மேலும் செய்திகள்
மீனவர்கள் பிரச்னையில் த.வெ.க., தடுமாற்றம்
05-Nov-2024
பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட, தமிழக மீனவர்கள், 28 பேரை மீட்கக்கோரி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அக்., 18ல் கடிதம் எழுதினேன். மீனவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்திய வெளியுறவு துறை எடுத்த முயற்சியால், மீனவர்களை மூன்று மாதங்களில் விடுதலை செய்வதாக, அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளது. மீனவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதை, துாதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மத்திய அரசின் முயற்சியால், மீனவர்கள் விரைவில் நலமுடன் நாடு திரும்புவர். கோரிக்கை வைத்த உடனே நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், தமிழக பா.ஜ., சார்பில் நன்றி. -- ஹெச்.ராஜா,தலைவர்,தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு.
05-Nov-2024