உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாக்., சிறையில் தமிழக மீனவர்கள்: மீட்க மத்திய அரசு நடவடிக்கை

பாக்., சிறையில் தமிழக மீனவர்கள்: மீட்க மத்திய அரசு நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பாகிஸ்தான் சிறையில் உள்ள ஏழு தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர், 20ல் முதல்வர் ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்திற்கு பதில் அளித்து, ஜெய்சங்கர் அனுப்பியுள்ள கடிதம்:

பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும், அவர்களின் இரண்டு படகுகளையும் விடுவிக்க, அந்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மீனவர்களுக்கு துாதரக அனுமதி கேட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாகிஸ்தான் அதிகாரிகள் அதை வழங்கவில்லை.இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துாதரகம் வாயிலாக, மீனவர்களுக்கு துாதரக அனுமதி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை, அவர்களது பாதுகாப்பு மற்றும் உடல் நலனை உறுதி செய்ய வேண்டும் எனவும், பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்திய துாதரகம் தொடர்ந்து கண்காணித்து, மீனவர்களை விடுவிப்பதற்கும், தாயகம் அழைத்து வருவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Barakat Ali
டிச 13, 2024 08:52

பாக்?? தமிழகம்?? ரெண்டுமே ஒண்ணுக்குள்ள ஒண்ணாச்சே ??


அப்பாவி
டிச 13, 2024 08:22

அடுத்த பிரதமராக இப்பவே காய் உருட்ட ஆரம்பிக்கணும்.


N Sasikumar Yadhav
டிச 13, 2024 11:07

உங்க எஜமான் எதுவும் தெரியாத புரியாத திருட்டு திராவிட மாடல் தலைவருக்கே பிரதமரு ஆசை வரும்போது உலகத்தை அறிந்த வெளியுறவு அமைச்சராக இருக்கும் பக்கா தமிழரான மாண்புமிகு ஜெய்சங்கர் அவர் பிரதமாரானால் நாடு செழிக்கும்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 13, 2024 12:24

வாரிசுகளிடையே சண்டை ... குடும்பத்தினரில் தில்லியில் யார் லாபி செய்வது என்கிற போட்டி ..... தகுதியுள்ள மூத்தவர்களைப் புறக்கணித்துவிட்டு வாரிசு என்கிற ஒரே காரணத்தால் உரிமை .....


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 13, 2024 13:34

இந்தக்குடும்பங்களை ஆதரிக்கும் கொத்தடிமைகளுக்கு இப்படித்தான் பேசத்தோணும் .....


R S BALA
டிச 13, 2024 07:57

தமிழக மீனவர்கள் பாகிஸ்தான்ல கைதா?


Padmasridharan
டிச 13, 2024 04:22

இந்திய மீனவர்கள் ஏன் & எதற்கு பாகிஸ்தான் போனார்கள் என்று இந்த செய்தியில் காணோமே ?


Raj Kamal
டிச 13, 2024 11:09

மீனவர்கள் மீன் பிடிக்க அன்றி வேறெதிர்க்கு செல்ல போகிறார்கள்? குமரி, முட்டம் மீனவர்கள் தனியாகவோ அல்லது கேரள மீனவர்களுடன் சேர்ந்தோ கடலில் தங்கி மீன்பிடிக்க வெகு தொலைவு சென்று வருவது வழக்கம். அப்படி செல்லும் போது சில நேரம் சர்வதேச எல்லைகளை கடக்க நேரிடும். அச்சமையங்களில் அந்நிய நாட்டு கடற்படை இங்கு இலங்கையில் செய்வது போல கைது செய்கின்றன. பாகிஸ்தான் எதிரி நாடு, எனவே அவர்கள் செய்வதையாவது புரிந்து கொள்ளலலாம். ஆனால் இந்தியாவின் உதவியையும் பெற்றுக்கொண்டு நம் இந்திய மீனவர்களயே கைது செய்வது மிகுந்த கண்டிப்பிற்குரியது.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 13, 2024 13:35

தமிழ் பேசும் மீனவர்களை அரபு நாடுகளிலும் பார்க்க முடியும் ..........


சமீபத்திய செய்தி