உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக சட்டசபை தேர்தல் ம.நீ.ம., கமல் கலந்தாய்வு

தமிழக சட்டசபை தேர்தல் ம.நீ.ம., கமல் கலந்தாய்வு

சென்னை: சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளை மண்டல ரீதியாக, அக்கட்சி தலைவர் கமல் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில், அக்கட்சிக்கு, ஒற்றை இலக்கத்தில் தொகுதி ஒதுக்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. எனவே, எந்த தொகுதிகளை கேட்டு பெறுவது என்பதை முடிவு செய்ய, கட்சி நிர்வாகிகளை, கமல் சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இது குறித்து, அக்கட்சி துணைத்தலைவர்கள் தங்கவேலு, மவுரியா வெளியிட்ட அறிக்கையில், 'சட்டசபை தேர்தல் பணி தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம், கட்சித் தலைவர் கமல் தலைமையில், வரும் 18 முதல் 21ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, விழுப்புரம், சேலம் மண்டல நிர்வாகிகள் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். 'அனைவரையும் கமல் சந்திக்க உள்ளார். நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sivaram
செப் 12, 2025 10:32

பாவம் மணிரத்னம் அண்ணனின் ஆத்மா கமல ஹாசனை சபிக்காமல் இருக்கணும்


S.V.Srinivasan
செப் 12, 2025 08:51

ம நீ மையம் அறிவாலயத்துல அடகு வச்சு வருஷ கணக்கு ஆயிடுச்சே. கட்சில யாரோட கலந்தாய்வு செய்ய போறீங்க. எதுக்கு இந்த வேண்டாத வெட்டி விளம்பரமெல்லாம். திராவிட மாடல் கொடுக்கிற ஒன்னு அல்லது ரெண்டு சீட் வாங்கிக்கிட்டு டெபாசிட் கிடைக்குமா பாருங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை