உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கவர்னர் உரையுடன் ஜன., 20ல் தமிழக சட்டசபை கூடுகிறது

 கவர்னர் உரையுடன் ஜன., 20ல் தமிழக சட்டசபை கூடுகிறது

சென்னை: கவர்னர் உரையுடன், தமிழக சட்டசபை கூட்டத் தொடர், வரும் ஜனவரி 20ம் தேதி துவங்குவதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டி: தமிழக சட்டசபையின் 2026ம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடரை, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, வரும் ஜனவரி 20ம் தேதி காலை 9:30 மணிக்கு, கவர்னர் கூட்டியுள்ளார். அன்றைய தினம், தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களால் தயாரிக்கப்பட்ட கவர்னர் உரையை, அவர் வாசிக்க உள்ளார். சட்டசபையின் மாண்பை கவர்னர், நிச்சயம் காப்பாற்றுவார் என நம்புகிறோம். கவர்னர் உரை நிகழ்த்திய பின், சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்கவுள்ளது. அதில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது மற்றும் சட்டசபை அலுவல்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை