உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார்

சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார்

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த மதன் பாப் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71.மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசையமைப்பாளராக தனது திரைவாழ்க்கையை தொடங்கிய இவர், ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மதன் பாப், பல மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேவர்மகன், சதி லீலாவதி, துள்ளாத மனமும் துள்ளும், தெனாலி, குஷி, சிங்கம் 2, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் கடைசியாக சாகசம் என்னும் படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், பிரபல டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவரின் டிரேட் மார்க்கே அவரின் சிரிப்பு தான். இவர் சிரிக்க ஆரம்பித்தால் சில வினாடிகள் சிரித்துக் கொண்டே இருப்பார். மேடை நாடகம், விளம்பரங்கள், டிவி சீரியல்கள் என பலவற்றிலும் அசத்தி உள்ளார். அதுமட்டுமல்ல இவர் தனது இளம் வயத்தில் குத்துச்சண்டை வீரராகவும் இருந்துள்ளார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாப், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அடையாறில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Kolanchiappa
ஆக 04, 2025 13:50

நான் 2018 ஆண்டு திருச்செந்தூர் கோவில் வைத்து பார்தேன்


karthick Max
ஆக 03, 2025 14:12

ஆழ்ந்த இரங்கல்


RAAJ68
ஆக 03, 2025 09:02

நல்ல மனிதர்கள் புற்றுநோயால் மாண்டு போகிறார்கள். அறிஞர் அண்ணாதுரை நேர்மையான மனிதர் ஆனால் அவருக்கு மரணம் புற்று நோய் காரணம்.


தமிழ்வேள்
ஆக 03, 2025 18:18

அண்ணாதுரை யைப் போய் நேர்மையாளர் ன்னு சொன்னீங்க பாருங்க.... சரியான காமெடி.... நேர்மையாளர் ன்னா ஹிந்து தர்மத்தை மட்டுமே எதிர்த்து ஆப்ரஹாமிய அடிமையாகி வாட்டிகனில் காசு வாங்கித்தின்றது ஏன்? கம்பநாடரை மட்டும் இழிவுபடுத்தியது ஏன்? யேல்-ன் ஊழல் ஆவணங்களை அமெரிக்காவுக்கு திருடிக் கொடுத்து டாக்டர் பட்டம் பெற்றது ஏன்?


Ramachandran Sekar
ஆக 03, 2025 06:17

Rip


r.thiyagarajan
ஆக 03, 2025 01:00

Great. Artist Rip..


c.mohanraj raj
ஆக 03, 2025 00:37

ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி ஓம்


Subramanian
ஆக 02, 2025 23:18

ஆழந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Columbus
ஆக 02, 2025 23:00

His son is an IAS officer and working as a sub-collector in TN.


bharathi
ஆக 03, 2025 15:48

That is Chinni jayanth I guess


theruvasagan
ஆக 02, 2025 22:12

ஓம் சாந்தி. ஆழ்ந்த அனுதாபங்கள்.


aaruthirumalai
ஆக 02, 2025 21:32

RIP


புதிய வீடியோ