உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழைய காற்றாலைகளை அகற்ற தமிழக மின் வாரியம் முடிவு

பழைய காற்றாலைகளை அகற்ற தமிழக மின் வாரியம் முடிவு

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு, அங்கு, 'ஹைபிரிட்' முறையில், பொது - தனியார் பங்கேற்பு வாயிலாக, காற்றாலையுடன், சூரியசக்தி மின் நிலையங்களையும் சேர்த்து அமைக்க மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது.இங்குள்ள காற்றாலைகள் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டதால், தற்போது அவற்றின் செயல் திறன் மிகவும் மோசமாக உள்ளது. எனவே, பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு, அங்கு 'ஹைபிரிட்' முறையில், அதாவது, ஒரே இடத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக, ஏற்கனவே பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், பழைய காற்றாலை அமைந்துள்ள இடங்களில் தற்போது, 22 மெகா வாட் திறனில் காற்றாலை மற்றும், 18 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை, 'பி.பி.பி.,' எனப்படும் பொது - தனியார் கூட்டு பங்கேற்பின் வாயிலாக அமைக்க, மின் வாரிய இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து, அரசிடம் அனுமதி பெற உள்ளது.இதன் வாயிலாக, மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை, தனியார் நிறுவனத்திற்கு, மின் வாரியம் குத்தகைக்கு வழங்கும். அந்த இடத்தில், நிறுவனம் தன் செலவில் மின் நிலையம் அமைத்து, 25 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்.அந்நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்யும்.இரு வகை மின்சாரத்திற்கும், ஒரு யூனிட்டிற்கு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து, அதை விட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வரும் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்படும். கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, விரைவில் டெண்டர் கோரும் பணிகளில் மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.

சிறப்பம்சம்:

* புதிய காற்றாலையுடன், சூரியசக்தி மின் நிலையத்தையும் சேர்த்து அமைக்க திட்டம்* பகலில் சூரியசக்தி மின்சாரமும், சீசன் காலத்தில் காற்றாலை மின்சாரமும் கிடைக்கும்*ஏற்கனவே மின் வழித்தடம் இருப்பதால், புதிய வழித்தடம் அமைக்க தேவையில்லை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhaskaran
மார் 19, 2025 13:04

மின்வாரிய அதிகாரிகள் காட்டில் கோடை மழை


rama adhavan
மார் 19, 2025 10:54

1 காற்றாலை நிறுவ அரை ஏக்கர் நிலம், சாதகமான காற்று வீச்சு, பணம், வரி சலுகை, மின் வழிதடம், மின்சாரதிற்கு நியாமான விலை, குறைந்த வ்ஹீலிங் சார்ஜ் முதலியவை முக்கியம்.. சூரிய ஒளி வெப்பத்திற்கும் அதிக முதலீடும் காற்றாலை போல் சலுகைகளும் தேவை. இன்று இதில் குஜராத் முதலிடம். மத்திய அரசின் ஒத்துழைப்பும் தேவை. ஆனால் தற்போதைய மத்திய அரசுடன் ஆன உரசலில் இத் திட்டம் செயல் படுத்த இயலுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 19, 2025 10:30

2026 தேர்தலுக்கு நிதி திரட்ட இப்போழுதே முனைப்புடன் இறங்கிவிட்டது ஆளும் கட்சி


RAAJ68
மார் 19, 2025 09:22

அகற்றுவதற்கு ஒரு டெண்டர்‌ அதில் 30% கமிஷன் புதியதாக அமைப்பதற்கு ஒரு டெண்டர் அதில் 40% கமிஷன். எதுவுமே ஆகாயம் இல்லாமல் செய்ய மாட்டார்கள் ‌


பாமரன்
மார் 19, 2025 08:09

மிகவும் தாமதமாக இருந்தாலும் நல்ல முடிவு... தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் காற்றாலைகள் விவசாய நிலங்கள் நடுவே உள்ளன... அங்கேயும் சூர்ய சக்தி மின் தகடுகளை பொறுத்துவேன்னு அடம் புடிக்க வழி செய்யும் கண்டிஷன்கள் இல்லாமல் டென்டர் குடுங்க ஆபீஸர்... அது நம்ம கம்பெனி ஸ்பான்ஸர்க்கு மட்டுமே இருந்தாலும் தேவலை... தற்கால தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியம்