உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 25 லட்சம்  இலவச காஸ்  இணைப்பு; 10 சதவீதம் எதிர்பார்க்கும் தமிழகம்

25 லட்சம்  இலவச காஸ்  இணைப்பு; 10 சதவீதம் எதிர்பார்க்கும் தமிழகம்

சென்னை : நாடு முழுதும் ஏழை மக்களுக்கு, 25 லட்சம் இலவச சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட இருப்பதில், தமிழகத்திற்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களிடம் எழுந்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' எனப்படும் இலவச காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை, 2016 மே 1ல் துவக்கியது. இத்திட்டத்தின் கீழ், ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, காஸ் அடுப்பு, டிபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர், முதல் சிலிண்டர் ஆகியவற்றின் செலவை, மத்திய அரசு ஏற்கிறது. இது தவிர, சிலிண்டர் வாங்கும்போது, அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது. பிரதமரின் இலவச திட்டத்தில் தமிழகத்தில், 40 லட்சம் பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, உஜ்வாலா திட்டத்தின் கீழ், 25 லட்சம் புதிய இலவச காஸ் இணைப்புகள் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், 10 சதவீதம் அதாவது, 2.50 லட்சம் இணைப்புகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, எண்ணெய் நிறுவனங்களிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிதாக வழங்கப்பட உள்ள, 25 லட்சம் காஸ் இணைப்புகளில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை இணைப்பு என்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. பல மாநிலங்களில் உஜ்வாலா திட்டத்தில் காஸ் இணைப்பு பெற்றவர்கள், இரண்டாவது, மூன்றாவது சிலிண்டரை கூட வாங்காமல் உள்ளனர். இதற்கு ஏழ்மை நிலைமையும், சிலிண்டர் பயன்படுத்த விரும்பாததும் காரணம். தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகம் உள்ளது. எனவே, அதற்கு ஏற்ப, காஸ் இணைப்புகள் ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
அக் 04, 2025 16:49

வறுமையை ஒழிக்காம, இலவசங்களை குடுக்காம எப்புடி வல்லரசாவாங்க கோவாலு?


V Venkatachalam
அக் 04, 2025 14:31

திராவிட மூடல் அரசு ரொம்பவே கில்லாடிங்க.‌ எடப்பாடியை இறக்குவதற்கு இளம் விதவைகள் பற்றி பேசினாங்க. அதுவும் வாழாவெட்டி கனி முழியை வைத்து இளம் விதவைகள் அதிகமாயிடாய்ங்கன்னு பேச வச்சானுங்க. அது போதாதுன்னு கேஸ் விலையை குறைப்போம்னு பேச வச்சாய்ங்க.அத பத்தி கேட்டாக்க அந்த கனிமுழி தலைய ஆட்டிட்டு போய் கிட்டே இருக்கு.‌ இந்த லக்ஷணத்த எண்ணெய் கம்பெனிகள் புரிந்து கொள்ள வில்லையா? அல்லது கனிமுழி வெத்துவேட்டுன்னு நல்லா புரிந்துவிட்டதால் எதிர் பார்க்கிறார்களா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 04, 2025 10:51

தமிழகத்தில் திராவிட மாடல் அறிவித்த சிலிண்டர் மானியம் ரூபாய் நூறு இதுவரை கிடைக்கவில்லை. ஜந்து வருடங்களில் 6000 ரூபாய் அளவுக்கு ஒவ்வொரு கேஸ் இணைப்பு வைத்துள்ள குடும்பத்திற்கும் நஷ்டம். இதற்கு யார் பொறுப்பு. 6000 ரூபாய் எப்போது கிடைக்கும்.


Field Marshal
அக் 04, 2025 09:05

பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய பீகாரில் 12 ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் உள்ளது. தமிழக அரசுக்கு அந்த துணிச்சல் இல்லையே .பெட்ரோல் டீசல் விலையையே குறைக்காமல் கடன் வாங்கி அரசாங்கம் நடத்துகிறார்கள்


Rajasekar Jayaraman
அக் 04, 2025 07:48

மோடியின் திட்டம் உங்களுக்குத்தான் பிடிக்காதே ஸ்டிக்கர் ரெடியாக வைத்திருக்கவும்


Kasimani Baskaran
அக் 04, 2025 07:19

நாட்டில் 10% என்றால் மக்கள் தொகையில் 10% இல்லையே... ஆகவே ஏழைகள் நிறைந்த மாநிலம் என்று சொல்லலாமா... திராவிடத்துக்கு வந்த சோதனை.


vadivelu
அக் 04, 2025 07:17

இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் என்று அரசு ஏன் 10% எதிர் பார்க்கணும்.?


Krishna
அக் 04, 2025 06:41

Recover All Freebies 90%NotDue But Vote Briberies from All RulingPartiesTill then DeRecognise-Ban them


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
அக் 04, 2025 06:02

ஓஷின்னா முன்னாடி நிப்பான் தமிழன். அந்தக்காலத்துலயே துடைப்பம் வாங்கினால் குப்பை ஓஷி என்று எஸ்.வி.சேகர் சொல்லிட்டு போயிட்டாரு.


Srinivasan Narasimhan
அக் 04, 2025 05:24

நாம்தான் பயஙகர முன்னேரிய மாநிலம் எதற்கு இலவசம்


புதிய வீடியோ