உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிசம்பர் 9ல் கூடுகிறது தமிழக சட்டசபை; விரைவில் முழுமையாக கூட்டத்தொடர் நேரலை; சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9ல் கூடுகிறது தமிழக சட்டசபை; விரைவில் முழுமையாக கூட்டத்தொடர் நேரலை; சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக சட்டசபை டிச., 9ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அவர், 'அவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.சென்னை தலைமைச் செயலகத்தில், சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் டிச.,9ம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு எடுக்கும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6u4jw6hz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சட்டசபை கூட்டத்தொடரை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி, பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து மாணாக்கர் படிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. மானியக் கோரிக்கைகளுக்காக கடைசியாக ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sundarsvpr
நவ 25, 2024 13:45

சட்ட மன்ற கூட்டத்தில் கட்சி மாறினால் இட ஒதுக்கீடு உண்டு ஆனால் மதம் மாறினால் மக்களுக்கு தெரிவதில்லை. இதனை சபா நாயகர் உறுதிப்படுத்தவேண்டும். சபாநாயகர் பெயர் அப்பாவு. இது ஹிந்து மத அடையாளப்பெயர். ஆனால் கிறிஸ்டியனாக மாறியதாக ஒரு செய்தி. இதனை சட்ட மன்றத்தில் தெரிவிக்க ஏன் தயங்க வேண்டும் ஒரு நடிகர் பெயர் விஜய். இவர் தற்போதைய பெயர் ஜோசப். விஜய் ஜோசப் இதில் எது சரியான பெயர். விஜய் அல்லது அப்பாவுவை ஹிந்து என்று தான் கருதுவார்கள். அரசும் அப்படிதான் கருதும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 25, 2024 15:48

ஏன் இப்படி மதம் பிடித்து வாழுகிறீர்கள்? ஒருவரை இந்து வாகக் கருதினால் என்ன, கிறிஸ்தவனாக கருதினால் என்ன? நீங்கள் ஒரு இடத்துக்கு செல்ல ஆட்டோ கூப்பிடுகிறீர்கள். வந்த ஆட்டோவின் டிரைவர் என்ன மதம், ஓனர் என்ன மதம் னு பாத்துட்டா ஏறுவீங்க? இதில் ஆட்டோ என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் என்றும், ஓனர் என்ற இடத்தில் டாக்டர் என்றும் போட்டு மீண்டும் வாசியுங்கள். நன்றி. மதவாதம் தமிழ் நாட்டில் வெறுக்கப்படும். ஒருநாளும் இங்கே மத அரசியல் இடம் பிடிக்க முடியாது.


சம்ப
நவ 25, 2024 13:08

எத்தன படிகால் படியா அரை படியா. இல்ல வீட்டுக்கு போகும் போதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை