உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை; தமிழக அரசு அறிவிப்பு

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை; தமிழக அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தனி நபரோ அல்லது கூட்டமாகவோ ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்'' என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வருகைக்காக, துறையூர் நகரப்பகுதியில், ஏராளமானோர், திரண்டிருந்தபோது, நேற்றிரவு 7:00 மணியளவில், அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ஏற்கனவே, பிரசார கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்த நிலையில், நேற்று, மீண்டும் ஆம்புலன்ஸ் வந்ததால், அ.தி.மு.க.,வினர், அந்த வாகனத்தை வழி மறித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fu91fwao&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உள்ளே, நோயாளி யாரும் இல்லாததால், ஆத்திரமடைந்தனர். வேண்டுமென்றே பழனிசாமி கூட்டத்துக்குள் ஆம்புலன்சை ஓட்டி வருவதாக கூறி, டிரைவருடன் தகராறு செய்தனர். விபத்து நடந்ததாக தகவல் வந்ததால், ஆம்புலன்சை கொண்டு செல்வதாக, டிரைவர் தெரிவித்தார். உடனே, போலீசார், அ.தி.மு.க., வினரை விலக்கி விட்டு, வந்த வழியிலேயே ஆம்புலன்சை திருப்பி அனுப்பினர்.இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) ''தனி நபரோ அல்லது கூட்டமாகவோ ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்'' என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.மேலும், 'ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்புலன்ஸில் ஏற்படும் சேதாரங்களுக்கான தொகையையும் நீதிமன்றத்தில் செலுத்த நேரிடும்' என எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Padmasridharan
ஆக 26, 2025 12:29

வேண்டுமென்ற செய்த சதியா. விபத்து ஏற்பட்ட இடமெது, யார் விபத்துக்குள்ளானார்கள். அவரை எந்த மருத்துவமனையில், வேறெந்த வழியில் கொண்டு போயி சேர்த்தனர்.


இராம தாசன்
ஆக 25, 2025 18:58

ஏன் 10 வருடம்.. தூக்கு தண்டனை கொடுக்க வேண்டியது தானே?


Kasimani Baskaran
ஆக 25, 2025 17:32

ஊர்வலத்துக்குள் ஆம்புலன்ஸ் விடுவது உளுத்துப்போன திராவிட மாடல்.. அதே சமயம் ஆத்தா தீம்க்காவினரும் லேசுப்பட்டவர்கள் இல்லை..


Kjp
ஆக 25, 2025 17:30

அணையப் போகும் விளக்கு சுடர் விட்டு பிரகாசித்து ஆடி அடங்கும். 2026தேர்தலில் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.


Ram pollachi
ஆக 25, 2025 17:17

பல தனியார் ஆம்புலன்ஸ்கள் எல்லாம் பழைய இரும்பு கடைக்கு போக வேண்டியவை, டாக்குமெண்ட் எதுவுமே இல்லாத பிண வண்டிகள்.... ஸ்டேச்சர்கள் மற்றும் குளிர் சாதனபெட்டி எல்லாம் சாக்கடை மேல் இருக்கும் வண்டிகள் எல்லாம் பொது மக்களுக்கு இடையூராக ரோட்டில் நிறுத்தி இருப்பார்கள்...


HoneyBee
ஆக 25, 2025 17:11

ஆம்புலன்ஸ்ஸை மக்கள் சேவைக்கு மட்டுமே பயன் படுத்தினால் இந்த பிரச்சினை வராது. கூட்டத்தை கலைக்க வேண்டும் என்று நினைத்து அதை தவறாக பயன்படுத்தினால் இப்படி தான் நடக்கும்


Palanisamy Sekar
ஆக 25, 2025 17:04

இதே சட்டம் இப்படியே இருக்கட்டும். அடுத்து திமுகதான் எதிர்க்கட்சியாக வரும்போது இதே போல ஆம்புலன்சுகளை அவர்கள் கூட்டம்போடும்போது அனுப்பி வைப்போம். அப்போ எதிர்ப்பவர்களுக்கு இதே சட்டம் செம்ம ஆட்டம்போடும். எதிரியின் ஆயுதத்தை வைத்தே திருப்பி தாக்குவது போல செய்திடுவோம்.


Ram pollachi
ஆக 25, 2025 17:03

ஒரு நல்ல நோக்கத்திற்க்காக ஆரம்பிக்கபட்ட சேவை இன்று பணம் கொட்டும் வியாபாரமாகிவிட்டது. அரசு அவசர ஊர்தியை விட தனியார் ஊர்திகளே அதிகம்... இதில் சர்வ கட்சி, மதம் சார்ந்த வாகனங்கள் உண்டு... ரோட்டில் விபத்து நடந்தால் முதலில் பார்ப்பவர்கள் 108யை அழைப்பார்கள், இரண்டாம் நபர் தான் சார்ந்த கட்சி வண்டியை வர வைப்பார், மற்றோருவர் மதம் சார்ந்த அமைப்பின் வண்டி அழைப்பார்.... ஆக ஒரு விபத்திற்கு பல வண்டிகள் பற்பல இடங்களில் இருந்து அபாய ஒலியை அலற விட்டு வருவதை பார்க்கும் ஜனங்கள் இறைவனை வணங்கி தன் நெஞ்சில் கைவைத்து ஏன் இப்படி வண்டியை ஓட்டுகிறார்கள் என்று நொந்து கொள்வார்கள்.... இன்னும் சிலர் முதலில் வரும் தனியார் வண்டியில் ஏற மாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள் காரணம் சொல்ல வேண்டாம். மொத்தத்தில் அவசர ஊர்திக்கு கடிவாளம் போட வேண்டும்.


V Venkatachalam
ஆக 25, 2025 16:06

ஆம்புலன்சில் பணம் கடந்த சட்டம் ரெடி.ஆம்புலன்சில் ஒரு அனாதை உடலை வைத்து கட்டி அத்துடன் பணக்கட்டையும் வைத்து கட்டி அனுப்பினால் எந்த பயலும் கேட்க முடியாது. ஏன்னா 10 வருஷம் ஜெயில். அப்புடி போடு அருவாளை..


தத்வமசி
ஆக 25, 2025 16:06

அப்ப நாளை திராவிடக் குஞ்சுகள், சிறுத்தைக் குட்டிகள், விசில் அடித்த்தான் குஞ்சுகள் எல்லாம் மாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். வேண்டுமென்றே எதிர்கட்சிக் கூட்டத்தில் ஆம்புலன்சை அனுப்பி வைத்து, தடுத்தால் வழக்கு தொடர வைக்கலாம். போன் வந்ததற்கான ஆதாரம் ஏதாவது காண்பித்தார்களா ? தேர்தல் நேரத்தில் இந்த அம்புலன்ஸ் எவ்வளவு பேருக்கு பட்வாடா செய்ய பயன்படுகிறது. சட்டம் இயற்றுங்கள். உங்களுக்கு தானே நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை