உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை;  பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை;  பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் இன்றும் (நவ., 5), நாளையும் (நவ., 6) நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்தார். பாதுகாப்பு பணியில், 3,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ., 5) காலை, 11:00 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தார். 11:30 மணிக்கு பீளமேடு - விளாங்குறிச்சி சாலையில், 'எல்காட்' நிறுவனம் சார்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில், 3.94 ஏக்கர் பரப்பளவில், 114.16 கோடி ரூபாயில், எட்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) கட்டடத்தை திறந்து வைக்கிறார். மதியம், 12:00 மணிக்கு பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கபட்ட நில உரிமையாளர்களுக்கு நில விடுவிப்பு உத்தரவு வழங்குகிறார். மாலை, 4:00 மணிக்கு கோவை செல்வபுரத்தில் உள்ள சிவாலயா திருமண மண்டபத்தில், தங்க நகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் 'கிளஸ்டர்' அமைப்பது குறித்து கலந்துரையாடுகிறார்.மாலை, 6:30 மணிக்கு போத்தனுார் பி.வி.ஜி., திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க., நிர்வாகிகளுடனான சிறப்பு கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். இரவு, 9:00 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் முக்கிய வி.ஐ.பி.,க்களை சந்திக்கிறார்.நாளை (நவ., 6) காலை, 10:00 மணிக்கு காந்திபுரம் நஞ்சப்பா சாலையில், 133.21 கோடி ரூபாயில் கட்டப்படும் செம்மொழி பூங்கா கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து, 10:30 மணிக்கு பொதுப்பணித்துறை சார்பில், 300 கோடி ரூபாயில் ஏழு தளங்களுடன் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு அடிக்கல் நட்டு பேசுகிறார்.இந்நிகழ்ச்சிகளில், தமிழக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, வேலு, தமிழக அரசின் தலைமைச் செயலர், முருகானந்தம், எம்.பி., ராஜ்குமார், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.முதல்வர் வருகையையொட்டி, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் மாநகர போலீசார் 2,500 பேர், திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Barakat Ali
நவ 05, 2024 12:11

யாரிடமிருந்து யாருக்கு பாதுகாப்பு தேவை?? மக்களிடம் இருந்து அரசியல்வாதிக்கா?? அல்லது அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களுக்கா? யார் ஆபத்தானவர்கள்??


TAMILAN
நவ 05, 2024 13:51

மக்களுக்கு பாதுகாப்பு தேவை


angbu ganesh
நவ 05, 2024 09:34

அரசாங்க பணத்தை எப்படி எல்லாம் வீணடிக்கறானுங்க அதனை போலீசும் அங்க அந்த இதை சாக்கு ஆச்சு edana சட்ட விரோதிங்க ஏதாச்சும் பண்ணா என்ன பண்ணுவானுங்க ஆமா இவ்ளோ பயப்படற எஜமான் எதுக்கு அங்கு போகணும் இவரை நம்பி வோட்டு போட்டவங்கதானே அங்கே இருக்காங்க


வைகுண்டேஸ்வரன்
நவ 05, 2024 09:33

ஒரே கருகிய மணம். பலருக்கும் வயத்தெரிச்சல் தாங்கவில்லை போலயே?? ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் வளர்ச்சிப் பாதையில் கோவை. இதை மறுக்க முடியாது. எனவே என்னை கொத்தடிமை, உ பி என்று எழுதி சுய இன்பம் அடையவும். நல்லது செய்யறார் னா, ஆமா செய்யறார் னு சொல்றதுக்கு பேர் முட்டுக்கொடுப்பதோ அல்லது கொத்தடிமையோ அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.


karthik
நவ 05, 2024 09:06

எதுக்கு 3500 போலீஸ்? ஒரு பயல் சீண்ட மாட்டான் .... 10 போலீஸ் போதாதா?


வைகுண்டேஸ்வரன்
நவ 05, 2024 09:42

ஹலோ சார், பாதுகாப்பு மக்கள் முதல்வருக்கு அல்ல. பொது மக்களுக்கான பாதுகாப்புக்கு. இது கூடப் புரியலையா சும்மா அவதூறு பரப்புவதா?


Barakat Ali
நவ 05, 2024 12:31

"இது கூடப் புரியலையா சும்மா அவதூறு பரப்புவதா?"... முதல்வருக்குப் பாதுகாப்பு கொடுக்கவும், கூட்டத்தை ஒழுங்கு படுத்தவும், கூட்டத்தில் அத்துமீறுபவர்களை கவனிக்கவும்தான் இத்தனை போலீஸ் என்பது அனைவருக்கும் தெரியும் .....


Sathyanarayanan Sathyasekaren
நவ 05, 2024 08:56

காஸ் சிலிண்டர் கும்பல் மீது அவ்வளவு நம்பிக்கை போல.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 05, 2024 08:37

கோவை இந்து பெண்ணை மதம்மாற்றி 2வது திருமணம் செய்ய நிர்பந்தம் - SDPI நிர்வாகி கைது .....


sankaranarayanan
நவ 05, 2024 08:25

சும்மா அடிச்சு விளாசு ஜி.எஸ்.டி பணம் ஏழாயிரம் கோடி வந்திருக்கிறது அது தீரும்வரை ஊர் சுற்றி எல்லா இடங்களிலும் கலைஞர் பூங்காக்கள் கலைஞர் சிலைகள் கலைஞர் சாலைகள் கலைஞர் தெருக்கள் கலைஞர் மாளிகைகள் கலைஞர் பள்ளிகள் கலைஞர் சந்துபொந்துக்கள் கலைஞர் மைதானங்கள் இன்னும் எவ்வளவோ அந்த பணம் தீரும் வரைக்கு எல்லாமே செலவு செய்துவிட்டு பிறகு பள்ளி ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கூட பணம் இல்லை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கூட பணம் இல்லை சுகாதார பணியாளர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கூட பணம் இல்லை என்று கூவிக்கொண்டே செல்லலாம்


Rpalnivelu
நவ 05, 2024 08:19

திருட்டு த்ரவிஷன்களுக்கு ஆடம்பரமே குறி. அமெரிக்கா ப்ரெசிடெண்டுக்கே இவ்வளவு பாதுகாப்பு இருக்காது. ஊழலை கமுக்கமாக செய்வானுங்க.


சிந்தனை
நவ 05, 2024 07:45

500 போலீசை பணியமர்த்த பராமரிக்க நிர்வாகம் செய்ய ஆகும் செலவை, 1000 ஏழைகளுக்கு சோறு போடலாம் , 10000 ஏழை பள்ளி மாணவர்களுக்கு பீஸ் கட்டலாம்... இந்த ஆடம்பரம் தேவைதானா தெரியவில்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 05, 2024 07:45

பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்.. யாரும் என்னை எனது அலுவலகத்தில் எந்த இடர்பாடும் இன்றி சந்திக்கலாம் என்று சொன்னவர் ....


முக்கிய வீடியோ