உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒருங்கிணைந்த கல்வி நிதி ரூ.2,152 கோடி; மத்திய அரசிடம் தமிழகம் எதிர்பார்ப்பு

ஒருங்கிணைந்த கல்வி நிதி ரூ.2,152 கோடி; மத்திய அரசிடம் தமிழகம் எதிர்பார்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், மத்திய அரசு 2,152 கோடி ரூபாயை வழங்காததால், மாநில அரசின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவுவால் வாசிக்கப்பட்ட கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில், மாநில அரசு உறுதியுடன் செயல்படுகிறது. மாநிலத்தின் முயற்சிகளுக்கு தேவையான ஆதரவை மத்திய அரசு வழங்கவில்லை.ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு உரிய நிதியை விடுவிக்கக்கோரி தொடர்ந்து முறையிடப்பட்டது.

கணக்கெடுப்பு

புதிய கல்வி கொள்கையை தமிழகம் ஏற்காததை காரணமாக கூறி, மத்திய அரசு நடப்பாண்டில் இதுவரை, எந்தவொரு நிதியையும் விடுவிக்கவில்லை. மொத்தம் 2,152 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இது, ஆசிரியர்களின் ஊதியம், பள்ளி கட்டடங்களை பராமரித்தல், கல்வி உரிமை சட்டத்தின் கீழ், கல்வி கட்டணத்தை திருப்பி செலுத்துதல் உள்ளிட்ட பள்ளிகளின் பல்வேறு செயல்பாடுகளுக்கு, மிகவும் இன்றியமையாததது. மத்திய அரசு நிதியை வழங்காததால், மாநில அரசு தன் சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து, இத்திட்டத்திற்கான ஒட்டுமொத்த செலவையும் ஏற்க வேண்டியுள்ளது. இதனால், மாநில அரசின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 44 லட்சம் மாணவர்கள், 2.20 லட்சம் ஆசிரியர்கள், 21,276 பணியாளர்களின் எதிர்காலமும், இந்த நிதி உரிய நேரத்தில் விடுவிக்கப்படுவதையே சார்ந்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி, மத்திய அரசு இந்த நிதியை விரைவில் விடுவிக்கும் என, மாநில அரசு நம்புகிறது அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள், தகுதியானவர்களை சரியாக சென்றடைவதன் வாயிலாகவே, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்க இயலும். அத்தகைய விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துவதற்கான இலக்குகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை தீட்டுவதற்கு தேவையான, அடிப்படை ஆதாரங்களை திரட்ட, தேசிய அளவிலான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்.

பெரும் சேதம்

எனவே, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே துவக்க வேண்டும். அத்துடன், ஜாதிவாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமரிடம் முன்வைத்த வேண்டுகோள் அடிப்படையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, 50 சதவீத பங்கு தொகை வழங்க, மத்திய அரசு இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது. மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும், மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் சமீபத்தில், 14 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய பெஞ்சல் புயலால், 40 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. பொது மக்களின் சொத்துக்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நிதிக்குழுவுக்கு பாராட்டு

இதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா, 2,000 ரூபாய் மாநில அரசால் வழங்கப்பட்டது. தற்காலிக மற்றும் நிரந்தர நிவாரண பணிகளையும், மறுசீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள கூடுதல் நிதி தேவை. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநில அரசு கேட்டுள்ள 6,675 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் டாக்டர் அரவிந்த பனகாரியா தலைமையிலான, 16வது நிதிக்குழு தமிழகம் வந்தபோது, நம் கோரிக்கைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன. மாநிலங்களுக்கான நிதி பகிர்வை, 50 சதவீதமாக அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தின் அறிக்கை குறித்து நிதிக்குழு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தது. தமிழக அரசால் கோடிட்டு காட்டப்பட்டுள்ள முற்போக்கான வழிமுறைகளை, நிதிக்குழு பரிந்துரைக்கும் என்று நம்புகிறோம்.இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

MUTHU
ஜன 08, 2025 10:46

சாதாரணமாய் சென்னை மாநகராட்சியே ஆண்டிற்கு இருபதாயிரம் கோடி வரியாய் வசூலிக்கின்றது. ஒரு மாநில அரசால் இரண்டாயிரம் கோடி சாத்தியமில்லாதா என்ன?


Rajasekar Jayaraman
ஜன 07, 2025 11:51

திருட்டு திராவிட பாடம் சொல்லிதர மத்திய அரசு நிதி தருமா.


sankaranarayanan
ஜன 07, 2025 10:44

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், மத்திய அரசு 2,152 கோடி ரூபாயை வழங்காததால், மாநில அரசின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது இது தானாக தேடி வந்தது யானையே தனது தலையில் மண்ணை வாரிபோட்டுக்கொண்டது போலத்தான் மத்திய அரசுடன் எடுத்தேர்க்கெல்லாம் முரண்பட்டுக் கொண்டே இருந்தால் இங்குள்ள மக்கள்தான் அவதிப்படுவார்கள் கல்வியின் தரமும் போய்விடும் இப்போதே இங்குள்ள ஐ.ஏ,எஸ் அதிகாரிகள் ஐ.பிஸ். அதிகாரிகள் வெகுவாக வடக்கிலிருந்துதான் போட்டி தேர்வில் வெற்றிபெற்று இங்கே வருகிறார்கள் நம்மை ஆளுகிறார்கள் இது தெரிந்துமா இன்னம் அதுவேண்டாம் இது வேண்டாம் என்று நமது குறுகிய மனப்பான்மையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் வெளியில் வாருங்கள் எல்லோருடனும் பழகுங்கள்


பாமரன்
ஜன 07, 2025 08:25

அதென்ன எதிர்பார்ப்பு... ஏதோ கெஞ்சரா மாதிரி... எஜூகேஷன் செஸ் அப்பிடின்னு போட்டு மக்களை வதைச்சு வாங்கிய வரி திரும்ப குடுக்க வேண்டய கடமைதானே மத்திய அரசுக்கு,..


veera
ஜன 07, 2025 16:03

ஆட்டைய போடத்தான் கேட்கிறான்....குடுக்க முடியாது


Kasimani Baskaran
ஜன 07, 2025 07:48

மாணவர்கள் இல்லாத பள்ளி, ஒரு ஆசிரியர் பள்ளி போன்றவை பள்ளிகளை நிரந்தரமாக மூட புதிய ஏற்பாடுகள். எப்படி இது போன்றதொரு நிலை வந்தது என்று யோசித்தால் இவர்களின் தனியாருக்கு பள்ளிகளை தாரைவார்க்கும் வேலையில் அரைநூற்றாண்டுகளாக ஈடுபட்டு வருவது புரியும்...


R. SUKUMAR CHEZHIAN
ஜன 07, 2025 07:34

அறிவை வளர்கும், பல மொழி திறமையை வளர்க்கும், சொந்த அறிவில் சிந்திக்க தூண்டும் புதிய கல்வித் திட்டத்தை தன் சுயநலதிற்காக ஏற்காத தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒரு சல்லி பைசா கொடுக்க கூடாது என்பது தான் தரமான கல்வியை எதிபாக்கும் தமிழக மக்கள் ஆதங்கம். இந்த நாடு முழுவதும் ஏற்கும் போது இந்த திராவிட கும்பல்களுக்கு என்ன கேடு.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 07, 2025 07:09

இக்கட்டுரையில் தெரிவித்ததெல்லாம் ஆளுநர் உரைக்காக திமுகவினர் தயாரித்தது.. இவையனைத்தும் அண்டப்புளுகு என்று நமக்கே தெரியும் போது ஆளுநர் இவ்வுரையை புறக்கணித்திருப்பார்... தவிர 44000ம் கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கிய பணம் என்ன ஆனது.. மழைநீர் வடிகாலுக்கு செலவானது போல் ஆகிவிட்டதா ???


Dharmavaan
ஜன 07, 2025 06:47

கொள்ளை அடிக்க, இலவசங்களுக்கு பணமில்லை வீண் செலவை குறைத்தால் தான் அப்பனுக்கு ஆயிரம் இடத்தில நினைவு மண்டபம் சிலை வைப்பதை குறைக்க வேண்டும்


Rajarajan
ஜன 07, 2025 04:48

என்னது கல்வியா ?? அதுக்கும், நமக்கும் தான் காத தூரம் ஆச்சே. அது இருக்கட்டும். எதுக்கு மத்திய அரசை நிதிக்கு எதிர்பாத்துக்கிட்டு ? நஷ்டத்தில் இயங்கும் தமிழக அரசின் நிறுவனங்களை இழுத்துமூடி / தேவையற்ற துறைகளை தனியாருக்கு கொடுத்தால், முடிந்தது பிரச்சினை. பல லட்சம் கோடி தமிழக அரசுக்கு மிச்சம். செஞ்சிட்டு சொல்லுங்களேன்.


Dharmavaan
ஜன 07, 2025 06:48

நஷ்டத்தில் இருப்பதே ஊழலால் அதை எப்படி நிறுத்த முடியும்


பாமரன்
ஜன 07, 2025 08:29

இந்த ராஜராஜனுக்கு இருக்கும் அறிவுக்கு பாஜகவில் இருக்க தான் லாயக்கு... மேலும் சொல்றதுக்கில்ல...அவருக்கு கூஜா தூக்கிட்டு எத்தனை அறிவாளிங்க வரப்போறாய்ங்களோ... பகவானே


Kasimani Baskaran
ஜன 07, 2025 09:49

தவறான அணுகுமுறை. ஊழலும் செய்யவேண்டும் - அதே சமயம் பள்ளிகளும் இயங்க வேண்டும் - இதுதான் திராவிட மாடல். இருக்கும் பள்ளிகளிலேயே உண்மையான மாணவர்கள் இருக்கிறார்களா அல்லது கற்பனை மாணவர்கள், கற்பனை ஆசிரியர்கள் தானா என்று புரியவில்லை. ஆதார் எண்ணுடன் மாணவர் பதிவு என்று இருந்தால் முறைகேடு செய்ய வழியில்லை.


முக்கிய வீடியோ