத்தை அவர்களுக்கு தமிழ் மீதும் அக்கறை கிடையாது சமஸ்கிரதம் மீதும் அக்கறையில்லை. தமிழக மக்கள் தான் திராவிட சித்தாந்த தீமைகளை புரிந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும்.


Samy
அக் 29, 2025 12:19

சமஸ்கிருதம் மொழி எதிர்ப்பு இல்லாமல் வளர்ந்ததால் தான் பக்தி இயக்கம் சைவம் வைணவம் என பிரிந்து சற்குருவாகிய இறைவனின் தொடர்பு இல்லாது கல்லாகி போன கடவுளரின் வழிபாடு வந்தது மனித கடவுளரின் தொகையும் எண்ணிக்கை சொல்லி முடியாது தமிழும் வடமொழியும் வளரவேண்டும் என்ற பெயரில் நாம் இறைவனை அறியா நிலையில் அல்லவா இருக்கிறோம்


முக்கிய வீடியோ