உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் கைது; நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?: உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக மீனவர்கள் கைது; நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?: உயர் நீதிமன்றம் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடந்து வரும் நிலையில். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், கடந்த ஜனவரி 22ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

மத்திய அரசு விளக்கம்

இந்த வழக்கு இன்று(பிப்.,05) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‛‛தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் வேண்டும் எனக் கோரப்பட்டது'' என மத்திய அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கூறியதாவது: கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அதை தடுக்க ஏன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பின்னர், இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய , மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு ஓத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ