உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ்களில் மீண்டும் தமிழ்நாடு

அரசு பஸ்களில் மீண்டும் தமிழ்நாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: அரசு போக்குவரத்து கழக பஸ்களின் முகப்பு பகுதிகளில் நீக்கப்பட்டிருந்த, 'தமிழ்நாடு' என்ற வார்த்தை, அரசு சி.என்.ஜி., எனப்படும், இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்களில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் தவிர, பிற ஆறு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் பஸ்களின் முகப்பு பகுதியில், 'தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்' என எழுதப்பட்டு இருக்கும். தி.மு.க., ஆட்சியில், 'தமிழ்நாடு' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகம் என்று குறிப்பிடப்பட்டது. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், தமிழ்நாடு பெயர் நீக்கம் தொடர்ந்தது. தற்போது தமிழக வெற்றிக் கழக அரசின் உத்தரவின்படி, தமிழக அரசு போக்குவரத்து சி.என்.ஜி., பஸ்களில், 'தமிழ்நாடு' என்ற வார்த்தை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அரசு சி.என்.ஜி., பஸ்களில் தமிழ்நாடு என்ற வார்த்தையை சேர்க்கும்படி, அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. பிற அரசு பஸ்களிலும் தமிழ்நாடு' என்று சேர்ப்பது குறித்து இன்னும் உத்தரவு வரவில்லை என்றனர். தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'பல ஆண்டுகளாக இருந்து வரும், 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை மீண்டும் சேர்த்தது வரவேற்கத்தக்கது. 'அனைத்து போக்குவரத்து கழக பஸ்களிலும் இதைச் சேர்க்க வேண்டும். அப்போது தான் வெளிமாநிலங்களுக்கு செல்லும் நம் பஸ்கள் தனி அடையாளமாக திகழும்; குழப்பம் தீரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Chandrasekaran Balasubramaniam
ஜூன் 24, 2026 19:38

ஏப்பா பெயர் மாற்றுவதெல்லாம் இருக்கட்டும். முதலில் இலவசங்களை நீக்கி போ. வ.. கழக நிதி நிலையை காப்பாற்றுங்க. அரசுக்கு கோரிக்கை இதுதான்.


Loganathan Balakrishnan
ஜூன் 24, 2026 13:49

எங்க வரி பணத்துல செய்ற விஷயத்துக்கு அவங்க அவர் போட்டோ போட்டாங்க, நீங்க உங்க போட்டோ போட்டு இருக்க இதுல என்ன மாற்றம்


Gopi
ஜூன் 24, 2026 13:14

Why show mercy to devil which abused misbehaved with opposition MLAs, MGR, Jayalalitha earlier. Hack them


Rathna
ஜூன் 24, 2026 12:38

அரசு பணத்தில் தமிழ்நாடு சரி. போட்டோ எதற்கு. எதுக்கு தேவை இல்லாத விளம்பரம்?


Shankar Sarangan
ஜூன் 24, 2026 12:04

தமிழ்நாடு சேர்த்தது சரி. அது கூடவே முதல்வரோட போட்டோ எதுக்கு அரசு பஸ்ல?


SANJEEVI
ஜூன் 24, 2026 10:48

தயவுசெய்து முதல்வரின் CM புகைப்படத்தை அகற்றவும். அவர் ஏற்கனவே உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் இவ்விடங்களில் அதை காட்ட வேண்டிய அவசியம் இல்லை


M Ramachandran
ஜூன் 24, 2026 10:22

காரணத்தொட்டு ஹான் தமிழ்நாடு என்ற பெயராய்ய்ய நீக்கினார்கள். நாளைக்கு சத்தம் போடாமல் வேறு மா நிலா தத்தின் பெயரிய பொறிக்க அல்லது தனியாருக்கு கமிஸ்ஸின் பசில் விற்க ஏர்ப்பாடாக இருக்கும்.


Raja
ஜூன் 24, 2026 09:59

this is not his party bus


wahid
ஜூன் 24, 2026 09:03

டெவெலப்மெண்ட்டில் ஸிரோ, ஒருத்தனுக்கு ஒருத்தன் காலை வாரிவிடுவதில் நம் அரசியல்வாதிகள் காட்டும் ஆர்வத்தை, கொஞ்சம் முன்னேற்றத்திலும் காட்டலாமே. இளைஞர் முட்டாள்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது.


Siva Subramaniam
ஜூன் 24, 2026 08:05

In Tamil Nadu, most duration of the assembly goes blaming the previous government, teasing opposition party members and statements with personal accusations. If this government also does this and follow the past tradition, it will NOT be good fot the State.


சமீபத்திய செய்தி