உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கலுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் தான்; ரொக்கம் இல்லை!

பொங்கலுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் தான்; ரொக்கம் இல்லை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு ஆகியவை வழங்குவதற்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் வரும் ஜன.,15 பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை ரேசன் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்கப்படும். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பொங்கல் பரிசுடன் ரொக்கம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n1zx2yz0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், 2 கோடியே 22 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு வழங்குவதற்காக ரூ. 248 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், ரொக்கம் தருவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Santhakumar Srinivasalu
டிச 31, 2025 22:51

அடப்போங்கடா ரொக்கம் இல்லைன்னா தொகுப்பு செல்லாது.!


Haja Kuthubdeen
டிச 31, 2025 22:19

இந்த ஒரு கிலோ பச்சரிசி ஜீனிகூடவா மக்கள் காசு கொடுத்து வாங்க முடியாது!!!!!


Pandi Muni
டிச 31, 2025 22:09

காசு கொடுத்தாலும் 2026 தி.மு.க கூடாரம் காலிதாங்கிறது தெரியாமலா இருக்கும்


Raghavan
டிச 31, 2025 22:03

உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் பொங்கல் பரிசு பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. கொடுத்தாலும் தோல்விதான் கொடுக்காவிட்டாலும் தோல்வி தான் அதற்க்கு கொடுக்காமலேயே தோல்வியை சந்திக்ககலாம் என்று முடிவு போல் தெரிகிறது.


Thravisham
டிச 31, 2025 21:15

ரொக்கமெல்லாம் பல நாடுகளில் பதுக்கியாச்சு. ஒங்களுக்கு வெறும் புழுத்து போன பச்சரிசி மட்டுந்தான்.


தமிழ்வேள்
டிச 31, 2025 21:14

இனிமேல் காசு வேண்டும் என்றால் திமுகவின் கொள்ளையடித்து பதுங்கியுள்ள பணத்திலிருந்து உருவினால் தான் உண்டு...டுமீலக அரசு கஜானா காலி.....


Venugopal S
டிச 31, 2025 21:11

சரியான முடிவு, வேண்டாத மருமகள் உட்கார்ந்தாலும் குற்றம் நின்றாலும் குற்றம் என்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை!


theruvasagan
டிச 31, 2025 22:20

நாலு வருடமாக கொடுத்தது எல்லாம் தப்பான முடிவா. தப்பு என்று தெரிய நாலு வருடம் ஆகியதா.


கௌதம்
டிச 31, 2025 21:06

அய்யகோ... என்ன இது நம்பர் 1 மாநிலத்திற்க்கு வந்த சோதனை?


Chandru
டிச 31, 2025 20:52

தமிழக மக்களுக்கு வெட்கம் இல்லை . இதனையும் அரசு கொடுத்துதான் வாங்க வேண்டுமா ????


Modisha
டிச 31, 2025 20:44

ரொக்கம் இல்லை - அரசிடம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை