உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வால் தமிழகம் தேய்கிறது, அழிகிறது: கொதிக்கிறார் அண்ணாமலை

தி.மு.க.,வால் தமிழகம் தேய்கிறது, அழிகிறது: கொதிக்கிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகம் திமுக.,வால் தேய்கிறது; ஒரு குடும்பத்தால் அழிகிறது; கோபாலபுரம் குடும்பத்தால் பின்னோக்கி செல்கிறது. திமுக அப்புறப்படுத்தப்பட்டால் மட்டுமே தமிழகம் முழுமையான வளர்ச்சியை பெறும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பிரதமர் தமிழகம் வருவது உறுதி, அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளதால் அதற்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும். அவர் வருவதற்கு முந்தைய தேதியில் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் 234 தொகுதிகளையும் நிறைவு செய்துவிடுவோம். பல்லடத்தில் நிறைவு விழா நடைபெறுவது உறுதி, அதில் பிரதமர் மோடி பங்கேற்பார்.

தேர்தல் பத்திரங்கள்

காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கத்திற்கும் பா.ஜ.,வுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தேர்தல் நெருங்கும் சமயத்தில் சிலர் எங்கள் கட்சியிலும், சிலர் வேறு கட்சியிலும் சேர்வது வழக்கமானது தான். பலரும் பா.ஜ.,வில் இணைய உள்ளனர். எங்கள் கட்சிக்கு வருபவர்கள் அவர்களின் முந்தைய கட்சியை பற்றி விமர்சிக்க வேண்டாம். தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.,வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த பத்திரங்கள் மூலம் பா.ஜ.,வுக்கு 52 சதவீதம் தான் நிதி வந்துள்ளது; ஆனால் திமுக.,வுக்கு 91 சதவீதம் நிதி வந்துள்ளது. இனி இதற்கு மாற்றாக தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் புதிய சட்டம் கொண்டுவந்து சரிசெய்யும்.

திமுக

தமிழகம் திமுக.,வால் தேய்கிறது; ஒரு குடும்பத்தால் அழிகிறது; கோபாலபுரம் குடும்பத்தால் பின்னோக்கி செல்கிறது. இவர்கள் என்னதான் கூச்சல் குழப்பம் போட்டாலும், திமுக அப்புறப்படுத்தப்பட்டால் மட்டுமே தமிழகம் முழுமையான வளர்ச்சியை பெறும். இந்த பட்ஜெட்டை தவிர்த்து கடந்த 9 ஆண்டுகால மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது. மத்திய அரசு அந்த தொகையை வழங்கவில்லை என மறுத்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுவாரா என நான் சவால் விடுகிறேன். எந்தவித ஏற்ற இறக்கமும் இல்லாமல் மோடி அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Arachi
பிப் 17, 2024 19:10

இந்தியாவில் இரண்டு கோயபெல்ஸ் இருக்கிறாங்க. ஒண்ணு தேசிய அளவில் இன்னொன்று மாநில அளவில்.


J.Isaac
பிப் 17, 2024 10:39

உ.பி முதலிடம். ஆனால் ஏன் வேலை தேடி தென் இந்தியாவிற்கு படை யெடுக்கிறார்கள்.


Indian
பிப் 17, 2024 10:15

சில்லுன்னு ஐஸ் தண்ணி குடிக்க சொல்லுங்கள் சூடு குறையும்


MADHAVAN
பிப் 17, 2024 10:11

நோட்டாகு கீழ ஒட்டு விழும்,


MADHAVAN
பிப் 17, 2024 10:11

பேசுவது எல்லாம் பொய் மட்டுமே


MADHAVAN
பிப் 17, 2024 10:10

முன்னாள் அதிமுக பினாமி எல்லாம் இப்போ பணம் தர்ராங்க


MADHAVAN
பிப் 17, 2024 10:09

எவ்வளவு கமிஷன் வருதுன்னு கரூரில் உள்ள எங்களுக்கு தெரியும்


MADHAVAN
பிப் 17, 2024 10:07

காட்டிகுடுகுடுக்கும் குணம் உடை யவர்கள் அடியோடு கலையெடுக்கவேண்டும்,


Ramesh Sargam
பிப் 17, 2024 00:46

இன்னும் தேய்வதற்கும், அழிவதற்கும் என்ன இருக்கு? எல்லாம் போச்சு.


Arachi
பிப் 16, 2024 22:34

சில மண்டுகங்கள் தான்தான் பெரிய அரசியல் வாதி என்று தமிழ் நாட்டில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு பாடம் நடத்த அல்லது கட்டளையிட வேண்டாம். விவசாயிகளை மிக கேவலமாக நடத்துவது இப்போது இருக்கும் பிஜேபி அரசு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை