உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக விரைவு பஸ்கள் இனி பம்பை வரை செல்லும்: நவ., 15 முதல் - ஜன., 18 வரை ஏற்பாடு

தமிழக விரைவு பஸ்கள் இனி பம்பை வரை செல்லும்: நவ., 15 முதல் - ஜன., 18 வரை ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : சபரிமலை சீசனையொட்டி தமிழகத்தில் இருந்து அரசு விரைவு பஸ்கள் பம்பை வரை செல்ல இந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை வரை கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழக பக்தர்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆந்திரா, கர்நாடக பக்தர்களும் பலர் தமிழகம் வந்து செல்கின்றனர். இதனால் தமிழகத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சபரிமலை சீசன் காலத்தில் அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இவ்வாறு செல்லும் பஸ்கள் நிலக்கல் என்ற இடம் வரையே செல்லும். அங்கிருந்து பம்பை வரை 18 கி.மீ., தொலைவுக்கு கேரள அரசு பஸ்களில் செல்ல வேண்டும். அதிகளவு பக்தர்கள் செல்வதால் பஸ்கள் மாறிச் செல்வதில் சிரமம் இருந்தது. கடந்தாண்டு வரை இந்நிலை இருந்தது.இந்தாண்டு பம்பை வரை தமிழக அரசு விரைவு போக்குவரத்து பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்பாட்டில் பம்பை வரை பஸ்களை இயக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன் கூறியுள்ளதாவது: மதுரையில் இருந்து நாளை மறுநாள் (நவ.15) முதல் 2025, ஜன.18 வரை தினமும் அதிநவீன மிதவை பஸ் (அல்ட்ரா டீலக்ஸ்) இயக்கப்பட உள்ளது. தினமும் இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு தேனி வழியாக பம்பைக்கு இயக்கப்படும். சபரிமலை தேவஸ்தான அறிவிப்பின்படி டிச.27 முதல் டிச.30 மாலை 5:00 மணி வரை கோவில் நடை சாத்தப்பட உள்ளது. எனவே அந்நாட்களில் மட்டும் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட மாட்டாது. இந்த சிறப்பு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக 'ஆன்லைன்' மூலமாக www.tnstc.in மற்றும் TNSTC யின் அதிகார பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பஸ்களின் விபரம் உள்ளிட்ட தகவல்களுக்கு 94450-14426 ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

hari
நவ 13, 2024 13:56

அவருக்கு 200 ரூபாய் அரசு சார்பாக கிடைக்கும்


ஆரூர் ரங்
நவ 13, 2024 11:23

நம்மூர் பக்கம் பிரேக் டவுன் ஆனாலே ஸ்பேர் வண்டி வர மணிக்கணக்கில் ஆகும். மும்பை வழியில்?


K.V.Prem Kumar
நவ 13, 2024 10:55

தயவுசெய்து இவர்களை நம்பி SETCயில் ஏறி விடாதீர்கள்...சென்ற ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் டு கன்னியாகுமரி பஸ்ஸில் சேலம் வர ரூபாய் 310 கட்டி டிக்கெட் எடுத்தேன்.. உள்ளே நாறுகிறது. சீட்டின் புஷ் பேக் லீவர் ஒடிந்து கண்டு பிடித்து உட்கார பஸ் ஓசூர் பஸ் ஸ்டாண்ட் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் என்று சாதா பஸ் போல் லோக்கல் பயணம் ஆகி சேலம் வருவதற்குள் படாதபாடு பட்டு விட்டார்கள் பயணிகள்...அதே சமயத்தில் கர்நாடக அரசு ராஜஹம்ஸா பஸ்ஸில் பயணித்தது அற்புதம்.. .உள்ளே அவ்வளவு சுத்தம்... பஸ் மிக அற்புதமாக பராமரிப்பில் இருப்பது மிகவும் ஆச்சர்யம்... டிக்கெட் விலை ரூபாய் 270 மட்டுமே... பை பாஸ் ரைடர்... தயவுசெய்து SETC என்ற குப்பை லாரிகளில் ஏறி விடாதீர்கள் நண்பர்களே... நொந்து போய் விடுவீர்கள்...


Ram pollachi
நவ 13, 2024 10:54

வண்டியை சன்னிதான படிக்கட்டு வரை விட்டால் இன்னும் வசதியாக இருக்கும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 09:20

ஸ்டாலின் அரசின் சிறந்த பாராட்டத்தக்க நடவடிக்கை. ஐயப்ப பக்தர்கள் சார்பில் நன்றி.


hari
நவ 13, 2024 14:34

அப்படியே சென்னை டாக்டர் கத்தி குத்துகும் பாராட்டுகள்